செவ்வாய், 28 ஏப்ரல், 2015

நேபாளத்தில் கடும் நிலச்சரிவு

நேபாள மக்களிடையே காலம்காலமாக இருந்து வரும் நம்பிக்கை ஒவ்வொரு 80வருடத்திற்கொருமுறை கடும் நிலச்சரிவு ஏற்படும் என்பதே. இந்த முறையும் அந்த நம்பிக்கை பொய்த்துப்போகவில்லை, கடந்த சனியன்று 25 ஏப்ரலில், 81 வருடங்களுக்கு பிறகு "7.9 ரிக்டர்" அளவில் நேபாளம் சந்தித்த கடும் நிலச்சரிவு இது. இந்த நிமிடம் வரை சாவு எண்ணிக்கை 5000-ஐ தொட்டுவிட்டது. 

நேபாளத் தலைநகர் காட்மாண்டூவிலிருந்து சுமார் 80கி.மீட்டர் தொலைவிலுள்ள லம்ஜங்க் என்ற இடத்தை மையமாக (epicenter) கொண்டு இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் பாதிப்பு இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது.
  
                                                                                                                                                                                

காட்மாண்டூவின் பல தொன்மையான கட்டிடங்கள் சிதிலமடைந்துவிட்டது. யுனெஸ்கோவினால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்த, 1832ல் கட்டப்பட்ட  தாராகாரா டவரும் முற்றிலுமாக மண்ணுக்குள் போனது. கடந்த இரண்டு நாட்களாகவே நேபாளம் தொடர்ந்து நிலஅதிர்வை எதிர்கொண்டு வருகிறது.

 நேபாளம் முற்றிலும் சிதிலமடைந்துவிட்டது, இதிலிருந்து மீண்டுவர அமெரிக்க டாலர் 5பில்லியன் தேவைப்படலாம் இந்த தொகை நேபாளத்தின் ஜிடிபியில் 20% ஆகும். இந்திய அரசாங்கம் உடனடியாக மீட்பு பணியை முடுக்கிவிட்டு உதவியுள்ளது.

எவரெஸ்ட் சிகரத்திலும் நிலச்சரிவின் காரணமாக கடும் பனிச்சரிவு (Avalanche) ஏற்ப்பட்டுள்ளது. எவரெஸ்டில் ஏறுவது என்பது நேபாள அரசிற்கு மிகுந்த அன்னிய செலவானியை ஈட்டித்தரும் சுற்றுலா ஆகும். கடந்த சனியன்று அடிப்படை முகாமில் சுமார் 800 பேர் இருந்ததாகவும், பனிச்சரிவின் காரணமாக 18பேர் இறந்து போயிருக்ககூடும் என்று நம்பப்படுகின்றது.

"முகாம் 1" வரையே ஹெலிஹாப்டர் போக நேரிடும், கடவுளின் கிருபையால் அது பனிச்சரிவினால் பாதிக்கப்படாத இடத்தில் அமைந்திருந்ததால் அங்குள்ளவர்கள் தப்பியிருக்ககூடும் என்று நம்பப்படுகின்றது. ஆயினும் சிறிய ஹெலிஹாப்டர்களையே மீட்பு பணிக்கு பயன்படுத்த முடியும் என்பதால், ஒரு நேரத்தில் இரண்டு மலையேறும் வீரர்களை மட்டும் மீட்க நேரிடுகிறது.

"முகாம் 2ம்" அதற்க்கும் மேலுள்ளவர்கள் முகாம் 1க்கு நடந்து வந்து ஹெலிஹாப்டர் உதவியுடனே பாதுகாப்பாக திரும்ப நேரும் என்று நம்பப்படுகின்றது.

கீழேயுள்ள படத்தினை தெளிவாக பார்க்க பெரிதாக்கி பார்க்கவும்.



வரலாறு:

இதற்க்கு முன்னர் கடும் நிலச்சரிவு ஏற்பட்ட வருடம் 1934 ஜனவரி 15ம் தேதி ஆகும். இதுவரை நேபாளம் சந்தித்த நிலச்சரிவில் ஆக மோசமானது இது 8.3ரிக்டர் அளவில், சுமார் 10000க்கும் மேற்பட்டோரை இந்தியாவின் பீகார் மாநிலம் மற்றும் நேபாளத்தில் காவு வாங்கிய கொடும் கனவு அது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக