சனி, 27 ஜனவரி, 2018

+2க்குபிறகு என்ன படிக்கலாம் (வர்லாம் வா ! வர்லாம் வா!! பகுதி - 3)

முக்கியமான தேசிய கல்வி நிறுவனங்கள் (Institutes of National Importance)

·         கல்வி நிறுவனம்: National Institute of Technology (NIT)

முன்பு இது பிராந்திய பொறியியல் கல்லூரி(Regional Engineering Colleges) என்றழைக்கப்பட்டது, 2007ல் சிறப்பு சட்டம் முலம் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து தன்னாட்சி பல்கலைகழகங்களாக அங்கீகாரம் வழங்கி, IITக்கு இணையாக மாற்றியது. மொத்தம் 33 கல்லூரிகள் உள்ளன.
இருப்பிடம்: திருச்சி, காரைக்கால், கொச்சி, வராங்கல், மங்களூர், தில்லி மற்றயவை...

பட்டம்
: Btech., in Chemical Engineering, Civil Engineering, Computer Science and Engineering, Electrical and Electronics Engineering, Electronics and Communication Engineering, Instrumentation and Control Engineering, Mechanical Engineering, Metallurgical and Materials Engineering, Production Engineering

நுழைவுத்தேர்வு
 : JEE(Main);
விவரம்
விளக்கம்
தேர்வுப்பெயர்
Joint Entrance Examination (JEE) Main ,
கலந்துகொள்வோர் எண்ணிக்கை
தேசம் முழுவதும் 12இலட்சம் பேர்
தேர்வு வகை, நடத்துபவர்
Undergraduate (UG), CBSE,
தேர்வுமுறை
Online and Offline
நேரம், வினா வகை,
3 hours, Multiple Choice Questions (MCQ),
வினா எண்ணிக்கை, மதிப்பெண்
90 வினாக்கள் ( 11+12ஆம் வகுப்பு இயற்பியல், வேதியல், கணிதத்திலிருந்து 30வினாக்கள்), 360 (ஒரு வினாவுக்கு 4மதிப்பெண், -1 for Negative marks)
முதல்தாள்
B.Tech / B.E.(Technology and Engineering; 8 semester) ; Online + Offline
இரண்டாம்தாள்
B.Arch / B.Planning(Architecture; 10 semester); Offline
பதிவுசெய்தல்
டிசம்பர் முதல்வாரம் முதல் ஜனவரி 3ஆம் வாரம் வரை
தேர்வு நடைபெறும் காலம்
Offline exam (paper 1& 2) ஏப்ரல் முதல் வாரம் ;Online exam ஏப்ரல் இரண்டாம் வாரம்
தேர்வு முடிவு
ஏப்ரல் நான்காம் வாரம்
கலந்துகொள்ளும் எண்ணிக்கை
3முறை இந்த தேர்வு எழுதலாம்

·         கல்வி நிறுவனம்: Indian Institute of Technology (IIT)


ஐஐடி பட்டதாரிகளுக்கு உலகாளவிய அளவில் பெரும் வரவேற்பு இருப்பதினால் கடும் போட்டிகள் மாணவர்களிடையே இருக்கிறது. தமிழகத்தின் பங்களிப்பு ஐஐடிகளில் மற்ற மாநிலங்களை விட குறைவு. அவர்களது நுழைவுத்தேர்வு பெரும்பாலும் மத்திய பாடத் திட்டத்தினை அடிப்படையாக கொண்டதினால் தமிழக மாணவர்களினால் அதை கடக்கமுடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து ஐஐடிக்களையும் உள்ளடக்கிய குழு JEE(Main) நுழைவுத்தேர்வுக்கு மட்டும் ஆட்சேபம் தெரிவித்தது, மற்ற பொறியியல் நிறுவனங்களுக்கும் தங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் மறைந்துவிடும் என தெரிவித்து JEE(Advance)  கூடுதலாக நடத்தி வருகிறது. 

இருப்பிடம்:  சென்னைபாலக்காடுதிருப்பதிஹைதராபாத்தார்வாத்(கருநாடகம்), மும்பைகோரக்பூர்கான்பூர்டெல்லிகவுகாத்திரூர்க்கிபாட்னாகாந்திநகர்புவனேசுவர்ரோபர்(பஞ்சாப்), ஜோத்பூர்(ராஜஸ்தான்), மான்டி(இமாச்சல்பிரதேசம்), இந்தூர்(மத்தியபிரதேசம்), வாரணாசிபிலாய்கோவாஜம்முதான்பாத்  ஆகிய 23 இடங்களில் உள்ளது.

ஐஐடி இருப்பிடங்கள் நன்றி:தமிழ் வீக்கிப்பீடியா


பட்டம்: Btech in Civil Engineering, Chemical Engineering, Aerospace Engineering, Computerscience and Engineeering, BioTechnology, Electrical Engineering, Mechanical Engineering, Metallurgical and Materials Engineering, Naval Architecture and Ocean Engineering, Ocean Engineering, Engineering Physics, Textile Technology, Earth science, Mine Engineering
குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகள் சில ஐஐடி வளாகங்களில் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. சில ஐஐடி வளாகங்களில் DUAL Degree(BTech+MTech) 5வருட ஒருங்கினைந்த பட்டப்படிப்புகளும் கற்பிக்கப்படுகிறது.

நுழைவுத்தேர்வு : JEE(Main) + JEE(Advance)
விவரம்
விளக்கம்
தேர்வுப்பெயர்
Joint Advance Examination (JEE Advance), http://www.jeeadv.ac.in/
கலந்துகொள்வோர் எண்ணிக்கை
தேசம் முழுவதும் 2இலட்சம் பேர்
தேர்வு வகை, நடத்துபவர்
Undergraduate (UG), One of the IIT,
தேர்வுமுறை
Online
நேரம், வினா வகை,
3 hours, Multiple Choice Questions (MCQ),
வினா எண்ணிக்கை, மதிப்பெண்
90 வினாக்கள் ( 11+12ஆம் வகுப்பு இயற்பியல், வேதியல், கணிதத்திலிருந்து 30வினாக்கள்), 360 (ஒரு வினாவுக்கு 4மதிப்பெண், -1 for Negative marks)
JEE Advance Test
B.Tech / B.E.(Technology and Engineering; 8 semester) ; Online 2 தாள்கள்(இயற்பியல், வேதியல், கணிதம்)
பதிவுசெய்தல்
ஏப்ரல் கடைசி வாரம்
தேர்வு நடைபெறும் காலம்
மே மூன்றாம் வாரம்
தேர்வு முடிவு
ஜீன் இரண்டாம் வாரம்
கலந்துகொள்ளும் எண்ணிக்கை
2முறை இந்த தேர்வு எழுதலாம்
JEE Advanced 2018 Architecture Aptitude Test
B.Arch in IIT Kharagpur and IIT Roorkee.
பதிவுசெய்தல்
ஜீன் இரண்டாம் வாரம்
தேர்வு நடைபெறும் காலம்
ஜீன் மூன்றாம் வாரம்
தேர்வு முடிவு
ஜீன் கடைசி வாரம்
மேற்படிப்புகள்: MTech, MSc., MS, Phd, PGDiploma, MA
குறிப்பு: ஐஐடிகள் சமூக அறிவியல் மற்றும் மனிதநேயம் ஆகிய பாடபிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்புகளை(MA) வழங்குகிறது, ஐஐடி சென்னை இதற்காக தனியாக HSSE( Humanities and Social Sciences Entrance Examination ) நுழைவுத்தேர்வினை நடத்துகிறது.


·         கல்வி நிறுவனம்: Indian Institute of Science Education and Research (IISER)

நல்ல தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை அடிப்படை அறிவியலில் வழங்கும் பொருட்டு 2006ல் இந்த கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது.
இருப்பிடம்: திருவனந்தபுரம், திருப்பதி உட்பட 7 இடங்களில்

பாடப்பிரிவுகள் : BSMS(Integrated course) in Physics, Chemistry, Biology, Maths
இங்கு ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்புகள் (3+2) வழங்கப்படுகிறது.

நுழைவுத்தேர்வு : JEE(Main) + JEE(Advance)



·         கல்வி நிறுவனம்: Indian Institutes of Information Technology (IIIT)

இருப்பிடம்: காஞ்சிபுரம், சீறிசிட்டி திருச்சி, கோட்டயம், உட்பட 23 இடங்களில்; (Institutes of National Importanceகீழ் காஞ்சிபுரம், சீறீசிட்டி உட்பட 7கல்வி நிறுவனங்கள் வருகிறது; திருச்சி, கோட்டயம் போன்ற இடங்களிலுள்ள நிறுவனங்கள் PPP திட்டத்தின் கீழே வருகிறது)

பாடப்பிரிவு: Btech in., Computer Engineering, Electronics and Communication Engineering, Mechanical Engineering, Smart Manufacturing
நுழைவுத்தேர்வு:JEE MAIN



·         கல்வி நிறுவனம்: School of Planning and Architecture

இருப்பிடம்: விஜயவாடா, போபால், புதுதில்லி
பாடப்பிரிவு: Bachelor of Architecture, Bachelor of Planning ஆகியவற்றில் பல்வேறு பிரிவுகளில் பட்டம் வழங்குகிறது.
நுழைவுத்தேர்வு:JEE MAIN



·         கல்வி நிறுவனம்: National Institue of Design

இருப்பிடம்: அகமதாபாத், விஜயவாடா, பெங்களூர்
பாடப்பிரிவு: Bachelor of Design (B.Des)(4year), Graduate Diploma Programme in Design (GDPD) (4year)

·         கல்வி நிறுவனம்: Rajiv Gandhi National institue of youth Development

இருப்பிடம்:காஞ்சிபுரம்
பாடப்பிரிவு:B.Voc. Apparel Manufacturing & Entrepreneurship and B.Voc. Fashion Design & Retail

·         கல்வி நிறுவனம்: National Law School

இருப்பிடம்: திருச்சி, பெங்களூர் உட்பட 18 இடங்களில்
நுழைவுத்தேர்வு: Common Law Admission Test(CLAT)
பாடப்பிரிவுகள்: BA(L.L.B) and B.Com(L.L.B)

·         கல்வி நிறுவனம்: அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS)

இருப்பிடம்: தில்லி, போபால், புவனேசுவர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ்
நுழைவுத்தேர்வு: aiimsexams
பாடப்பிரிவுகள்: MBBS, BSC in Nursing(HONS, POST BASIC), Bsc in optometry and Radiotheraphy

·         கல்வி நிறுவனம்: ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(JIPMER)

இருப்பிடம்: புதுச்சேரி, காரைக்கால்
நுழைவுத்தேர்வு: Jipmer exam
பாடப்பிரிவுகள்: MBBS, BSc (Medical Laboratory Technology), BSc( Allied Medical Sciences- Cardiac Lab Technology/Dialysis/Neuro/OT), BMRSc (Bachelor of Medical Record Science). BSc (Nursing)

·         கல்வி நிறுவனம்: இந்திராகாந்தி திறந்தவெளி தேசிய பல்கலைக்கழகம்

இருப்பிடம்: புதுதில்லி
இது பல்வேறு பாடப்பிரிவுகளில் தொலைதூர கல்வியை(Distance Education) வழங்குகிறது.

·         ல்வி நிறுவனம்: கலாசேத்ரா பவுண்டேசன் (kalakshetra Foundation)

இருப்பிடம்: சென்னை
பாடப்பிரிவு: Diploma in Dance(பரதநாட்டியம்), Music(கர்நாடக இசை) and visual arts(4year course)
நுழைவுத்தேர்வு : Practical Aptitue test and Interview
7
முதல் 13 வயது வரையுள்ள சிறார்களுக்கும் சிறப்பு வகுப்புகள் உள்ளன.

·         கல்வி நிறுவனம்: Dakshina Bharat Hindi Prachar Sabha


இருப்பிடம்: சென்னை
ஹிந்தி மொழியில் தேர்ச்சி பெற தேவையான வழிமுறைகளையும், தேர்வுகளையும் வழங்குகிறது. மேலும் தட்டச்சு(Typewriting exam) தேர்வுகளையும் நடத்துகிறது
.

குறிப்பு : ஐஐஎம், தேசிய மருந்தியல் (Pharmacy) கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சிறீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற நிறுவனங்கள் முதுகலை படிப்புகளை வழங்கி வருகிறது. அதுபற்றிய விவரங்களை பின்னர் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக