தெர்மோவெல் (thermowell) என்பது தொழிற்சாலை சாதனங்களில் உள்ள வெப்பநிலை உணர்விகளைப் (temperature sensor) பாதுகாக்கும் குழாய் போன்ற ஒரு சாதனமாகும். குழாய் வடிவத்திலுள்ள தெர்மோவெல்லின் ஒரு பகுதி திறந்து இருக்கும், மறு பகுதி மூடப்பட்டு இருக்கும். மூடப்பட்ட பகுதியானது வெப்பநிலையை அளவீடு செய்ய வேண்டிய தொழிற்சாலை சாதனங்களோடு இணைக்கப்பட்டிருக்கும். தெர்மோவெல்லின் திறந்துள்ள பகுதியின் வழியாக வெப்பமானி (Thermometer), வெப்பமின் இரட்டை (Thermocouple), மின்தடை வெப்பமானி (Resistance Temperature Detector RTD), உள்ளே பொருத்தப்படும்.
வெப்பஇயக்கவியல் தத்துவத்தின் மூலம் தொழிற்சாலை சாதனங்களில் பயன்பாட்டில் இருக்கும் இரசாயணங்களின் வெப்பமானது தெர்மோவெல்லின் சுவரின் மூலமாக வெப்பநிலை உணர்வீக்கு கடத்தப்பட்டு அளவீடுப்படுகிறது. தெர்மோவெல்லின் சுவரின் பருமனை பொருத்தும், தெர்மோவெல்லுக்கும் வெப்பநிலை உணர்வீக்கும் இடையே உள்ள காற்றின் இடைவெளியை பொருத்தும் வெப்பக்கடத்தலின் அளவு மாறுகின்றது.
பயன்பாடுகள்:
1. தொடர்ச்சியான செயற்பாட்டில் இருக்கும் தொழிற்சாலை சாதனங்களில் உள்ள வெப்பநிலை உணர்வீகளை, சில நேரங்களில் பராமரிப்பு காரணங்களுக்காக தொழிற்சாலையின் ஒட்டத்தினை நிறுத்தாமல் திறக்கவேண்டி இருக்கும். தெர்மோவெல்லானது தொழிற்சாலை சாதனங்கள் மற்றும் வெப்பநிலை உணர்விகள் இரண்டுக்கும் இடையே உள்ள பாதுகாப்பு சாதனம், இதன்மூலம் தொழிற்சாலை செயற்பாட்டினை நிறுத்தாமல் வெப்பநிலை உணர்வீகளை மட்டும் பராமரிப்பு செய்யலாம்.
2. வெப்பநிலை உணர்வீகள் தெர்மோவெல் இல்லாமல் நேரடியாக தொழிற்சாலைகளில் உள்ள இரசாயணங்களின் வெப்பநிலையை அளவீடவேண்டிய சூழ்நிலையில் பயன்படுத்தப்பட்டால் இரசாயண அரிப்புகள் மூலம் பாதிக்கப்படும்.
தெர்மோவெல்லின் தோற்றமமைப்பு
1. குறுகலான தோற்றம் (Tapered) - இது உறுதியான வடிவமைப்பு ஆகும். இது விரைவில் வெப்பத்தை கடத்தும் வடிவமைப்பு ஆகும். ஆனாலும் இந்த வடிவமைப்பு இழுவைவிசையை ஏற்படுத்தும்.
2. நேரான தோற்றம் (Straight) - இது மிகஅதிக உறுதியான வடிவமைப்பு ஆகும். இது மெதுவாக வெப்பத்தை கடத்தும் வடிவமைப்பு ஆகும். இந்த வடிவமைப்பும் இழுவைவிசையை ஏற்படுத்தும்.
3. படிகள் தோற்றம் (Stepped) - இது குறைவான இழுவைவிசையை ஏற்படுத்தும். இது வேகமாக வெப்பத்தை கடத்தும் வடிவமைப்பு ஆகும். ஆனால் இது உறுதி குறைந்த வடிவமைப்பு ஆகும்.
தெர்மோவெல் இணைப்புமுறை
தெர்மோவெல் திருகு முறையிலும் (Threaded), பற்றவைத்தல் முறையிலும்(Welding type) மற்றும் flange type முறையிலும் இணைக்கப்படுகிறது.
குறிப்பு: தமிழ் வீக்கிபீடியா தொகுப்பிற்க்காக எழுத முயற்சிக்கப்பட்ட கட்டுரை. நாம் தேர்ந்தெடுக்கும் கட்டுரையானது ஏற்கனவே வீக்கிபிடியாவில் வராத சங்கதிகளாக பார்த்து எழுது முயலுகின்றோம்.
https://ta.wikipedia.org/wiki/தெர்மோவெல்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக