அதே மரத்தின் உச்சியில் "கீகீ" என்ற பெயரிலுள்ள ஒரு காகமும் கூடு கட்டி வசித்து வந்தது. அது சுறுசுறுப்பானது, தனக்குத் தேவையான உணவை தானே தேடும், மேலும் உணவு சுவையாகவும், நன்றாகவும் இருந்தால், "கா கா கா... கா" எனக் கரைந்து மற்ற காகங்களையும் உணவு உண்ணக் கூப்பிடும்.
![]() |
Pic Credit : Internet |
ஆனால் இந்த குயில் காகத்தின் குரலைக் கிண்டல் செய்யும், மேலும் குயில் தான் அழகானது என்று காகத்தினை கிண்டல் செய்யும், காகமோ பொறுமையாக இருக்கும்.
சிறிது நாட்களுக்குப் பிறகு காகம், நான்கு முட்டையிட்டு அதன் கூட்டினில் அடைகாத்தது வளர்த்து வந்தது.
![]() |
Pic Credit : Internet |
இந்த நிலையில் அந்த குயிலும் ஒரு முட்டையிட்டது. இப்பொழுது அதன் முட்டையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய நிலையில் அது திருட்டுத்தனமாக் காகத்தின் கூட்டினில் தனது முட்டையை கொண்டு போய் வைத்தது.
புத்திசாலி காகம் முட்டையின் எண்ணிக்கை ஐந்தாக கூடியதை அறிந்தது, இருப்பினும் குயிலின் முட்டையையும் அன்போடு அடைகாத்து வளர்த்தது.
சிறிது நாட்களுக்கு பிறகு முட்டை வெடித்து குஞ்சு வெளி வந்தது, இப்பொழுது குயிலின் குஞ்சோ பாடியது, காகத்தின் குஞ்சோ கா.. கா எனக் கரைந்தது... அன்பான காகமோ குயில் குஞ்சுக்கும் உணவு அளித்தது. இதனைப் பார்த்த பெரிய குயில் வெட்கித் தலை குனிந்தது.
![]() |
Pic Credit : Internet |
நீதி என்ன??
இந்த கதையிலிருந்து நீங்கள் புரிந்துகொண்டது என்ன?
இந்த கதை ஏழு வயது முதல் பத்து வயது வரையுள்ள சிறுவர்களுக்கானது.
மொத்த வார்த்தைகள் => 155
புதிய வார்த்தைகள் => 115
வரிகள் => 22
பத்திகள் => 07
மொத்த எழுத்துக்கள் => 1206
மொத்த எழுத்துக்கள் இடைவெளியின்றி => 1061
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக