நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் தோல்விக்கு தார்மீகரீதியாக பொறுப்பேற்று பதவி விலக முன்வந்த திரு.ராகுல் காந்திக்கு குறிஞ்சியின் ஒர் விண்ணப்பம். எதிர்தரப்பில் அசுர பலத்தில் பதவியில் அமர்ந்திருக்கின்றனர், நேரு குடும்பத்திற்கு வெளியே எளிய குடும்ப பிண்ணனி கொண்டோரை காங்கிரசு தலைவராக கொண்டால் மிக எளிதில் வதை செய்வர்.
காங்கிரசு குடும்பத்தின் தலைமை ஆனது நேரு குடும்பத்திற்கு வெளியே இருந்து வரவேண்டும் என்பது மட்டுமின்றி, தொடர்ச்சியாக காங்கிரசை கறையான் புற்று போன்று சூழ்ந்திருக்கும் மற்றைய தலைவர்களின் வாரிசுகளையும் தவிர்த்து எளிய பிண்ணனி கொண்ட தொண்டர்களிடமிருந்து வரவேண்டும் என்ற எண்ணம் நடுநிலை மக்களிடம் இருந்தாலும் இப்பொழுது அதற்கான களச்சூழல் இல்லை. சிலரது தேர்வு பிரியங்கா காந்தி என்பதும் கயமைத்தனமே.. ஆக ராகுல் காந்தியே தற்போதைய சூழ்நிலையில் தலைவராக பதவியைத் தொடரவேண்டும் என்பது குறிஞ்சியின் விருப்பம்.
முதற்கட்டமாக ராகுல் காந்தி அவருக்கு கீழே நாடு முழுவதிலுமிருந்து களச் செயற்பாட்டாளர்கள் எனப்படும் இளையோர்களிடமிருந்து 12 முதல் 25 நபர்களைத் துணைதலைவர்களாக அவருக்கு கீழே நியமிக்கலாம், அவர்களின் பணிகளை நாடு முழுவதும் ஊக்குவிக்கலாம், பின்பு அவர்களிடமிருந்து ஒரு செயற்பாட்டாளரை காலமே தேர்வு செய்யும்.
ஏனெனில் இந்தியா என்ற பெரும் மக்கள் தொகையினையும், மாறுபட்ட கலாச்சாரத் தொடர்பினையும் கொண்ட தேசத்தினை புரிந்துகொள்ள எந்தவொரு நபருக்கும் குறைந்தபட்சம் சிறிது காலம் பிடிக்கும். ராகுல் காந்தியும், அவரது துணைத்தலைவர்களும் குறைந்தப்பட்சம் மக்களை அவர்களின் வாழ்வாதார இருப்பிடங்களில் நேரடியாக எந்தவொரு ஊடக வெளிச்சமின்றி சந்திக்கவேண்டும், மெல்ல மெல்ல மக்களின் உணர்வுகளையும் விருப்பங்களையும் நேரடியாக அறிந்துகொள்வது மட்டுமின்றி, மக்களின் பார்வையிலும் காங்கிரசின் தோற்றம் மெல்லமெல்ல மாற இது உதுவும். சுதந்திரப் போராட்ட காலத்திற்கு பிறகு காங்கிரசு அதன் மீட்சிக்காக மட்டுமின்றி இந்தியாவின் ஜனநாயக இருப்பிற்க்காகவும் மீண்டுமோரு வேள்விக்குத் தயாராக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்
இந்த சமூகம் தனிப்பட்ட ராகுல் காந்தியின் முயற்சிகளை தொடர்ச்சியாக அணுக்கமாக கண்காணித்து வருகின்றது.
1. அவர் வாரிசு அரசியலிடமிருந்து காங்கிரசை தொண்டரகளின் கட்சியாக மாற்ற முயன்றாலும், பழம் பெருச்சாளிகள் அதற்கு அவரை அனுமதிப்பதில்லை, அதனையும் மீறி ஆங்காங்கே "ஜோதிக்களை" தோற்றுவிக்கிறார்.
2. இயற்கையின் மீது அவரது ஆர்வம் வெளிப்படையானது.
3. தவறு செய்த பொழுது, அதனை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பது என்பது இந்திய அரசியலுக்கு புதிது. அதனை அவர் மனமொத்து செய்வதில்லை என்பது எதிர்தரப்பின் குற்றச்சாட்டு, அதனை குறிஞ்சி தற்போதைய நிலையில் பொருட்படுத்த விரும்பவில்லை.
4. இந்த தேசத்தின் பின்னடைவுக்கு நேரு குடும்பத்தின் மீது பொருப்பு சுமத்தப்படுகின்றது, அந்தவொரு நிலையில் இந்த தேசத்தின் முன்னேறிய நிலைக்கும், அவர்களது குடும்பத்தின் உயிர் தியாகத்திற்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்.
5. ராகுல்காந்தி மற்றும் காங்கிரசின் இருப்பு என்பது தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.
6. கடந்த தேர்தல்களில் ராகுல் காந்தி முன்வைத்த "நியாய்" மற்றும் "புதிய தொழில் முனைவோர்க்கு விதிவிலக்குகள்" போன்றவற்றில் குறிஞ்சி முரண்படுகிறது, இயற்கை அனுமதித்தால் அதுபற்றிய விவரங்களை வேறோரு கட்டுரையில் எழுதுவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக