வேகச்சீட்டு RFID ஸ்டிக்கரை வாங்கி உங்களது வாகனத்தின் முன்புறமுள்ள கண்ணாடியின் மீது ஒட்டிவீட்டிர்களா?, இந்தியாவில் வரும் 2019 டிசம்பர் மாத ஆரம்பத்திலிருந்து அணைத்து சுங்கச்சாவடி கட்டணங்களும் இந்த வேகச்சீட்டின் மூலமே பெறப்படும், அப்படி நீங்கள் இந்த கட்டமைப்பினுள் இணையாவிட்டால் உங்களது சுங்கச்சாவடி கட்டணங்கள் இருமடங்கு ஆகும்.
![]() |
Image credit: Internet |
வேகச்சீட்டினை ஒட்டுவது மட்டுமின்றி அதற்கான முன் கட்டணங்களையும், அலைபேசி கட்டணங்களைப் போன்று ப்ரீபெய்டு முறையில் தேர்வு செய்துகொள்ளலாம்.
வேகச்சீட்டு என்பது வாகனங்களுக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு மின்னணு கட்டண வசூல் முறையாகும், இந்த கட்டமைப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) இயக்கப்படுகிறது. இது இந்திய தேசிய சாலைகளிலுள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணங்களை, வாகனஒட்டுனரிடமிருந்து முன்கட்டண அல்லது சேமிப்புக் கணக்கிலிருந்து நேரடியாக கட்டணங்களை செலுத்துவதற்கு ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த சீட்டு வாகனத்தின் முன்புறமுள்ள வளித்திரையின் மீது ஒட்டப்படுகின்றது, இதன்மூலம் வாகனங்களை பரிவர்த்தனைகளுக்காக சுங்கச்சாவடிகளில் நிறுத்தாமல் ஓட்ட உதவுகிறது. இந்த வேகச்சீட்டுகளை அதிகாரப்பூர்வ வழங்குநர்களிடமிருந்தோ அல்லது வங்கிகளிடமிருந்தோ மற்றும் ஆயில் நிறுவனங்களின் விற்பனைமையங்களிலிருந்தும் வாங்கலாம். மேலும் இது ஒரு முன்பண கணக்கில் இணைக்கப்பட்டிருந்தால், மீண்டும் பணம் நிரப்புவது தேவைக்கேற்ப இருக்கலாம். NHAI இன் படி, வேகச்சீட்டு காலவரையின்றி செல்லுபடியாகும். FASTag இன் பயன்பாட்டை ஊக்குவிக்க 2.5% கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்பட்டன. சில சுங்கச்சாவடிகளில் அர்ப்பணிக்கப்பட்ட பாதைகள் FASTag க்காக கட்டப்பட்டுள்ளன.
![]() |
Image credit: Internet |
இந்த கட்டமைப்பு ஒரு முன்னோடி திட்டமாக 2014இல் அகமதாபாத் மற்றும் மும்பைக்கு இடையிலான தங்க நாற்கர சாலையின் மீது அமைக்கப்பட்டது.
8 நவம்பர் 2017 அன்று, டிசம்பர் 2017 க்குப் பிறகு இந்தியாவில் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் வேகச்சீட்டு ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டது.
இதனை சுங்கச்சாவடிகளிலோ, வங்கிகள் (எஸ்பிஐ, ஹெடிஎப்சி, ஐசிஐசிஐ, அக்சிஸ், பேடிஎம், ஏர்டெல் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி) மற்றும் அமேசான் தளத்திலிருந்தோ வாங்கலாம், உங்களைப் பற்றிய தரவுகள் ஆதார், வாகனச்சான்றிதல் நகல்கள் போன்றவை பதிவுசெய்யப்படவேண்டியிருக்கும். வங்கிகளிலிருந்து பெறப்படும்பொழுது எளிதாக மீண்டும் கட்டண வசதிகளை தேர்வு செய்துகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக