நரிந்தர் சிங் கபனி "இழை ஒளியியல்"(Fibre Optics) துறையில் பணியாற்றியதற்காக அறியப்படும் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவர் 31 அக்டோபர் 1926ல் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், மொகா நகரில் பிறந்தார். டெராடூனில் பள்ளி கல்வியை படிக்கும்பொழுது 'ஒளி அலைகள் வலைந்தும் செல்லும்' என்ற எண்ணங்கள் அவரது மனதில் பதிந்தது. இதுவே அவரது வாழ்வின் பிற்பகுதியை பெரிதும் மாற்றியது. ஆக்ரா பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று சிறிது காலம் இந்திய ஆயுத தளவாடங்கள் உற்பத்தி நிறுவனத்தில்(IFSO) பணிபுரிந்தார். பின்பு 1952ல் இலண்டன் இம்பிரியல் கல்லூரிக்கு ஒளியியல்(Optics) துறையில் ஆராய்ச்சி உயர்கல்வி பயிலச் சென்றார்.
**இழை ஒளியியல் என்ற சொல் சிங் கபனியால் 1956 இல் உருவாக்கப்பட்டது.
**அவர் "இழை ஒளியியலின் தந்தை" என்றும் அழைக்கப்படுகிறார்.
**பார்ச்சூன் பத்திரிக்கையின் 'நூற்றாண்டின் தொழிலதிபர்கள்' இதழில் (1999-11-22) ஏழு "பாடப்படாத கதாநாயகர்களூள்" (Unsung Heroes) ஒருவராக அவர் பெயரிடப்பட்டார்.
** இழை ஒளியியல் துறையின் ஆய்வுகளூக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுகளின் அறிவிப்பு 2009ல் வெளிவந்தபொழுது, கபனியின் பெயர் இல்லாதது சர்ச்சைகளை எழுப்பியது.
2009ல் நீண்ட தொலைவு தரவுகளை எடுத்துச்செல்லும் வண்ணம் இழை ஒளியியல் துறையில் சாதனை புரிந்ததற்காக சார்லசு குன் காவோவிற்கு (Charles Kuen Kao) நோபல் பரிசு அறிவித்தபொழுது எழுந்த சர்ச்சைகளை, கபனி எளிதில் புறந்தள்ளினார்.
பல்வேறு ஆய்வு தாள்களை பதிப்பித்திருக்கிறார், நூற்றுக்கும் மேற்பட்ட காப்புரிமைகளை கொண்டிருக்கிறார். அவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபரும் கூட...
கபனி 1960ல் Optics Technology என்ற நிறுவனத்தினை துவங்கி பின்பு விற்றுவிடுகிறார், பிறகு Kaptron inc என்ற நிறுவனத்தினை துவங்கி அதனையும் விற்றுவிடுகிறார். தற்பொது K2 Optronics என்ற நிறுவனத்தினை நடத்திக்கொண்டிருக்கிறார். தற்பொது அவர் இந்திய குடியுரிமையை வைத்திருக்கவில்லை. அவர் நிறைய புரவலர் பணிகளில் ஈடுபட்டு தொண்டு செய்தும் வருகிறார்.
Qn கோயிந்து: ஜவகர்லால் நேரு இவரை இந்திய இராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு உதவ கேட்டுக்கொண்டார் என்றும் சொல்லுறாங்கப்பா...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக