புதன், 28 நவம்பர், 2018

இனி டைப் செய்யத் தேவையில்லை; பேசுவதன் மூலமே தமிழில் SMS அனுப்பலாம்



மெல்லத் தமிழ் இனி தழைக்கும்!!

ஆம் நண்பர்களே நீண்ட நாட்களாக நாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மாற்றம் கடைசியில் வந்தே விட்டது. குகூளின் குரல்வழி குறுஞ்செய்தி தட்டச்சு சமீபத்தில் மூன்று வாரங்களுக்கு முன்பு தமிழில் வெற்றிகரமாக சாத்தியமாக்கப்பட்டுள்ளது.


இனி நண்பர்கள் தமிழில் தட்டச்சு செய்ய வேண்டியதில்லை, தங்கள் குரல் மூலமே கட்டுரைகளையும், குறுஞ்செய்திகளையும் வரையலாம்.


ஆப்பிள் ஐபோனில் அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை கீழே தொகுத்துள்ளோம்.

  1. முதலில் ஆப்பிள் ஸ்டோரில் குகூள் ஜி-போர்டினை தரவிறக்கம் செய்யவும்.

2. பின்பு ஐஓஎஸ் இயங்குதளத்தின் செட்டிங் பகுதியில், உங்கள் பிற அப்ளிகேசன்களின் வரிசையில் ஜி-போர்டினையும் பார்க்கலாம். (குறிப்பு: அப்ளிகேசன் இறங்கிய உடன் சிறிது நிமிட காத்திருப்பிற்கு பிறகே தெரியும்).


3.அதனுள் உட்புறம் சென்றால் பின்வருமாறு கீபோர்டுஸ் என்றிருக்கும் பகுதியை தட்டினால்



3 a) ஜி-போர்டு என்றிருக்கும்.



4. அதனை தெரிவு செய்தால், முழுவதுமாக அனுமதியுங்கள் என்ற தேர்வு வரும், அதனையும் தெரிவு செய்தால் பின்வருமாறு எச்சரிக்கை செய்தி திரையில் விரியும், அங்கும் அனுமதி கொடுப்பதின் மூலம் உங்கள் ஜி-போர்டு தட்டச்சு வசதி இப்பொழுது ஐஓஎஸ் தட்டச்சு மேலே தெரியும்.

4 a) ஐஓஎஸ் தட்டச்சின் உலக உருண்டையை தொடர்ச்சியாக அழுத்துவதின் மூலம் ஜி-போர்டினை தேர்வு செய்துகொள்ளலாம்.




5. மீண்டும் ஜி-போர்டு அப்ளிகேசனுள் சென்று, தமிழ் மற்றும் இதர தமிழ் குறித்த தெரிவுகளை தேர்வு செய்யவும்.





 6. மீண்டும் உங்கள் குறுஞ்செய்தியுனுள் உலக உருண்டையை தொடர்ச்சியாக அழுத்துவதன் மூலம் ஜி-போர்டு தட்டச்சினை தெரிவு செய்யலாம், மீண்டும் உலக உருண்டையை அழுத்தி தமிழுக்கு தாவலாம்.

6 a) பின்பு கடைசியாக உங்கள் தட்டச்சின் வெளி (SPACE BAR) பகுதியில் தெரியும் மைக்கை அழுத்தி

6 b) உங்கள் குரல் உள்ளீடை கொடுக்கவும் அது குகூளீன் செர்வருக்கு சென்று உடனடியாக தமிழ் எழுத்துக்களாக தெரியும்.





***ஆன்ட்ராய்டு திறன் பேசியிலும் இந்த வசதி இருக்கிறது.



பாதகம்:
1. ஜி-போர்டு தட்டச்சினை தெரிவு செய்வதால், நாம் செய்யும் அனைத்து பணிகள் / தகவல்களும் குகூள் செர்வருக்கு செல்வதால் பாதுகாப்பு குறைபாடு எழ வாய்ப்பு உள்ளது. நமது வணிகம், வங்கி தகவல்களூம் குகூளுக்கு தெரிய வாய்ப்பு உள்ளது.

2. ஆப்பிள் ஐஓஎஸ் தட்டச்சு பழகியவர்களுக்கு ஜி-போர்டு தட்டச்சு சிறிது சிரமம் அளிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக