மேற்கு மலைத் தொடர்ச்சியிலுள்ள காட்டினில் "தோதோ" என்ற பெயரில் ஒர் ஆமையும், "மொமு" என்ற பெயரில் ஓர் முயலும் இவர்களுடன் "கீகீ" என்ற காக்கையும் நண்பர்களாக(FRIENDS) வசித்து வந்தன.
தினமும் தூங்கி எழுவதிலிருந்து இரவு வரை ஒன்றாகவே இருந்தனர். கீகீயும், மொமுவும் காலையில் சூரிய உதயத்தின்(SUNRISE) பொழுதே எழுந்து விடுவர், ஆனால் தோதோ தினமும் இரவு தாமதமாகத் தூங்கச் சென்று காலையில் தாமதமாகவே(LATE) எழும்.
இதனால் அதன் தினப் பணிகளான "பல் துலக்கவுது (Brushing), குளிப்பது(Bathing), சாப்பிடுவது(Eating)" போன்றவையும் தாமதமாகும், மேலும் அசதியாகவே(TIRED) தோதோ எப்பொழுதும் இருக்கும்.
இதனால் மட்டுமின்றி முன்னோர் காலத்தில் தோதொவின் தாத்தா,பாட்டி மற்றும் மொமுவின் தாத்தா, பாட்டியும் கலந்து கொண்ட "வேகமாகச் செல்லும் போட்டியில்" தோதொவின் தாத்தா, பாட்டி தோற்றுப்போயினர். இதனாலும் மொமு எப்பொழுதும் தோதொவினை, "தோத்தாங்குளி.. தோத்தாங்குளி.." என்று கிண்டல் செய்து கொண்டேயிருக்கும்.
இதனால் தோதோவின் மனம் வருத்தத்தில்(SADNESS) இருந்தது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த கீகீ-க்கு ஓர் புத்திசாலித்தனமான வழி தோன்றியது.
அது மொமுவையும், தோதொவையும் கூப்பிட்டு வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி மீண்டும்(AGAIN) "வேகமாகச் செல்லும் போட்டி" நடத்துவோம் என்று கூறியது.
மொமுவானது, எதற்குப் போட்டி எப்படியும் நான்தானே வெல்லப்போகின்றேன் என்று கூறியது.
அதற்கு கீகீ, பந்தயத்தில் வென்று விட்டுப் பேசவும் என்று கூறியது.
மொமு அமைதியாகச் சென்றது.
நாம் எப்படி மொமுவை வெல்ல முடியும் என்ற கவலையில் தோதொவிற்கு அழுகையை வந்துவிட்டது. பிறகு அது கீகீயிடம் நீ புத்திசாலி எப்படி என்னை வெல்ல வைக்கப் போகின்றாய் என்று கேட்டது.
கீகீயானது, போட்டியின் தலைப்பு என்ன என்று தோதொவிடம் கேட்டது?
அதற்கு தோதோ "வேகமாகச் செல்லும் போட்டி" என்றது.
கீகீ, அப்புறம் என்ன கவலை! விட்டு விடு என்றது.
தோதோ, என்னால் எப்படி வெல்ல முடியும் அவன் தாவித் தாவிச்(Hop) செல்வானே என்றது..
கீகீ சிரித்துக்கொண்டே, நாமும் தள்ளித் தள்ளிச் செல்வோமே என்றது..
தோதொவிற்கோ புரியவில்லை என்றது..
கீகீ சிரித்துக் கொண்டே கடந்த வாரம் காட்டுக்குள் சுற்றுலா(TOUR) வந்த சிறுமி "தன்ஸ்" விட்டுச் சென்ற "ஸ்கேட்டிங்" பலகையைக் காட்டியது..
தோதொவிற்கு புரிந்தது..
போட்டியன்று, மொமு சுறுசுறுப்பாக(ACTIVE) வந்தது.. தோதொவும் மகிழ்ச்சியுடன்(HAPPY) வந்தது..
போட்டி ஆரம்பித்தவுடன், மொமூ தாவித் தாவிச் சென்றது.. ஆனால் தோதோ ஸ்கேட்டிங் பலகையின் மீது விரைவாகச் சென்று இலக்கை(TARGET) அடைந்து வென்றது..
மொமு வெட்கித் தலை குனிந்தது, அது முதல் தோதொவினை தோத்தாங்குளீ என்று கூப்பிடுவதை நிறுத்தியது.
நீதி என்ன??
இந்த கதையிலிருந்து நீங்கள் புரிந்துகொண்டது என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக