திங்கள், 22 ஜனவரி, 2018

+2க்குபிறகு என்ன படிக்கலாம் (வர்லாம் வா ! வர்லாம் வா!! பகுதி - 2)

நாளைய தமிழகத்தினை வடிவமைக்கப் போகும் இளந்தலைமுறைகளுக்கான வாய்ப்புகளை பற்றி பேசுவது இந்த கட்டுரையின் நோக்கம். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பிறகு அவர்கள் முன் குவிந்து கிடக்கும் வாய்ப்புகளையும் அதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதனை பற்றியும் விளக்கும் ஒரு சிறிய வெளிச்சத் தொடர்.   

இந்தியாவும் இடஒதுக்கீடும்
மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது தமிழக அரசினரால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு பின்வருமாறு இடஒதுக்கீடு பின்பற்றப்படும்.
பிரிவு
வகுப்பு
சதவீதம்
பொது
அனைவரும்
31
பிற்படுத்தப்பட்டோர்
பிசி முசுலீம் அல்லாதவர்
26.5
பிற்படுத்தப்பட்டோர்
பிசி முசுலீம்
3.5
மிகவும்பிற்படுத்தப்பட்டோர்
எம்பிசி
26.5
அட்டவணை பட்டியல்
எஸ்சி
15
அட்டவணை பட்டியல்
எஸ்சி அருந்ததியர்
3
அட்டவணை பட்டியல்
எஸ்டி
1
குறிப்பு: எஸ்சி அருந்ததியர் இடஒதுக்கீடு உள் ஒதுக்கீட்டின் கீழ் வரும் என்பதால் மற்ற எஸ்சி மாணவர்கள் இந்த 3% பெற முடியாது. ஆனால் அருந்ததியர் மாணவர்கள் எஸ்சி 15% பிரதிநிதித்துவம் பெற முடியும்.
தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு பின்வருமாறு இடஒதுக்கீடு பின்பற்றப்படும்.
பிரிவு
வகுப்பு
சதவீதம்
பொது
அனைவரும்
50.5
பிற்படுத்தப்பட்டோர்
ஒபிசி
27
அட்டவணை பட்டியல்
எஸ்சி
15
அட்டவணை பட்டியல்
எஸ்டி
7.5
மேலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில மக்கள் விகிதாச்சாரத்திற்கேற்ப இடஒதுக்கீடு மாறுபடுகின்றது.
.கா, 100 மருத்துவ இடங்களுக்கு தமிழக அரசு நடத்தும் தேர்வுகளை எடுத்துக்கொள்வோம். 1000 மாணவர்கள் தேர்வுகளில் பங்கு கொண்டு ரேங்கினை பெற்றால், முதல் 31 இடங்களை பெறும் அனைத்து பிரிவு மாணவர்களும் பொதுப் பிரிவின் கீழ்வரும் இடங்களை நிரப்புவர். பின்பு அந்தந்த சாதிகளுக்குள்ளே முதலிடம் வரும் மாணவர்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அதாவது 32வது இடம் பிடித்த ஒரு பிசி மாணவர், பிசி ஒதுக்கீட்டின் கீழுள்ள முதல் இடத்தினை பெறுவார், அவருக்கு அடுத்த 26 இடங்களை பெறும் பிசி மாணவர்கள் பிசி ஒதுக்கீட்டினை நிர்ப்புவர். இவர்களால் மற்ற பிரிவுக்குள்ளே இடம் பெற முடியாது. இது போன்று அனைத்து பிரிவினரும் அவர்களது இடஒதுக்கீட்டின் கிழ் இடம் பெறுவர்.
வேலை வாய்ப்பு துறைகள்:
1) அரசாங்க வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் , பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டி பிரிவுகளுக்கு பெரும்பாலும் 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ அல்லது ஐடிஐ இவற்றினுள் ஏதேனும் ஒரு கல்வி தகுதி அடிப்படையானது. மற்ற பிரிவுகளுக்கு பட்டப் படிப்புகள் தேவைப்படும். பெரும்பாலான வேலை வாய்ப்புகள் போட்டித்தேர்வின் அடிப்படையில் நிரப்பபடும். SSC, UPSC, RRB, TNPSC, TRB(தமிழ்நாடு அரசு) போன்ற தேர்வு வாரியங்கள் தேர்வினை நடத்தும்.
·         http://ssc.nic.in/
·         http://www.upsc.gov.in/
·         http://ctet.nic.in
·         http://trb.tn.nic.in/ ==> தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்
2. பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு போன்றவற்றிற்கு கல்வி தகுதியுடன், உடற்தகுதியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், இங்கு சாதீய இடஒதுக்கீடு பெரும்பாலும் கிடையாது, தகுதி அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர்.
அணுசக்தி, இந்திய கணித அறிவியல் கழகம் போன்ற சில துறைகளுக்கும் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2. மாநில காவல்துறைகளுக்கு மாநில அரசினரால் தேர்வு நடத்தப்படும்.
3. பொதுதுறை நிறுவனங்கள் தனியாக தேர்வினை நடத்துகிறது, வங்கிகளுக்கு IBPS வாரியம் தேர்வினை நடத்தும். 2. பெரும்பாலான பொதுதுறை நிறுவனங்கள் GATE(Graduate Aptitue Test in Engineering) அடிப்படையில்பொ தகுதியான பொறியாளர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கிறது. மேலும் முதுநிலை பட்ட மேற்படிப்புகளுக்கும், சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற நாடுகளிலுள்ள பல்கலைகழகங்கள் பட்டமேற் படிப்பிற்காக GATE- அடிப்படையிலேயே தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் GATE தேர்விற்கு ஒரு ஐஐடி பொறுப்பு எடுத்துக்கொள்கிறது. 2017ல் ஐஐடி ரூர்கேலா பொருப்பு எடுத்து தேர்வினை நடத்துக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் தேர்வு குறித்த அறிவிப்பு வரும், சனவரி மாதத்தில் தேர்வு நடக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு இந்த தேர்வு முடிவுகள் செல்லுபடியாகும். இந்தியாவில் பொறியியல் பட்ட மேற்படிப்பு மேற்கொள்ளவிருக்கும் வெளிநாட்டு மாணவர்களும் இந்த தேர்வினில் கலந்துகொள்வர்.
·         http://www.ibps.in/
4. தனியார் துறை நிறுவனங்கள்; இன்றளவில் இது மாபெரும் வேலை வாய்ப்பு வசதிகளை தருவதோடு மட்டுமின்றி பெரும் முன்னேற்றத்தினையும் அளிக்கிறது. நிறுவனங்களை பொறுத்து அவர்களின் தேர்ந்தெடுக்கும் முறை மாறுபடும்.
5. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வருங்காலங்களில் சுருங்க நேரிடும் (குறிப்பாக அந்தந்த தேசங்களின் உள்ளூர் மக்கள் வேலைவாய்ப்பு பறிபோவதால்), இருப்பினும் இன்றளவில் இதுவும் குறிப்பிடத்தக்கது. இதற்கேன்றே வேலைவாய்ப்பு ஏஜென்சிகள் செயற்படுகிறது. ஆனால் தகுதியான ஏஜென்சிகளை அடையாளம் காணவேண்டும்.
6. சொந்த தொழில் தொழில்முனைவோர்.
7. சவால்கள்
பத்தாண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருந்தால் வேலை பெறுவது எளிது. ஆனால் சமீபகாலத்தில் ஏற்பட்ட Automation, Artificial intelligence, Cloud computing, Robotics ஆகியவற்றின் வளர்ச்சி காரணமாக பல்வேறு வழமையான துறைகளில் வேலைவாய்ப்பு குறைகிறது. அவற்றுள் உதாரணம், வங்கி, ஆட்டோமொபைல், ஐடி ஆகிய துறைகளில் வேலைக்கு ஆட்கள் எடுப்பது குறைகிறது. ஆனாலும் சகோதரர்கள் கவலைபடவேண்டாம். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் நிபுணத்துவத்தை அதிகரிப்பதுடன் மேலே சொன்ன Automation, Artificial intelligence, Cloud computing, Robotics, Programming போன்ற வற்றில் நிபுணத்துவம் பெறுவது உங்கள் வேலை வாய்ப்பு வசதியை அதிகரிக்கும்.
ஒருபுறம் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் வேளையில் மறுபுறம் நிறுவனங்கள் தகுதியான வேலை ஆட்கள் கிடைப்பதில்லை என திண்டாடுகின்றன. எனவே கல்லூரி படிப்பு/தேர்வு என்பதனை தவிர்த்து நீங்கள் எந்த துறையில் பிரகாசிக்கவிரும்புகிறீர்களோ அந்த துறை சார்ந்த தேவைகள், நிபுணத்துவம் ஆகியவற்றில் திறமைகளை வளர்த்துக்கொள்ள தவறாதீர்கள்.



வெளிநாட்டில்/வெளிஊர்களில் படிக்க:
படிக்கப்போகும் தேசத்தின்/ஊரின் தற்போதைய அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவேண்டும். இருப்பிடம் பெரும்பாலும் பள்ளி விடுதிகளில் கிடைத்துவிடும் என்பதால் கல்வி கட்டணத்தோடு படிக்கும் காலத்திற்கேற்றவாறு மாத வாரியாக தேவைப்படும் பின்வரும் செலவினை தோராயமாகவாது கருத்தில் கொள்ளவேண்டும் அவை, உணவு, உடை, போக்குவரத்து, காப்பீடு, இதர கல்வி செலவுகள், தொலைபேசி, இணையம், டிவி, பொழுதுபோக்கு. வெளிநாடுகளில் ஆண்டுக்கட்டணம் (கல்விகட்டணம், தங்கும் செலவு உட்பட)குறைந்தபட்சம் 25இலட்சம் (40000 அமெரிக்க டாலர்கள்) தேவைப்படும், இந்திய வங்கிகளும் வெளிநாடு சென்று படிக்க கல்வி கடன் வழங்குகிறது. இன்றளவில் அயல்நாடுகளில் கல்வி பயில ஆலோசனை வழங்குவதற்கென்றே ஏஜென்சிகளும் செயல்படுகின்றன.
பெரும்பாலான வெளிநாட்டு பல்கலைகழகங்கள் நமது மாணவர்களின் ஆங்கில திறமையை சோதிப்பதற்காக பின்வரும் தேர்வினை நடத்துகிறது.
1). ஆங்கில பரிசோதனை தேர்வு : உங்கள் தேர்வினில் உள்ள பல்கலைகழகம் அனுமதிக்கின்ற பின்வரும் ஏதேனும் ஒரு தேர்வில் தேர்வினில் தேர்ச்சி பெருவது அத்தியவாசியமாகும். TOFEL(Test Of English as a Foreign Language)/IELTS(International English Language Testing System)/PTE(The Pearson Test of English Academic ) வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் அடிப்படையான ஆங்கில தேர்வு. பெரும்பாலான வெளிநாடுகளில் மாணவர்கள் பகுதி நேர வேலை செய்ய அனுமதியுண்டு.
1ஆ). ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகளில் பெரும்பாலும் உள்ளூர் மொழிகளிலே கல்வி பயிற்றுவிப்பு இருந்தாலும், சமீபமாக ஆங்கில வழியிலும் சொல்லித்தருகிறார்கள்.
2). பள்ளிபாடத்திட்டத்தினை பரிசோதனை செய்வதாக இருக்கும். கணிதம், அறிவியல், சமூகம், உட்படுத்திய பாடத்திட்டமாகும்
2அ). GRE/ACT = வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வு 
2ஆ). ACT/SAT(Standarized Test) = அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வு
2இ). GMAT(Graduate Management Admission Council) = மேலாண்மை பள்ளிகளில்(MBA Schools) சேர்வதற்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வு; இந்திய வணிக கல்லூரிகளும் இந்த தேர்வினை வலியுறுத்துகிறது
2ஈ). ISAT(International Student Admission Test) = வெளிநாடுகளில் உள்ள மருத்துவ பல்கலைகழகங்களில் சேர்வதற்கு தேவைப்படும் நுழைவுத்தேர்வு
3. SOP (STATEMENT OF PURPOSE) + LOR(Letter of Recommendation) ==> வெளிநாடுகளில் பயில விரும்பும் மாணவர்கள் இந்த இரண்டு ஆவணங்களையும் சேர்த்து விண்ணப்பத்துடன் சமர்பிக்கவேண்டும். SOPல் ஏன் இந்த படிப்பினை இந்த பல்கலைகழகத்தில் பயில விரும்புகிறோம் என்பதனை குறிப்பிடவும். LORல் ஏன் நீங்கள் சிறந்த பிரதிநிதி என்பதை பெரும்பாலும் உங்கள் ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்படவேண்டும்.
4.மாணவர்கள் தங்கள் பள்ளி பாடத்திட்டத்தினை தவிர்த்து சூட்சம தேர்வு(Aptitude Test), பகுத்தறிவு தேர்வு(Reasoning Test), உளவியல் சோதனை(psychometric test), நுண்ணறிவு தேர்வு (IQ Test), கணினி போன்றவற்றிலும் இயல்பிலேயே கவனம் செலுத்துவது நல்லது.
5. சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியுசிலாந்து போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுக்கிறது.
அச்சம் தவிர்!
இன்றளவில் பெரும்பாலான கல்வி நிலையங்களில் பயில, நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற நுழைவுத்தேர்வு அவசியமாகிறது. நமது ஆட்சியாளர்களின் சமீபத்திய குழறுபடிகளினால் மாணவர்களிடையே நுழைவுத்தேர்வு குறித்த சந்தேகங்களும், தன்னம்பிக்கை குறைவுகளும் அச்சத்தினை விதைக்கின்றது. ஆனால் இது தேவையற்றது. அனைத்து தேர்வுகளுக்கும் அடிப்படியான பாடத்திட்டம் குறித்த விளக்கங்கள் இணையத்தளத்தில் பரவலாக கிடைக்கிறது. மேலும் நமது பாடத்திட்டமானது (சம்ச்சீர் கல்வி உட்பட) குறைந்தப்பட்சம் 60 முதல் 70சதவீத கல்லூரி/நிறுவன தேர்வுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணமே உள்ளது ஆக பாடத்திட்டத்தினை தெளிவாக அனைத்தினையும் படிக்கவேண்டும். (கடந்த காலங்களில் 11ம் வகுப்பு பாடங்களை தவிர்ப்பது பரவலாக வழக்கத்திலிருந்தது). பொதுவாக பள்ளி/கல்லூரி தேர்வுகள் விரிவாக(Descriptive/Subjective) பதிலளிக்கும் வண்ணம் இருக்கும், ஆனால் நுழைவுத்தேர்வுகள் பெரும்பாலும் ஒரு வரியில் மிகசரியானவற்றை(MCQ: Multiple Choices Question/Obejective) தேர்ந்தெடுக்கும் வண்ணமிருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக