உலகம் முழுவதும் வளர்ந்து வரும் மக்கள் தொகையானது ஆளும் அரசாங்கத்திற்கும், மனிதகுலத்திற்கும் கடும் பிரச்சனைகளை அளிக்கிறது, வருடம் தோறும் 80-கோடிக்கும் அதிகமான மக்கள் உணவு கிடைக்காமல் தவிக்கின்ற சூழ்நிலையில் 1-கோடிக்கும் அதிகமான மக்கள் முறையற்ற உணவு பழகத்தினால் குறைந்த வயதினிலே நோய் மற்றும் இறப்பை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் 2050ல் 1000கோடியாக மக்கள் தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு மக்களுக்கு உணவு அளிக்கவேண்டுமெனில் விவசாய பரப்பு அதிகரிக்கப்பட காடுகள் அழிக்கப்படவேண்டியிருக்கும், மேலும் மக்கள் குடியிருக்க விவசாய நிலங்கள் அழிக்கப்படும், உணவுத் தேவைகளுக்காக விலங்குகள் அழிக்கப்படும். இது வாழும் சூழலியிலில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வட அமெரிக்காவில் சிவப்பு இறைச்சி எனப்படும் மாட்டிறைச்சி மற்றும் பன்றியறைச்சி பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 6.5 மடங்கு அதிகமாகவும் அதே சமயத்தில் தெற்காசியாவில் பரிந்துரை அளவை விட பாதி அளவிலுமே மக்களால் உண்ணப்படுகிறது. அதேவேளையில் ஸ்டார்ச்சு சத்துக்கள் நிறைந்த உருளைக் கிழங்கு மற்றும் அரிசி உணவானது உலகம் முழுவதுமே பரிந்துரை அளவே விட அதிகம் எடுத்துக்கொள்ளப்படுகிறது, தெற்காசியாவில் 1.5 மடங்கும், சகாரா-ஆப்பிரிக்க நாடுகளில் 7.5 மடங்கும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதையெல்லாம் தவிர்த்திட EAT-LANCET என்ற இலாபமற்ற சுயேச்சேயான அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, உலகம் முழுவதிலிருந்தும் 16 நாடுகளைச் சார்ந்த 19 அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் 18 இணை ஆசிரியர்கள் கொண்ட குழுவின் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஆரோக்கியமான உணவு சரியான விகிதத்தில் எவ்வளவு தேவைப்படும் என்று கலந்துரையாடப்பட்டு அதன் விவரங்கள் LANCET இதழில் பிரசுரிக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்தும் இருவர் இந்த குழுவில் பங்குபெற்றனர், அவர்கள் விவரம் வருமாறு இந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளையை சார்ந்த ஸ்ரீனித் ரெட்டி மற்றும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் சுனிதா நாராயண் ஆகியோர் அடங்குவர்.
ஒர் நாள் மனிதனுக்கு தேவைப்படும் சக்தியான 2500 கலோரியில் பெரிதும் தானியங்களான கோதுமை மற்றும் அரிசியை உட்கொள்வதிலிருந்து 800 கலோரி எடுத்துக்கொள்ளலாம், 204 கலோரி காய்கறிகள் மற்றும் பழங்களிடமிருந்தும், வெறும் 30கலோரி மட்டுமே மாமிச உணவுகளிடமிருந்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை அந்தக் குழு பரிந்துரைக்கிறது.
அதன் தமிழாக்கமே இங்கு அட்டவணையிடப்பட்டுள்ளது.
![]() |
| நன்றி - LANCET |
கொசுறு:
கிட்டதட்ட இதே போன்ற ஒரு முயற்சியை குறிஞ்சியும் தன்னந்தனியே எடுத்தது... ஆனால் தகவல்களை உள்வாங்கி தொகுக்க முடியாமல் பாதியில் நிற்கிறது...
ஆனா மக்கா இங்கு தடுக்கி விழுந்தா பரோட்டா கடையும், பிரியாணி கடையும், ஐசுகிரீம் பார்லரும் கொடி கட்டி பறக்கிறது பார்த்தா, நான் என்னத்த சொல்ல போங்க... பிரியாணி கடை விற்பனை இந்தியாவில் 4000கோடியாமே... ஆமா நீ பார்த்தே ..... :(

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக