வியாழன், 23 ஏப்ரல், 2015

என்னப்பா வேலைக்கு போகப் போறீங்களா

என்ன சகோதரர்களே, 16 வருடம் பள்ளி முதல் கல்லூரி வரை கல்வியை கற்று முடித்துவிட்டு அக்கடான்னு  வெளியே வரப்போறீங்களா... இதுகாறும் பெற்றோர்களின் காசினில் நமது அனைத்து தேவைகளையும் பென்சில் வாங்குவது முதல் வகுப்புக்கு பங்க் அடித்துவிட்டு திரைப்படம் பார்க்க செல்வது வரை நிறைவேற்றிக்கொண்டோம். இப்பொழுது நாம் பள்ளி எனும் சிறையிலிருந்து விடுதலை கிடைத்தவாறு உணர்வோம். ஆனால் அது உண்மையில்லை இனிதான் வாழ்க்கை எனும் செக்கினில் சுற்றப்போகும் பொதிமாடுகளாக மாறப்போகிறோம்.



என்னப்பா பயமுறுத்தகிறேன் என்று பார்க்கிறீர்களா, ஆயினும் அதுதான் உண்மை நம்ம அப்பா, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் செய்வதும் அதைத்தானே. சரி நாம் உளவியல் பிரச்சினைகளுக்குள் செல்லவேண்டாம். வேலையில் சேறுவதற்க்கு என்ன மாதிரியான தகுதிகளை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றது என்பதனை பற்றி பார்ப்போம்.

IF YOU ARE NOT  MAKING MISTAKES, THEN YOU ARE NOT DOING ANYTHING, I AM POSITIVE THAT A DO-ER MAKES MISTAKES. - JOHN WOODEN

கார்ப்பரேட் நிறுவனங்கள் நம் மாணவர்கள் வேலையில் சேர்ந்த முதல் நாளே வேலையை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், நம் கல்வியோ ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. நாமும் பள்ளி கல்லூரிகளில் புத்தகங்களில் உள்ளதை அப்படியே தேர்வில் வாந்தி எடுத்து மதிப்பெண்கள் எடுத்து வெளியே வந்துவிடுகிறோம். ஆனால் நிச உலகம் வேறுமாதிரியானது. இங்கு எங்கிருந்து எவன் எப்பொழுது எப்படி அடிப்பான் என்றே தெரியாது அதனால் சிலகாலம் தடுமாறிப்போகிறார்கள், அனுபவம் அவர்களை பக்குவப்படுத்தி பண்படுத்துகிறது. இதற்குள் அவர்கள் புண்பட்டுவிடுகிறார்கள், அந்த காயத்தின் அளவையே நாம் குறைக்கப்போகின்றோம் அதுதவிர இங்கு எதனையும் கற்றுக்கொடுக்கப்போவதில்லை ஆயினும் நாம் எதை, என்ன, எங்கே, எப்படி, எப்பொழுது செய்யவேண்டும் என்பதையே பகிரப்போகின்றோம்.

A DREAM DOES NOT BECOME REALITY THROUGH MAGIC; IT TAKES SWEAT, DETERMINATION AND HARDWORK - COLIN POWEL

வலைத்தளமா (அ) வலையா:
முதலில் சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறுங்கள். என்னடா இவன் அடிவயிற்றில் கை வைக்கிறானேனு பார்க்கிறீங்களா, ஏனெனில் சமூகவலைத்தளங்களில் நீங்கள் பகிர்வதற்கு நீங்களே பொறுப்பு, ஆகவே எந்த செய்திகளையும் அங்கே பகிரும்பொழுது கட்டுப்பாடு வேண்டும், அது நம்மில் பலபேருக்கு சாத்தியப்படாது அதனால்தான் வெளியேறுங்கள் என்று சொன்னது, அப்படியும் முடியாவிடில் குறைந்தப்பட்சம் அமைதியாக இருந்துவிடலாமே. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்கள் பகிரும் செய்திகளில் பிரச்சினை ஏற்படும்பொழுது கருணை காட்டாது, அதனால் "நம் சுவர் நம் உரிமை" என்ற வாதமெல்லாம் அங்கு எடுபடாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்.



நமக்காக நாம் பேசாவிடில் யார் பேசுவது:
நமது கல்லூரியின் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்துதான் நம்மை நேர்காணலுக்கே அழைப்பர், அதனால் தேர்ச்சி விகிதம் முதல் சிலவருடங்களுக்கு மிகமுக்கியத்துவம் வாய்ந்தது. பிற்பாடு நமது அனுபவத்தினை அடிப்படையாக வைத்து நேர்காணலுக்கு அழைப்பர். ஆக ரெஸ்யூம் (RESUME) தயார் செய்யும்பொழுது நிறுவனங்கள் வேண்டுகின்ற திறமைகள் உங்களிடத்தில் இருக்கும்பட்சத்தில் அதனை பிரதானமாக குறிப்பிடுங்கள், அதுதான் முதல்படி உங்களது ரெஸ்யூம் நேர்காணலுக்கு தேர்வாக. ஒரே மாதிரியான ரெஸ்யூம் தயார் செய்துவிட்டு அதனையே எல்லா நிறுவனங்களுக்கும் அனுப்பாதீர்கள், நிறுவனங்களுக்கு தகுந்தவாறு, வேலைக்கு தகுந்தவாறு உங்கள் ரெஸ்யூம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

WITH REALIZATION OF ONES OWN POTENTIAL AND SELFCONFIDENCE IN ONES ABILITY, ONE CAN BUILD A BETTER WORLD - DALAI LAMA


ஆள்பாதி ஆடை பாதி: ஆக நேர்காணலுக்கு மட்டுமின்றி வேலைக்கு சேர்ந்த பிறகும் உங்கள் வேலையின் தகுதிக்கும் தன்மைக்கும் தகுந்த உடையினை அணிந்துகொள்ளுங்கள். கஞ்சி போட்ட சட்டை உங்கள் தன்னம்பிக்கையினை உயர்த்தும் :) எப்பொழுதும் புன்சிரிப்பு மிகுந்த முகமும் (SMILING FACE), நேர்கொண்ட நடையும், துள்ளலும், வேகமும், நேர்மறை சிந்தனையும் (POSITIVE THOUGHTS), சுயமுனைப்பும் (SELF MOTIVATION), நேரமேலாண்மை (TIME MANAGEMENT) மற்றும் முன்னுரிமை அளிப்பது (PRIORITY) போன்றவை உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டும். ஆதலினால் உறக்கம்தனை சரியான அளவில் கொண்டு ஆதவனின் எழுச்சியோடு உங்கள் எழுச்சியும் இருக்கும் வண்ணம் பார்த்துக்கொண்டால், உங்கள் மேலாளர் உங்களிடத்து கொள்ளும் மதிப்பும் மிக்கதாகும்.

SUCCESS IS A SCIENCE, IF YOU HAVE THE CONDITIONS YOU GET THE RESULT - OSCAR WILDIE


பட்டயம் மட்டும் போதாது பட்டறிவு அவசியம்:  
அனுபவம் என்பது மிகப்பெரிய சொத்து. அது நாளடைவில் கைகூடும் ஆனால் எசமானர்கள் அதுவரை விட்டுவைக்க நமது பெற்றோர்கள் அல்ல, மரம் நட்டு, பூ பூத்து காய் காய்த்து கனி கனிக்க.. அவர்களுக்கு முதல் மாத சம்பளம் கொடுக்கும்பொழுதே நம்மிடமிருக்கும் திறமைகளை காசாக்கிவிடவேண்டும் என்பதுவே எண்ணமாக இருக்கும்.

ஒரு வேலையை முதலில் செய்யும்போது இருக்கும் படபடப்பு தவிப்பு, அனுபவம் கைகூடும்பொழுது நெளிவு சுழிவோடு வேகத்துடனும் விவேகத்துடனும் செய்துமுடிப்போம். பதினைந்து வருடங்களுக்கு முன்பு சீனியர்கள் செய்யும் அளப்பரை சொல்லி மாளாது. ஒரு சிறிய விசயத்தினை ஜீனியர்கள் கற்றுக்கொள்ளும் முன்னர் அவர்களை சுற்றலில் விடுவர், ஆனால் கூகுள் ஆண்டவர் வந்தபிறகு அனைத்தும் நம் விரலடியில் கற்றுக்கொள்ளலாம், அந்த வகையில் இந்த தலைமுறை லக்கியே. அனுபவம் கிட்டும்வரை சரியான வேலையென்றால் சொற்ப சம்பளத்தில் சேருவது தவறு எதுமில்லை ஏனெனில் இந்தியாவில் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு...

BE A STUDENT SO LONG AS YOU STILL HAVE SOMETHING TO LEARN, AND THIS WILL ALL YOUR LIFE - RODLFO COSTA

ராசநீதி எங்கேங்கினும்; அணுவைத் துளைத்தாலும் அரசியலே : அது இல்லாத இடம் எங்குமில்லை, அதனால் நாம்தான் நீக்கு போக்குடன் செல்லவேண்டும் இலட்சியத்தினை அடையும்வரை... இந்தவிசயத்தில் தமிழர்கள் மகாமட்டம், சொம்படிக்கவும் தெரியாது, காட்டிக்கொடுக்கவும் தெரியாது, மற்ற மாநிலத்தவர் இங்குதான் நம்மை வீழ்த்தி மேலாண்மை வட்டத்தினுள் நுழைந்துவிடுகின்றனர், நம் திறமையை வைத்து நம்மால் கடைசிவரை மிஞ்சிப்போனால் சூப்பர்வைசர் வரை முன்னேறிச் செல்லமுடிகின்றது. திறமை இருந்தால் மட்டும் போதாது, சட்டைக்கு வேண்டுமாயின் கஞ்சி போடலாம் நாம் கஞ்சி போட்ட சட்டை மாதிரி விறைப்பாக இருந்தால் கதைக்கு உதவாது ஆகவே கூச்சத்தினை விற்றுவிட்டு நம்மை எப்படி சந்தைபடுத்துவது என்பதில்தான் நாம் மேலேறிச் செல்வதில் நம் திறமை இருக்கிறது. பிரச்சினை ஏற்படும்பொழுது மட்டும் நம்முடைய பெயர் நம்மைக் கேட்காமலே மேல்மட்டத்தில் அடிபடும். அதுபோல நம்மால் நிறுவனத்திற்கு நற்பெயர் கிடைத்தால் அதுவும் மேல்மட்டத்தின் காதில் விழும்படி பார்த்துக்கொள்ளல் நலம்.
A PESSIMIST SEES THE DIFFICULTY IN EVERY OPPORTUNITY, AN OPTIMIST SEE THE OPPORTUNITY IN EVERY DIFFICULTY - WINSTON CHURCHIL

ஆப்பா (அ) ஆப்பிளா: குறிப்பிட்ட வேலையை செய்வதற்கு தேவையான அத்தனை திறமைகளும் நம்மிடம் இன்றைய நிலையில் இல்லாவிடினும் கவலை கொள்ளத்தேவையில்லை,  இலக்குகள் வைத்துக்கொண்டு செயற்படுவதின் மூலம் அதனை சாத்தியப்படுத்தலாம், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை சுயமதிப்பீடு செயவதன் மூலம் நம்முடைய முன்னேற்றத்தினை அளவீடலாம். இப்பொழுதெல்லாம் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களிலும் பெர்மான்ஸ் ரிவ்யு (PERFORMANCE REVIEW) என்று கூறிக்கொண்டு நம்மையே நமக்கான வாய்ப்பினை தேர்ந்தெடுத்துக்கொள்ளச் செய்து ஆண்டு இறுதியில் அதன் வளர்ச்சி மீது ஆய்வு செய்கின்றனர். மேலும் அதனை அடிப்படையாக கொண்டே ஆப்பா (அ) ஆப்பிளா எனக் கூறுகின்றனர்.

எந்தவிதமான வேலையாக இருந்தாலும் உங்கள் துறை சார்ந்த அறிவும், அனுபவத்தோடும் பின்வருவனவற்றிலும் அடிப்படை அறிவாவது இருக்குமாறு பார்த்துவைத்துக்கொள்ளுங்கள், அது உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். 

ஆபிஸ் - வேர்ட், எக்செல், பவர்பாயின்ட் (Office)
ஆங்கில அறிவும் அவசியமே (English)
கணக்கு மற்றும் தர்க்கஅறிவு(Reasoning)
அடிப்படை இயந்திரவியல், மின்னியில் (Basic Mechanics Electrical)
பகுப்பாய்வு செய்வது எப்படி (Analyse)
சிக்கல் (அ) பழுதுபார்ப்பது எப்படி (Troubleshooting)
வேலையில் சுய பாதுகாப்பு, (Safety)
கூகுளில் தேடுவது எப்படி, ஆவணப்படுத்துவது எப்படி, (Documentation)
பிறருடன் எப்படி பழகுவது (அ) சந்தைப்படுத்துதல் (Socialise (or) Sales)
முடியுமாயின் அடிப்படை மென்பொருள் அறிவு (Software)

மேலும் கூச்ச நாச்சம் பார்க்கமால் சொம்படிப்பது எப்படி என்பதையும் கற்றுத்தேர்வோம் :)

BELIEVE YOU CAN AND YOU ARE HALFWAY THERE - THEODORE ROOSEWELT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக