சந்திரயான் 2 ஆனது வெற்றியுடன் கூடிய தோல்வியே ஆகும். சில நாட்களாக எங்கு திரும்பினாலும் சந்திரயான் பற்றிய செய்திகளைத்தான் இந்திய ஊடகங்களில் காணமுடிகிறது..
இந்தியா விண்வெளி தொழில்நுட்பத்தில் பெரும்பாய்ச்சல் காட்டினாலும் விண்வெளி அறிவியலில் இப்பொழுதுதான் நடைபயில துவங்குகிறது.
இஸ்ரோ மட்டுமின்றி, இஸ்ரோவின் தலைமையில் 620சொச்சம் நிறுவனங்களின் பங்களிப்பு சந்திரயான் -2 ல் உள்ளது, 500க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் பங்களித்துள்ளது.
இந்த தொடரினை இந்திய விண்வெளி ஆய்வாளர்களுக்கு சமர்பிக்கின்றோம்.
பொருளடக்கம்
- 1இஸ்ரோ வரலாறு
- 2சந்திரயான் 1
- 3சந்திரயான் 2
- 4 சந்திரயான் 3
5 ஏவூர்தி - தாங்குசுமை - ஜிஎஸ்எல்வி ஏவூர்தி -
6 சுற்றுப்பாதை
7 சான்றுகள்
இஸ்ரோ வரலாறு
1962 பிப்ரவரி 16ல் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய குழு(INCOSPAR), தென்கோடி முனையில் திருவனந்தபுரம் நகருக்கு வெளியே தும்பா என்ற கிராமத்திலுள்ள "புனித அன்னை மேரி மேக்தலீன் சர்ச்" வளாகத்தில் மிகவும் எளிமையாக அணு சக்தி துறையினரால் (DAE) துவக்கப்பட்டது. துவக்கத்தில் டாட்டா நிறுவனமும் இதன் பங்குதாரராக இருந்தது.
Qn கோயிந்து: அப்போ நேருதானே இந்தியாவின் பிரதமமந்திரி!
1963ல் இரஷ்யா மற்றும் பிரான்சிலிருந்து தருவிக்கப்பட்ட ஒலி ராக்கெட் இங்கிருந்து ஏவப்பட்டது(Sounding Rockets). உலகம் முழுவதும் ஆராய்ச்சி பணிகளுக்காகவும் குறைந்த செலவில் விண்வெளி ஆய்வு நடத்த இன்றளவும் இந்த வகையான ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றது.
1967 ஜனவரி 1 அன்று அகமதாபாத்தில் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு பூமி நிலையம் நிறுவப்பட்டது.
1969 ஆகஸ்டு 15ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) என அணு சக்தி துறையினரால் (DAE) துவக்கப்பட்டது., அந்த வகையினில் இது இஸ்ரோவிற்கு ஐம்பதாவது வருடம். பின்பு விண்வெளி ஆராய்ச்சிகள் இஸ்ரோவின் தலைமையின் கீழ் மாற்றப்பட்டது.
1972ல் இந்திய விண்வெளி நிறுவனம் அமைக்கப்பட்டு அதன் தலைமையின் கீழ் இஸ்ரோ கொண்டுவரப்பட்டது. 1975ல் முழுக்க முழுக்க இந்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
சந்திரயான் 1
பிஎஸ்எல்விXL-C11 ஏவூர்தி ஆனது1850கிலோ எடையுள்ள சந்திரயான் -1 ஐ விண்வெளிக்கு எடுத்துச் சென்றது. இந்த நிலவினை சுற்றிவரும் சுற்றுக்கலனில்(Orbiter) 11 கருவிகள் இருந்தன. அவற்றுள் நிலவை தாக்கி பரிசோதிக்கும் கருவியும் (Moon Impact Probe) ஒன்றாகும். அது சுற்றுக்கலனிலிருந்து நவம்பர் 14 2008ல் பிரிந்து நிலவின் தென்துருவத்தில் மோதியது(Crash Landing), அப்பொழுது சிதறிய மண்துகள்களில் நீர்மூலக்கூறு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சந்திரனின் நிலப்பரப்பில் மக்னீசியம், அலுமினியம் மற்றும் சிலிக்கான் இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆக இந்தியா ஏற்கனவே வெற்றிகரமாக நிலவினில் கால் பதித்துள்ளது.
சுற்றுக்கலனானது ஏறக்குறைய ஒருவருடம் நிலவினை சுற்றி மென்தரையிரக்கத்திற்கு (Soft Landing) தேவையான 3டி வரைபடங்கள் தயாரிக்கத் தேவையான நிலவின் அண்மை மற்றும் தொலைவான எனப்படும் நிலவின் இருபுறங்களையும் நிழற்படங்கள் எடுத்தது.
சுற்றுக்கலனானது ஏறக்குறைய ஒருவருடம் நிலவினை சுற்றி மென்தரையிரக்கத்திற்கு (Soft Landing) தேவையான 3டி வரைபடங்கள் தயாரிக்கத் தேவையான நிலவின் அண்மை மற்றும் தொலைவான எனப்படும் நிலவின் இருபுறங்களையும் நிழற்படங்கள் எடுத்தது.
இதன் திட்டத்தொகை ₹386கோடி (US$76மில்லியன்) ஆகும். 2007ல் சீனா தனது சந்திரப்பயணதிட்டமான Chang’e-1க்கு செய்த செலவு US$180மில்லியன் ஆகும்.
சந்திரயான் 2
2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட சந்திரயான் 2 திட்டத்தின் துவக்கத்தில் தரையிரங்கும் கலன் மட்டும் ரஷ்யாவின் தயாரிப்பாக இருக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டது. ஆனால் ரஷ்யா சீனாவோடு சேர்ந்து நடத்திய கிரகங்களுக்கிடையான பயணத்திட்டத்தில் நடந்த தோல்வி இந்தியாவின் திட்டத்தினையும் பாதித்தது. எனவே இந்தியா 2013ல் தரையிரங்கும் கலனை சொந்தமாக தயாரிக்க திட்டமிட்டது.
சந்திரயான் 2 ஆனது 3850கிலோ கிராம் அளவிலான தாங்கு சுமைகளை 380000கி.மீட்டர் தொலைவிற்கு எடுத்துச்செல்கின்றது. இதில் சுற்றுக்கலன், மென்மையாக தரையிரங்கும்(Soft Landing) விக்ரம் எனப் பெயரிடப்பட்ட தரையிரங்கி(Lander) , மேலும் பிரக்யான் எனப் பெயரிடப்பட்ட உலாவியும் (Rover) உள்ளது.
சந்திரயான் 2 ஜீலை 22 முதல் தனது பயணத்தினை ஆரம்பித்து செப்ம்டம்பர் 7ம் தேதி வரை, சுமார் 47 நாட்கள் பயணத்திற்கு பிறகு நிலவில் கால் பதிக்க முயற்சி எடுத்தது. சுமார் ₹968கோடி(ஜிஎஸ்எல்வி ஏவூர்தி ₹375கோடி + சந்திரயான்2 ₹603கோடி) மதிப்பினில் இந்தியா இந்த திட்டத்தினை மேற்கொண்டது, அதாவது US$141 மில்லியன் மதிப்புடையது.
1969ஆம் ஆண்டில் அமெரிக்கா நிலவிற்கு முதன் முதலாக மனிதனை அனுப்பிய பொழுது பயன்படுத்திய Saturn ஏவூர்தி Appollo விண்கலத்தினை நான்கு நாட்களுக்குள் நிலவில் இறக்கியது. Saturn ஏவூர்தியானது விண்கலத்தினை சந்திரனின் சுற்றுப்பாதையில் நேரடியாக நிலைநிறுத்தும் அளவிற்கு சக்தி கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்க அந்த திட்டத்திற்கு கொடுத்த விலையும் மிக அதிகம், US$25பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் (1969ஆம் ஆண்டின் இந்திய மதிப்பினில் தோரயாமாக 68000கோடி). இன்றைய மதிப்பினில் அது இன்னும் பல மடங்கு வரும்.
2021ஆம் ஆண்டு அமெரிக்காவும் அதன் குறைந்த செலவினில் சந்திரனை அடையும் பயணதிட்டமொன்றை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. சமீபத்திய இந்திய மற்றும் இஸ்ரேலின் விலைகுறைந்த பயணத்தில் ஏற்பட்ட சறுக்கலின் காரணமாக அமெரிக்கா அதன் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சீனா தனது சந்திரன் திட்டங்களில் இதுவரை தோல்வியைத் தழுவியது இல்லை. சீனாதான் 2019ஆம் ஆண்டு தொடக்கத்தில் தனது Chang'e 4 திட்டத்தின் மூலம் நிலவின் மறுபுறம் (Far away) தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடாகும். ஆண்டு 2007 மற்றும் 2010ல் சீனா தனது Chang'e 1 & 2 திட்டத்தின் மூலம் சந்திரனுக்கு சுற்றுக்கலனை ஏவியது. ஆண்டு 2013 & 2019ல் திட்டம் Chang'e 3 & 4 மூலம் மென்மையாக தரையிரங்குதல், உலாவி போன்றவற்றை செய்து காட்டியது. வரும் ஆண்டுகளில் Chang'e 5 & 6 திட்டத்தின் மூலம் மாதிரிகளை சந்திரனிடமிருந்து எடுத்து திரும்புதல், Chang'e 7 மூலம் மனிதனை அனுப்புதல் போன்றவற்றை திட்டமிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு அமெரிக்காவும் அதன் குறைந்த செலவினில் சந்திரனை அடையும் பயணதிட்டமொன்றை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. சமீபத்திய இந்திய மற்றும் இஸ்ரேலின் விலைகுறைந்த பயணத்தில் ஏற்பட்ட சறுக்கலின் காரணமாக அமெரிக்கா அதன் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சீனா தனது சந்திரன் திட்டங்களில் இதுவரை தோல்வியைத் தழுவியது இல்லை. சீனாதான் 2019ஆம் ஆண்டு தொடக்கத்தில் தனது Chang'e 4 திட்டத்தின் மூலம் நிலவின் மறுபுறம் (Far away) தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடாகும். ஆண்டு 2007 மற்றும் 2010ல் சீனா தனது Chang'e 1 & 2 திட்டத்தின் மூலம் சந்திரனுக்கு சுற்றுக்கலனை ஏவியது. ஆண்டு 2013 & 2019ல் திட்டம் Chang'e 3 & 4 மூலம் மென்மையாக தரையிரங்குதல், உலாவி போன்றவற்றை செய்து காட்டியது. வரும் ஆண்டுகளில் Chang'e 5 & 6 திட்டத்தின் மூலம் மாதிரிகளை சந்திரனிடமிருந்து எடுத்து திரும்புதல், Chang'e 7 மூலம் மனிதனை அனுப்புதல் போன்றவற்றை திட்டமிட்டுள்ளது.
சந்திரயான் 3
இந்த திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டு ஜப்பானிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவூர்தி கொண்டு ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உலாவியின் தொழில்நுட்பத்திற்கும் ஜப்பான் பொறுப்பேற்றுக்கொள்ளும். சுற்றுக்கலன், தரையிரங்கி போன்றவை இந்திய தொழில்நுட்பத்திலிருக்கும். இந்த திட்டத்தின் கீழ் ஆய்வு மாதிரிகளை எடுத்துக்கொண்டு புவி திரும்பி வருமாறு உள்ளது.
ஏவூர்தி - தாங்குசுமை - ஜிஎஸ்எல்வி ஏவூர்தி -
ஏவூர்தியானது அது எடுத்துச்செல்லும் தாங்குசுமைகளின் எடை அளவைப் பொறுத்து நான்கு வகைப்படும்.
1. Small Lift Launch Vehicle, சிறிய அளவிலான ஏவூர்தி தோரயமாக 2,000கி(4400 Lb) எடை வரையுள்ள தாங்குசுமைகளை புவி தாழ் சுற்றுப்பாதைக்கு(Low Earth orbit) எடுத்துச்செல்லும்.
2. Medium Lift Launch Vehicle, நடுத்தர அளவிலான ஏவூர்தி தோரயமாக 2,000 முதல் 20,000வரை கிலோ(4,400 Lb முதல் 44,100 Lb வரை) எடையுள்ள தாங்குசுமைகளை புவி தாழ் சுற்றுப்பாதைக்கு(Low Earth orbit) எடுத்துச்செல்லும்.
3. Heavy Lift Launch Vehicle, பெரிய அளவிலான ஏவூர்தி தோரயமாக 20,000 முதல் 50,000வரை கிலோ(44,000 Lb முதல் 110,000 Lb வரை) எடையுள்ள தாங்குசுமைகளை புவி தாழ் சுற்றுப்பாதைக்கு(Low Earth orbit) எடுத்துச்செல்லும்.
4. Super Heavy Lift Launch Vehicle, மிகப்பெரிய அளவிலான ஏவூர்தி தோரயமாக 50,000கிலோவிற்கு அதிகமான(> 110,000 Lb ) எடையுள்ள தாங்குசுமைகளை புவி தாழ் சுற்றுப்பாதைக்கு(Low Earth orbit) எடுத்துச்செல்லும்.
நாம் அனைவரும் சிறுவயதில் தீபாவளி திருநாளின்பொழுது ராக்கெட் விட்டிருப்போம். அந்த ராக்கெட்டானது சிறிய குப்பி அலல்து காகிதங்களில் வெடிமருந்து அழுத்தத்துடன் நிரப்பப்பட்டு ஒரு சிறிய திரி நீண்டுகொண்டிருக்கும். நாம் திரியில் நெருப்பினை பத்தவைத்த உடன் அது வெடிமருந்தை வெடிக்கச்செய்து வானில் சீறிப்பாயும். ராக்கெட் கீழிருந்தோ அடியிலிருந்தோ மேலுள்ள காற்றை மீறி உந்தி தள்ளி மேலே சென்றாலும், மிகச்சரியாகச் சொல்லவேண்டுமெனில் தனது எரிகலனில்(Combustion Chamber) சரியான அழுத்ததுடன் எரிபொருளை எரித்து ராக்கெட் முனையின்(Nozzle) வழியே கீழே வெளிவிடும்பொழுது உருவாகும் உந்து விசையானது(Thurst) ராக்கெட்டினை மேலே எழும்பச் செய்கிறது.
பச்சபுள்ள மன்னாரு: அதாவது ராக்கெட்டை காற்றிற்கு எதிராக கீழிருந்து மேலே உந்தித் தள்ளுவது அல்ல, ராக்கெட் தனது எரிபொருளை எரித்து எடையை குறைத்து மேலிருந்து கீழே தள்ளி பாய்ந்து முன்னேறுகிறது.
இந்த உந்து விசையானது எரிக்கப்படும் எரிபொருளின் முழுத்திறனையும் எட்டுகிறதா என்பதை பார்க்க "குறிப்பிட்ட உந்துவிசை(Specific Impulse)" என்ற கோட்பாட்டின் படி அளவீடுவர். Specific Impulse, அதாவது எவ்வளவு நிறை கொண்ட எரிபொருள் எரிக்கப்பட்டதோ அதற்கு ஈடான தொலைவு மேல்நோக்கி பயணித்திருக்கவேண்டும்.
நமது தீபாவளி ராக்கெட் திட ஏவூர்தி வகையாகும். திட ஏவூர்தியை விட திரவ ஏவூர்தி வகையே அதிக திறன்(குறிப்பிட்ட உந்துவிசை) கொண்டது. திரவ ஏவூர்தியை தேவைக்கேற்ப நிறுத்தி, முடுக்கி எனக் கட்டுப்பாடுகள் மூலம் நிர்வகிக்கலாம். ஆனால் திட ஏவூர்தியில் நீ பற்ற வைத்த நெருப்பொன்று ... முழுதும் எரிந்து பிறகே நிற்கும். ஆனால் விலை குறைவானது, எளிதில் சேமித்துவைக்கலாம், அதனால்தான் இராணுவத் தேவைகளுக்காண கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில்(ICBM) திட எரிபொருள் பயன்படுகின்றது.
Engine, Motor & Generator வித்தியாசம் என்ன?
இந்திய ஏவூர்திகளின் வகை:
இந்திய ஏவூர்திகளின் வகை |
சீன ஏவூர்திகளின் வகை |
மிகு எடை தாங்கி ஏவூர்தி வகை |
சுற்றுப்பாதை
புவி மைய சுற்றுப்பாதைகளுக்கான உயர வகைப்பாடு
புவி தாழ் சுற்றுப்பாதை (Low Earth Orbit): 2,000 கிமீ (100–1,240 மைல்) க்கும் குறைவான உயரங்களைக் கொண்ட புவி மைய சுற்றுப்பாதைகள்.
புவி நடுத்தர சுற்றுப்பாதை (Medium Earth Orbit): 2,000 கிமீ (1,240 மைல்) முதல் 35,786 கிலோமீட்டர் (22,236 மைல்) உயரத்தில் புவியிணக்க சுற்றுப்பாதையில் சற்று கீழே உள்ள புவி மைய சுற்றுப்பாதைகள். இடைநிலை வட்ட சுற்றுப்பாதை அல்லது அரை புவியிணக்க சுற்றுப்பாதை என்றும் அழைக்கப்படுகிறது. இவை "பொதுவாக 20,200 கிலோமீட்டர் (12,600 மைல்), அல்லது 20,650 கிலோமீட்டர் (12,830 மைல்), சுற்றுப்பாதை காலம் 12 மணி நேரம் ஆகும்.
புவி நிலைப்பு சுற்றுப்பாதை (Geo Stationary orbit) மற்றும் புவியிணக்கச் சுற்றுப்பாதை (Geosynchronous Orbit) ஆகியவை பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதைகள் ஆகும். புவி நிலைப்பு சுற்றுப்பாதை (ஜியோஸ்டேஷனரி சுற்றுப்பாதை) பூமத்திய ரேகைக்கு ஒத்திசைவாக பூஜ்ஜிய கோணத்தில் புவியின் மேற்பரப்பிலிருந்து 35786 கி.மீ தொலைவில்(புவியின் மையப்புள்ளியிலிருந்து 42,164கி.மீ) அமைந்துள்ளது. இந்த சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் செயற்கைக்கோள்கள் புவியை சுற்றிவர 23 மணி 56 நிமிடம் 4வினாடிகள், அதாவது பூமியின் சுழற்சி காலத்தினைப் போன்றே எடுத்துக்கொள்கிறது. இந்த சுற்றுப்பாதையில் 3 செயற்கைகோள்களை நிலை நிறுத்துவதின் மூலம் புவி முழுவதையும் எளிதில் பார்வையிடலாம்.
சொற்கள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்பட்டாலும், தொழில்நுட்ப ரீதியாக ஒரு புவியிணக்கச் சுற்றுப்பாதையானது(GSO), புவிநிலைப்பு சுற்றுப்பாதை(GEO) போன்றே பூமியின் சுழற்சி காலத்துடன் பொருந்துகிறது, ஆனால் பூமத்திய ரேகைக்கு ஒத்திசைவாக பூஜ்ஜியம் டிகிரியில் இதன்(GSO) சுற்றுப்பாதை சாய்வு இருக்க வேண்டிய அவசியமில்லை, இது பூமத்திய ரேகையிலிருந்து சிறிது சாய்வாக (குறிப்பிட்ட கோணவித்தியாசம்) இருக்கும்.
அரை புவியிணக்க சுற்றுப்பாதையில்(Semi Synchronous orbit) புவியிணக்க வழிகாட்டி செயற்கைகோள்கள்(Global Positioning Satellite) புவியின் மேற்பரப்பிலிருந்து 20,200கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்படும். இந்த பாதையிலுள்ள செயற்கைகோள்கள் 12 மணிநேரத்தில் பூமியை சுற்றிவந்துவிடும். இது புவி நடுத்தரசுற்றுப்பாதையாகவும் கருதப்படும். (MEO)
கோள்களைப் பற்றிய கெப்ளர் விதி என்ன?
why is rocket not affected by earth gravity
what is sun-synchronous orbit
what is rocket fuel
what is cryogenic
how is rocket and satellite directions controlled
what will happened to satellite after its life period ended?
மேலுள்ள கேள்விகளுக்கு வரும் கட்டுரைகளில் பதிலைப் பார்ப்போம்.
சான்றுகள்
1. https://www.isro.gov.in/about-isro/isros-timeline-1960s-to-today#72. https://www.isro.gov.in/pslv-c11-chandrayaan-1
3. https://www.isro.gov.in/chandrayaan2-home-4. https://en.wikipedia.org/wiki/Chinese_Lunar_Exploration_Program
5. https://en.wikipedia.org/wiki/Chandrayaan-3
6. https://en.wikipedia.org/wiki/Small-lift_launch_vehicle
7. https://en.wikipedia.org/wiki/Rocket_propellant
8. https://en.m.wikipedia.org/wiki/List_of_orbits
9. https://en.wikipedia.org/wiki/Comparison_of_orbital_launch_systems
10. https://gisgeography.com/geosynchronous-geostationary-orbits/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக