சனி, 3 ஜனவரி, 2015

குறிஞ்சி - ஒரு பயணம் ஒரு பார்வை

நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்,

குறிஞ்சி தனது மூன்றாவது ஆண்டினை நோக்கி உங்களின் தொடர்ச்சியான ஆதரவுடன் செல்கிறது. 


குறிஞ்சியின் பயணமும் பார்வையும்

முதல் வருடம்(2013) எங்களது நோக்கம் எண்ணிக்கையாகவே இருந்தது. அது கட்டுரையாகவோ இல்லை எண்ணற்ற நண்பர்களிடம் குறிஞ்சியை கொண்டு போய் சேர்ப்பதாகவோ இருக்கட்டும், எங்களது நோக்கமானது அதிகளவு என்பதாகவே இருந்தது. அந்த வகையில் பார்த்தீர்கள் என்றால் 2013ல் 180க்கும் அதிகமான கட்டுரைகளை சமைத்தோம். சினிமா சம்பந்தமான பதிவுகளை தவிர்த்து மற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்படி பார்த்துக்கொண்டோம்.

2014ல் எங்களது நோக்கம் தரமான கட்டுரைகளை சமைக்கவேண்டும், வடிவமைப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்பதாக இருந்தது. அந்த வகையில் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துக்கொண்டு பிழைகளின்றி தரமான கட்டுரைகளை பதிந்திருந்தோம் என்று நம்புகின்றோம். 2014ல் பொது தேர்தல் வந்ததால் அதிகளவில் அரசியல் கட்டுரைகள் குறிஞ்சியில் வந்திருந்தது. அன்றைய சூழ்நிலையில் எங்களவில் நாங்கள் நேர்மையாகவும் நடுநிலைமையாகவும் எங்களுக்கு முன்பு இருந்த அரசியல் தலைமையில் ஒன்றை தேர்ந்தெடுத்தோம். இன்றைய சூழ்நிலையில் நாங்கள் ஆதரித்து இருந்த ஆட்சியாளர்களாகவே இருந்தாலும் அவர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டுகின்றோம் என்பதையும் நினைவூட்டவே விரும்புகிறோம்.

2015ல் எங்களது நோக்கம் ஆவணப்படுத்துதல் என்பதாக உள்ளது. அதிக அறிவியல், பொருளாதாரம் சம்ந்தமான கட்டுரைகளை எதிர்பார்க்கலாம்.

சிவானந்தமும் குறிஞ்சியும்:
அந்த வரிசையில் நண்பர் திரு.சிவானந்தம் நீலகண்டன் அவர்கள் குறிஞ்சியோடு இணைந்து கட்டுரைகள் பதிவு செய்ய சம்மதிதுள்ளார். அவருக்கு குறிஞ்சி நண்பர்கள் குழு சார்பாக நன்றியும், வாழ்த்துக்களும். நண்பர் சிவா அதிக அளவில் புத்தகங்கள் வாசிப்பதில் விருப்பமும் வித்தகமும் உள்ளவர். அவரது தேடல் பிரம்மிக்கவைக்ககூடியதும் கூட. நமது நண்பர்கள் மூலம் அவரது புத்தகம் பற்றிய அனுபவ பதிவினை வெவ்வேறு சமயங்களில் நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம். ஆக நமது தனிப்பட்ட அனுபவம் குறிஞ்சியின் நண்பர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற ஆவல் உந்தி தள்ளியதின் விளைவு அவரது வருகை...

அவரது வாசிப்பு என்பது பரந்துபட்டது அது மக்கள்திலகம் முதல் லீக்குவான்யூ வரை இருந்தது. அவரது நுட்பமான பதிவு புத்தகத்தினை சுற்றியும் அதன் ஆழத்தினை நமக்கு விவரிப்பதுமாக இருக்குமே ஒழிய தனிப்பட்ட நபர்களை பற்றியதாக இருந்ததில்லை. அவரது எழுத்து நமக்கு அந்த புத்தகத்தினை படித்தே தீரவேண்டிய தாகத்தினை ஏற்படுத்தும். சந்தேகமில்லை நாம் அவரிடம் வேண்டுவது என்பது அவரது எழுத்து புத்தக மதிப்புரையோடு நின்று விடக்கூடாது. அவரது பகுப்பாய்வு திறன் (ANALYZING SKILL) சம்பந்தமான அறிவையும் நம்மோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறேன். வருக நம் சாதிக்கு பயன்படும் சங்கதிகளை பகிர்வோம். நம்ம சாதி தமிழ்சாதிதான் ப்பாஆJ

"Question கோயிந்து": முன்பு ஒருமுறை ஜெமோ ஒர் கட்டுரையில் தமிழில் புத்தக மதிப்புரை அளிக்ககூடிய தளம் ஒன்றைத்தவிர வேறு எதுவும் இல்லை என்றிருந்தார். அந்த வகையில் நண்பர் சிவா, ஆசானின் வருத்தத்தை தீர்ப்பார் என்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக