செவ்வாய், 16 ஜூன், 2020

என்ன செய்யவேண்டும் தமிழகம்



இன்றைய சூழ்நிலையில் கொரானா-19 நோயின் காரணமாக ஒட்டுமொத்த உலகமே என்ன செய்வதன்று அறியாமல் திகைத்து நிற்கின்றது. சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த நோய் தாக்குதலானது, 2020 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில்  சீனாவின் தொழிற்சாலைகளை முடக்கியது, மற்ற தொழிற்சாலைகள் முடங்குவதால் உடனடியாக எந்த பாதிப்பும் இல்லாத நிலையில், சீன மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளின் முடக்கத்தால் உலகம் ஆட்டம் காண ஆரம்பித்தது. முதியோர்கள், நீண்ட கால நோய் தாக்கம் கொண்டோர்கள் மருந்து தட்டுப்பாட்டினால் அவதியுற்றனர்.

இந்தியாவில் மருந்து சார்ந்த தொழிற்சாலைகள் ஏராளமாக இருந்தபொழுதிலும், மருந்து உற்பத்திக்குத் தேவையான 70%-க்கும் அதிகமான மருந்து மூலப்பொருட்களை(ஏபிஐ API- Active Pharma Ingredients) சீனாவிலிருந்தே இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். குறிப்பாக 58க்கும் மேற்பட்ட ஏபிஐகளுக்கு சீனாவையை சார்ந்து இருந்தோம். சீனாவில் கொரானா-19 நோய் தாக்கத்தின் மையப்புள்ளியான ஹூபே, சான்டாங் மகாணங்களிலுள்ள நிறுவனங்கள் இந்திய தேவையின் 25%-க்கும் அதிகமான மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. சீன ஊரடங்கு மார்ச் மாதத்திற்குள்ளாகவே கட்டுப்படுத்தப்பட்டதால் இந்திய மருந்து நிறுவனங்கள் மட்டுமின்றி உலகமே பெருமூச்சு விட்டது.

மருந்துப் பொருட்கள் மட்டுமின்றி, மருத்துவ உபகரணங்கள்(Medical Devices), சுய பாதுகாப்பு கருவிகள்(Personnel Protective Equipment) ஆகியனவற்றிற்கும் உலகம் சீனாவேயேப் பெரிதும் சார்ந்திருக்கிறது.


இந்திய மருந்து துறை:

இந்திய மருந்துத் தொழிற்துறையானது  பல்வேறு தடுப்பூசிகளுக்கான உலகளாவிய தேவையில் 50 சதவீதத்திற்கும் மேலான, பொது மருந்து தேவையில் உலகளாவிய அளவில் 20%க்கும் அதிகமான, அமெரிக்காவிலன் பொது மருந்து தேவையில் 40 சதவீதக்கும் மேலான, இங்கிலாந்தின் அனைத்து மருந்து தேவைகளில் 25 சதவீத பங்களிப்பினை வழங்குகிறது. இந்தியா உலகின் மருந்து மற்றும் பயோடெக் பணியாளர்களில் இரண்டாவது பெரிய எண்ணிக்கையை கொண்டுள்ளது. இந்தியாவில் மருந்துத் துறை உற்பத்தியின் மதிப்பு 2017 ஆம் ஆண்டில் 33 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்தியாவின் உள்நாட்டு மருந்து சந்தை வருவாய் 2019 ஆம் ஆண்டில் ரூ .1,40,000 கோடியை (20.03 பில்லியன் அமெரிக்க டாலர்) எட்டியது, 2018 ஆம் ஆண்டில் ரூ .1,29,015 கோடியை (18.12 பில்லியன் அமெரிக்க டாலர்) எட்டியது, ரூ. 2017 இல் 1,16,389 கோடியாக (அமெரிக்க $ 17.87 பில்லியன்) இருந்தது.  இது ஆண்டுக்கு 9 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்கின்றது. 200க்கும் அதிகமான நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்திய மருத்துவ சாதனங்களின் மதிப்பு 35000கோடி (அமெரிக்க $ 5 பில்லியன்) ஆகும்.

உலகலாவிய தடுப்பூசி மருந்துகளைப் பொறுத்தவரையில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் ஹைதராபாத்தில் உற்பத்தியாகிறது.

இந்திய அரசாங்கம் தனது ஜிடிபி-யில்(GDP) 1.5% மருத்துவத்திற்கு செலவிடுகின்றது.



சுயபாதுகாப்பு உடை/கருவி:
2019 டிசம்பரில் இந்திய அரசாங்க அதிகாரிகள், இராணுவ தடத்திற்கான சிறப்பு கூட்டத்தில் "20000கோடி மதிப்பிலானது சுயபாதுகாப்பு உடைகள்/கருவிகளின்(PPE) சந்தையானது" எனவே கோவை மற்றும் திருப்பூர் நகர தொழிலதிபர்களிடம் அதில் முதலீட்டினை செய்யுங்கள் என்று அறிவுறித்தியிருந்தது. இந்திய கொரானா நோயின் காரணமாக ஊரடங்கை அறிமுகப்படுத்தும் முன் மருத்துவ சுயபாதுகாப்பு உடைகள்/கருவிகளைப்(PPE) பொருத்தவரையில் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்துகொண்டிருந்தது. இந்தியா கொரானா ஊரடங்கின் பொழுது சுயபாதுகாப்பு உடை/கருவி  உற்பத்தியில் உள்நாட்டிலே தன்னிறைவை அடையும் வண்ணம் முன்னேறிவருகின்றது.

பார்மா (Pharma) Vs பயோடெக் (Biotech) 
பார்மா மருந்துகள் இராசயனங்களை கொண்டு தயாரிக்கப்படுவது. இதற்கான காப்புரிமை 5 வருடங்களாகும்.

பயோடெக் மருந்துகள் உயிரிகளைக் (பாக்டீரியா, வைரஸ்)  வளர்த்து தயாரிக்கப்படுவது, இதற்கான காப்புரிமை 12 வருடங்களாகும். இது கடினமான உற்பத்தியும், அதிக உற்பத்தி செலவு மிக்கது.

தமிழக மருந்து துறை:

* திரு. எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது 1978ல் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை, ஆலத்தூரில் பார்மா பூங்கா அமைக்கப்பட்டு மருத்துவநிறுவனங்கள் ஈர்க்கப்பட்டன.

* திரு. கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபொழுது , 2000ல் பயோடெக் பூங்கா சென்னை தரமணியில் அமைக்கப்பட்டது.

இன்றையளவில் சுமார் 400 மருந்து சார்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. தமிழகத்திலிருந்து 4000கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது தேசிய அளவில் 3.4% ஆகும். ஆயினும் தமிழகத்தின் பயன்பாடு 8000கோடி மதிப்பிலான மருந்துப்பொருட்கள் ஆகும், ஆக இன்னும் 50% நாம் வெளியிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். இதனை அரசாங்கம் போர்கால நடவடிக்கை எடுத்து சுயசார்பினை அடையச் செய்யவேண்டும்.

2000களின் பிற்பகுதியிலிருந்து 2016 வரைக்கும் (ஜிஎஸ்டி அறிமுகம்)  இமாச்சலபிரதேசம், உத்திரகாண்ட் போன்ற நிறுவனங்கள் தமிழகத்திலிருக்கும் மருந்து நிறுவனங்களுக்கு பெரும் சலுகை அளித்து ஈர்த்துக்கொண்டன. தோராயமாக 100 நிறுவனங்கள் இடம்பெயர்ந்துவிட்டன. நமது ஆட்சியாளர்கள்/அதிகாரிகள் கவனிக்க விட்ட ஒரு செயலாகவே இதனை குறிஞ்சி பார்க்கின்றது, அவ்வாறு வெளியேறும் நிறுவனங்களை அழைத்து தென்மாவட்டங்களில் குறிப்பாக நாங்குநேரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் மேற்கு மாவட்டங்களான கோவை, ஓசூர் போன்ற இடங்களில் உங்கள் மருந்து நிறுவனங்களை அமைத்துகொண்டு வெளிமாநிலங்கள் தரும் சலுகைகளை இங்கு பெற்றுக்கொள்ளூங்கள் எனக் குறிப்பிட்டிருக்கலாம். முடிந்து போனதை பேசுவதால் யாதொரு பயனுமில்லை, ஆனால் விரைந்து செயல்பட்டு நமது மாநிலத்திற்கு தேவையான வளங்களை உறுதியாக பெற்றிடவேண்டும். மருந்து, மென்பொருள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் விரும்பும் தட்பவெப்ப சூழல் மேற்கூறிய நகரங்களுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Qn கோயிந்து: சிஸ்டம் சரியில்லப்பா... :)

குறிஞ்சி: வாகன உற்பத்தி, சுகாதாரம்/நலம் பேணல், சுற்றுலா போன்றவற்றில் தமிழகம் முன்னனியிலிருக்கிறது, இந்த கட்டுரையின் நோக்கம் நமது பலவீனங்களை சுட்டிக்காட்டுவதே... :)

இந்திய அளவில் குசராத்(35%), மகாராட்டிரம்(25%), தெலுங்கானா & ஆந்திரப்பிரதேசம்(15%), தமிழ்நாடு(3.4%), இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் பெரிய மருந்து உற்பத்தி சந்தையை வைத்திருக்கின்றன.

உணவு பதனீடுதல் துறை:
இன்றையளவில் அனைத்து தரப்பு மக்களும் தரப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை விரும்பு உண்கின்றனர். இந்திய அளவில் முறைப்படுத்தப்பட்ட சில்லறை வணிகம் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு ஆகும். ஆனால் உணவுப் பொருட்கள் நிறுவனங்கள் தமிழக அளவில் குறைந்த அளவிலேயே செயற்படுகின்றது. பெரும்பான்மையான இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை வணிகப் பொருட்களை விற்பனை/உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தமிழகத்தில் இல்லை. குறைந்தபட்சம் பெங்களூரிலிருந்து செயற்படும் நிறுவனங்களை தமிழகத்தின் வட மாவட்டங்களான ஒசூர், ஈரோடு, தர்மபுரி, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலியில் தொழிற்சாலைகளை நிறுவும் வண்ணம் ஈர்க்கவேண்டும்.

தமிழகம் நீண்ட நெடிய கடற்கரையை கொண்டது, எனவே கடல் சார்ந்த உணவுப்பொருட்கள் உற்பத்தி, பதனீடுதல் தொழிற்சாலைகளை பெரிதும் ஈர்த்து சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அமைக்கவேண்டும்.

பின்வரும் கல்வி / படிப்புகளில் தமிழக மாணவர்களின் திறமையை வளர்ப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.
OCEAN BIOTECHNOLOGY: கடல் சார்ந்த பொருட்களை பற்றிய உயிரியல் படிப்பு
FISHERY BIOTECHNOLOGY: மீன் சார்ந்த உயிரியல் படிப்பு

சில்லறை விற்பனை துறைகள்:
உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், வீட்டு மேலாணமை பொருட்கள் (விளக்கு, கழிப்பறை, தூய்மை பொருட்கள்)


சான்றுகள்
1. https://www.investindia.gov.in/sectors
2.  https://www.investindia.gov.in/siru/personal-protective-equipment-india-INR-7000-cr-industry-in-the-making
3. https://www.ibef.org/industry/fmcg.aspx

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக