முந்தைய ஆட்சியில் பொருளாதார ரீதியாக செயற்படுத்தப்பட்ட திட்டங்களில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றின் நடந்த குளறுபடிகள் மட்டுமின்றி அமெரிக்கா-சீனா பொருளாதார பிரச்சினையின் காரணமாக நிகழும் உலக மந்த நிலையும் இந்தியா பொருளாதாரத்தினை புரட்டிப்போட்டுவிட்டதாக களநிலவரம் தெரிவிக்கின்றது.
ஆகத்து 2019 வரை பாஜக தலைமையும் வெளிப்படையாக களநிலவரத்தினை ஒத்துக்கொள்ளாமால் எல்லோமே சுபம் என்றிருந்த வேளையில் ஆங்காங்கே தொழிலதிபர்களின் முனகல்கள் மட்டுமின்றி பங்குசந்தையும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தது ஆட்சியாளர்களை மெதுவாக அசைத்துப்பார்க்க துவங்கியது. அதன்விளைவாக செப்டம்பர் 2019ல் கார்ப்பரெட் வரி உலக அளவில் இந்தியாவிலே குறைவு என்று குறைத்தனர். அரசியல் களத்திலும் பாஜக மகாராட்டிரம் மற்றும் ஹரியானா போன்ற தொழிற்சாலை மிகுந்த மாநிலங்களில் பெரும்பான்மையை பிடிக்கத்தவறியதை ஆட்சியாளர்கள் உணர்ந்திருப்பர் என்று நம்புகின்றோம். இந்தியாவின் பெண் நிதியமைச்சர் புயல் போல வேலை செய்தாலும் களநிலவரம் இன்னும் சாதகமாக மாறவில்லை என்பதை 2019 அக்டோபர் மாத புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புள்ளிவிவரங்கள் பஞ்சமி நில பத்திரமோ இல்லை மிசா கைது நகல் ரசீது போன்றதோ அல்ல... அத்தனையும் கள நிலவரங்கள், இந்திய அரசின் புள்ளிவிவரங்கள், சர்வதேச தரநிறுவனங்களின் தரவுகள், ஆக அத்தனையும் உண்மை...
Qn கோயீந்து: இந்த கட்டுரையே எழுதியதால் நீரும் உமக்கு அடிக்கப்படும் காவி நிறத்துக்கு மாட்டமாட்டீரும்... :)

நாட்டின் பொருளாதாரத்தினை அளவீடும் கருவியாக வாகனத்துறைகளின் விற்பனையை எடுத்துக்கொள்வார்கள், அந்தவகையினில் இந்திய வாகனச்சந்தை கடும் நெருக்கடியில் உள்ளது. இதற்கு பிஎஸ்6 தர அளவீடு, வாகன ஏற்றுமதி சரிவுடன் இந்திய பொருளாதார மந்தநிலையும் காரணமே.
உற்பத்தி சுட்டெண் சரிவு, தொழிற்சாலைகளின் நிலவரத்தினை தோலுரிக்கிறது.
ஜிஎஸ்டி வரி அமலுக்குபிறகு, சேவைத்துறை சுட்டெண் தொடர்ந்து சரிவிலுள்ளது.
இந்திய வீடு விற்பனை கடந்த சிலவருடங்களில் சரிவிலுள்ளது. இந்திய அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் இத்துறையை முன்னோக்கி எடுத்துச்செல்லுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு வேலைவாய்ப்பின்மை உச்சத்தினை தொடுகின்றது.
செப்டம்பர் மாதத்தில் நிதியமைச்சர் அறிவித்த கார்ப்பரேட் வரி குறைப்பினால் பங்குசந்தை தொடர்ந்து உச்சத்தினை அடைந்தாலும், அது நாட்டின் களநிலவரத்தினை காட்டுவதாக அமையாது என்பதே இன்றைய யதார்த்தம்.

சமீபத்திய மாநில தேர்தல் முடிவுகள் ஆளும் ஆட்சியாளர்களுக்கு உண்மையை உணர்த்தியிருக்கும் என்று நம்புகின்றோம். விரைவில் பொருளாதாரத்தினை மீட்காவிட்டால் வீட்டிற்கு மக்களால் அனுப்பபடுவீர்கள்...
தரவுகள்: இந்திய ஆங்கில பத்திரிக்கைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக