வெள்ளி, 2 ஜனவரி, 2015

மங்கள்யான் ஒரு பார்வை

மங்கள்யான் இந்திய விண்வெளி ஆய்வு சரித்திரத்தில் ஒரு மணிமகுடம். ஆகவேதான் மங்கள்யான் ஆய்வினை 2014ல் உலகஅளவில் நடந்த 25முக்கியமான அறிவியல் ஆராய்ச்சியில் ஒன்றாக "TIME" பத்திரிக்கை பட்டியலிட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் திரு.ராதாகிருஷ்ணனை உலக அளவில் முக்கியமான 10 அறிவியல் மேதைகளுள் பராம்பரியமிக்க "NATURE" பத்திரிக்கை பட்டியலிட்டுள்ளது.

மங்கள்யான்


வெறும் 450கோடியில் லட்சக்கணக்கான தூரத்திலுள்ள செவ்வாய்கிரகத்தினை சென்றடைந்ததையும் அதுவும் முதல் முயற்சியில் வெற்றிபெற்றதையும் இன்னும் அறிவியல் உலகம் நம்பவில்லை. 

2014 செப்டம்பர் 24ல் இது செவ்வாயின் வட்டப்பாதையில் இணைந்தது. அது 40கிலோ எரிபொருளை மிச்சமாக அப்பொழுது வைத்திருந்தது. முதலில் மங்கள்யானின் பயன்பாட்டு காலம் வெறும் 6மாதங்களாகவே திட்டமிடப்பட்டிருந்தது. தற்பொது அது சிலவருடங்களுக்கு நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதனுடைய மின்னனுசாதனங்கள் 15வருட காலம் உழைக்ககூடியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மங்கள்யானின் முக்கிய கருவிகள்:

மங்கள்யானின் கருவிகள்


1.லைமன் ஆல்பா ஓளிமானி (LYMAN ALPHA PHOTOMETER) :  இது செவ்வாயிலிருந்து காணாமல் போன நீரின் அளவை அளவிடும் கருவி.
2.மார்ஸ் கலர் புகைப்படக்கருவி
(MARS COLOR CAMERA) :  இது செவ்வாயின் இருப்பிடங்களை பற்றியும் வானிலை பற்றியும் புகைப்படம் எடுக்கும்.
3. மீத்தேன் சென்சார் ( METHANE SENSOR):  இது மீத்தேன் இருப்பையும் அதன் இருப்பிடத்தையும் ஆய்வு செய்யும். மீத்தேன் இருப்பு உறுதிசெய்யப்பட்டால் இங்கு ஏற்கனவே உயிரினங்கள் வாழ்ந்ததற்க்கான வாய்ப்புகள் அதிகம்.
4. தெர்மல் இன்பராரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர் (THERMAL INFRARED IMAGING SPECTROMETER):   இது செவ்வாய் கிரகத்தின் கனிமவளங்களை பற்றி அளவீடும் கருவியாகும்.
5. மார்ஸ் எக்ஸ்போரிக் நியுட்ரல் கம்போசிசன் அனலைசர் ( MARS EXOSPHERIC NEUTRAL COMPOSITION ANALYZER): நிறை வண்ணமாணியானது நியுட்ரல் துகள்களை அளவிடுகிறது.

ரஜினியின் சொல்லுக்கேற்ப மங்கள்யானின் பாதையும் எட்டுகட்டமாக்கப்பட்டது:)

இது 2013 நவம்பர் 5ல் ஏவப்பட்டது, எட்டுக்குள்ளே உலகம் இருக்கு ராமையானு பாட்சாவில் ஒரு பாடல் வரும் அதுபோல் மங்கள்யானின் பயணமும் எட்டுகட்டங்களாக பிரிக்கப்பட்டது. எட்டாவது கட்டமாக செப்டம்பர் 24 2014ல் மங்கள்யான் செவ்வாயினுள் நுழைந்தது வெற்றிகரமாக. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் மட்டுமே கொண்ட சாதனையை இந்தியாவும் தன்வசப்படுத்தியது.

எட்டுக்குள்ள உலகம் இருக்கு


மங்கள்யானின் வெற்றி மூலம் இந்தியா கிரகங்கள் விட்டு கிரகங்கள் தொடர்புகொள்ளும் சாதனையையும் எட்டியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக