சனி, 20 ஜூலை, 2019

போட்டித் தேர்வு - 1



போட்டித் தேர்வுகளூக்குத் தயாராகும் சகோதரர்களூக்கு உதவும் வகையிலான தகவல் தொகுப்பு பின்வருமாறு..

ஆயுட்காலம்:
விடுதலை பெற்றபொழுது இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 37 வருடமாக இருந்தது, தற்போது 69வருடங்களாக உயர்ந்துள்ளது. இதற்கு இத்தனை வருடம் ஆட்சியிலிருந்த அத்துணைபேரும் பெருமை கொள்ளலாம். நேருவும் இதற்கு காரணம் :)



கல்வியறிவு சதவீதம்:
விடுதலை பெற்றபொழுது இந்தியர்களிடையே கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 18.3சதவீதமாக இருந்தது, அதாவது 5 இந்தியரில் 4-க்கும் அதிகமான நபருக்கு கல்வியறிவு இல்லை; ஆனால் 2011ல் 74% கல்வியறிவு பெற்ற நாடாக இந்தியா திகழ்கிறது, 2017ல் 4 இந்தியரில் 1-நபருக்கு மட்டுமே கல்வியறிவு இல்லை, சில மாநிலங்கள் 90+ சதவீதத்க்கும் அதிகமான கல்வியறிவு உடையவனாக திகழ்கிறது. இது இந்தியாவை ஆண்டவர்களின் பெரும் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமில்லை. விடுதலை பெற்ற முதல் 40 வருடங்களில் 30% வளர்ச்சியே சாத்தியப்பட்டிருந்தது, ஆனால் கடந்த 20வருடங்களில் 30% வளர்ச்சியை கல்வியறிவில் இந்தியா பெற்றுள்ளது மக்களிடையே விழிப்புணர்வு அதிகமானதும் காரணமாயிற்று. அடுத்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 2024ல் இந்தியா 100% கல்வியறிவு என்ற இலக்கை எட்டியிருக்கும், அப்பொழுது நடைபெறும் தேர்தலில் வாக்காளர்களின் விழிப்புணர்வு எப்படி இருக்கும் எனப் பார்க்க நாமும் ஆவலாக உள்ளோம்.



விவசாய வருமானம்:
விடுதலை பெற்றபொழுது இந்தியர்களில் 55%க்கும் அதிகமான நபரின் வருமானம் விவசாயத்திலிருந்து கிடைத்தது, இதுவே 2010-11ல் 17.5%மாக சரிந்தது. 5 இந்தியரில் ஒருவர் மட்டுமே விவசாயம் சார்ந்த தொழிலில் உள்ளனர்.



சேவைத் துறை வருமானம்:
விடுதலை பெற்றபொழுது இந்தியர்களில் 30%பேரின் வருமானம் சேவைத்துறை சார்ந்து இருந்தது, இதுவே 2017-18ல் 54.8% இந்தியர்களின் வருமானம் சேவைத்துறை சார்ந்ததாக மாறியுள்ளது. முதல் 40வருடங்களில் சராசரியாக 10% வளர்ச்சியை பெற்றிருந்த இத்துறை தாரளமயமாக்கலுக்கு பிறகு அடுத்த 20வருடங்களில் தோரயமாக 14%க்கும் அதிகமாக வளர்ந்துள்ளது.


உற்பத்தி துறை வருமானம்:
விடுதலை பெற்றபொழுது இந்தியர்களில் 15%க்கும் கீழே தோராயமாக 14.7% நபரின் வருமானம் உற்பத்தி தொழிற்சாலை  சார்ந்திருந்தது. இன்றையளவில் அது 27.8%-மாக வளர்ந்துள்ளது. 1956-61ல் நடந்த இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் காரணமாக தொழிற்சாலைகள் வளர்ச்சி பெற்றிருந்தது, தொழில்சார்ந்த வளர்ச்சியின் காரணமாக 1970க்குள் இந்த துறை 6%க்கும் அதிகமான வளர்ச்சியை பெற்றிருந்தது.



நகர மக்கள்தொகை:
1960களில் 8.1கோடி பேர் சுமாராக 17.9% இந்திய மக்கள்தொகை நகரத்தில் வசித்தது, இன்றையளவில் அது 44.9கோடி பேர் சுமாராக 33.5% இந்திய மக்கள் தொகை நகரத்தில் வசிக்குமாறு வளர்ச்சியடைந்துள்ளது. விவசாய வருமான வீழ்ச்சி மக்களை நகரங்களை நோக்கி நகர்த்துகின்றது. இன்றைய அளவில் இது அதிகப்படியான மக்கள்தொகை அடர்த்தி, சுற்றுச்சூழல் கேடு போன்றவற்றினை நகரத்தில் ஏற்படுத்துகின்றது.



வறுமை:
விடுதலை பெற்றபொழுது இரண்டு இந்தியர்களுள் ஒருவர் அதீத வறுமையின் பிடியினில் இருந்தனர். 1960களில் இந்தியா சீனா மற்றும் பாகிஸ்தானுடன் சந்தித்த போர்களினாலும் வளர்ச்சியிலிருந்து பின்னடைவை சந்தித்தது, இருப்பினும் 1960களில் துவக்கப்பட்ட பசுமைப் புரட்சித் திட்டத்தின் காரணமாக பஞ்சாப் அதிகம் கோதுமை விளைவிக்கும் பிரதேசமாக மாறியது. 2010-11களில் ஐந்து இந்தியர்களூள் ஒருவர் வறுமையின் பிடியினில் இருப்பதாக குறைந்துள்ளது. 2022ல் ஐந்து சதவீதத்துக்கும் கீழே வறுமையின் கீழுள்ள மக்கள்தொகை குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   வறுமை ஒழிப்பு கணக்குகள் பல்வேறு காலங்களில் மாறிவந்துள்ளதையும் நாமும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். சில வருடங்களுக்கு முன்பு 31ரூபாய்க்கும் மேல் சம்பாதித்தால் நகரத்தில் வறுமைக்கோட்டுக்கு மேலே அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவர் என அரசு கூறி பெரும் சர்ச்சையை சந்தித்தது.



நேரடி வரி வருவாய்:
1988-89களில் 19.8 சதவீதமாக இருந்த நேரடி வரிவருவாய் 2018-19ல் 50.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாட் வரி, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம், வருமான வரி வரம்பு குறைப்பு, தாராளமயமாக்கல் ஆகியன வரி அதிகரிப்பிற்கு காரணமானவை என்றால் மிகையாகாது.




செல்போன்:
1990களின் மத்தியில் 10000நபருக்கு ஒருவரிடமே மொபைல்போன் இருந்தது, இன்று அது 10000பேருக்கு 8900 நபரிடம் மொபைல் போன் இருக்கும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது, இதன் தாக்கம் வறுமை ஒழிப்பிலும் உள்ளது.

ரிமிட்டன்ஸ் பணம்:
வெளிநாட்டில் சம்பாதிக்கும் ஊழியர்கள் அனுப்பும் தொகை உலகிலேயே இந்தியர்களூடையதுதான் அதிகம், சுமார் 78பில்லியன் தொகை. ஒரு பில்லியன் தோராயமாக 6500கோடி என்று வைத்து கொண்டாலும் ஐந்து இலட்சம் கோடி மதிப்பினில் வருடந்தோறும் பணத்தினை தாயகத்திற்கு அனுப்புகின்றனர். இது இந்திய பட்ஜெட்டில் ஆறு பங்கில் ஒரு பங்கு ஆகும். ஏறக்குறைய இந்திய பட்ஜெட்டின் பற்றாக்குறை தொகைக்கு சமம் ஆகும். இந்திய ஜிடிபியில் இந்த தொகை 4 சதவீதம் ஆகும்.

இதில் தமிழகத்தின் பங்கு ஏறக்குறைய 50000கோடிக்கும் அதிகம் வரும், இது தமிழகத்தின் ஜிடிபியில் 14சதவீதம் ஆகும். மத்திய அரசு தமிழ்நாட்டின் பங்களிப்பாக வழங்கும் வரி வருவாயை விட இது அதிகம். தமிழகம், கேரளம், மகாராட்டிரம் மற்றும் கர்நாடகம் அறுபது சதவீதத்துக்கும் அதிகமான ரிமிட்டன்சு பணத்தினைப் பெறுகின்றனர்.  தென்னிந்தியாவின் வளர்ச்சி ஆட்சியாளர்களால் ஏற்பட்டது என அரசியல் கட்சியினைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து பேசுகின்றனர். ஆட்சியாளர்களினால் ஏற்பட்ட வளர்ச்சி ஒருபுறம் என்றாலும் உண்மை நிலை 90களுக்கு பிறகு ஏற்பட்ட தாராளமயம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களினால் அனுப்பப்படும் பணம் ஆகியனவும் ஒரு இணையான வளர்ச்சியை இங்கு ஏற்படுத்தி உள்ளது என்பதுவே... மக்கா யாருக்கிட்டேயும் வம்பு வளர்க்க நேரமில்லை..., கொஞ்சம் யோசியுங்கள் உண்மை உங்களுக்கே புரியும். வட இந்திய மாநிலங்களுக்கு இந்த வெளிநாட்டு தொடர்பு கிடைக்க சிறிது காலம் ஆனது என்பதனையும் இங்கு பதிவு செய்யவிரும்புகிறோம். தமிழக ஆட்சியாளர்களின் பங்களிப்பை குறைத்து சொல்லவேண்டிய எண்ணம் ஏதுமில்லை இருப்பினும் இங்கு ரிமிட்டன்சு பணத்தின் செல்வாக்கினை மறைத்து விடுகின்றனர் என்பதுவே நமது ஆதங்கம்...

வெளிநாட்டு பயணிகள் வருகை:
ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இதற்கு தமிழ்நாட்டு கோயில்கள், கன்னியாகுமரி, இராமேசுவரம், கோடைவாசஸ்தலங்கள், காரைக்குடி போன்றவை காரணமாக உள்ளது.


பொருளாதாரத்தில் ஐந்தாவது பெரியநாடு:
1970களில் 9வது பெரியநாடாக ஜிடிபியை கொண்டிருந்த இந்தியா மத்தியில் பின்னடைவை சந்தித்தது. இப்பொழுது 5வது நாடாகவும், விரைவில் 3வது நாடாகவும் வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு நேருவும் காரணமே....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக