கடந்த 2014ம் ஆண்டு நடந்த புலிகளின் கணக்கெடுப்பில் இந்தியாவில் 2226புலிகள் இருப்பதாக தெரியவந்தது. கடந்த 2010ல் 1706 புலிகள் இந்தியாவில் இருந்தது. இது 2014ல் 30சதவீதமாக அதிகரித்து புலிகளின் எண்ணிக்கை 2226 ஆக உயர்ந்தது. இந்தியா முழுக்க பதினெட்டு மாநிலங்களில் 378000 சதுரகிமீட்டர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு நடந்தது.
மேற்குமலைத்தொடரினைச் சார்ந்த தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநிலங்கள் இணைந்து தேசத்தின் மூன்றில் ஒரு பங்கு புலிகளின் எண்ணிக்கையை கொண்டுள்ளது. கர்நாடகா மட்டும் அதிக அளவிலான புலிகள் எண்ணிக்கையை (406) தன்னகத்தே கொண்டுள்ள மாநிலமாக திகழ்கிறது.
முதுமலை, பந்திப்பூர், நாகர்கோல், வேநாடு சரகம் உலகிலேயே அதிக அளவிலான புலிகளை (570) கொண்டுள்ள பகுதியாக திகழ்கிறது.
தமிழ்நாடு:
தமிழ்நாடு:
தமிழகத்திலுள்ள நான்கு சரணாலயங்களில் இரண்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிகின்றது. மேற்குமலைத் தொடரில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்திலுள்ள 1408சதுரகிமீட்டர் சத்தியமங்கள அடர் வனபகுதியை அக்டோபர், 2013ல் தமிழ்நாடு அரசாங்கம் புலிகள் சரணாலயமாக அறிவித்தது. இது முதுமலை மற்றும் பந்திப்பூர் சரணாலயத்தினை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
முதுமலை புலிகள் சரணாலயம் 321சதுரகிமீட்டர் பகுதியை உள்ளடக்கியது, இந்த பகுதியில் கூடலூர் மற்றும் ஊட்டி வருகிறது. இங்கு மேய்ச்சலுக்காக விலங்குகள் ஊடுருவதும் மேலும் மனித நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகவும் விளங்குகிறது. இது வேநாடு மற்றும் பந்திப்பூர் சரணாலயங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது.
ஆனைமலை புலிகள் சரணாலயம் 959சதுரகிமீட்டர் பகுதியை உள்ளடக்கியது. இந்தப் பகுதியிலே பரம்பிக்குளம், ஆழியாறு, அமராவதி அணைக்கட்டுக்கள் உள்ளது. கோயம்புத்தூர், மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் வால்பாறை பகுதியை உள்ளடக்கியது.
களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் 895சதுரகிமீட்டரை உள்ளடக்கியது. இது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம், நாங்குநேரி தாலுகாவையும், நாகர்கோவில் மாவட்டத்திலுள்ள விளவங்கோடு, தோவாலை தாலுகாவையும் உள்ளடக்கியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக