கடந்த வருட கட்டுரையை
முதலில் பார்த்துவிடுங்கள்..
கடந்த வருடத்தில் 2013 உங்க மூதலீடு எவ்வளவு லாபம் தந்தது.
நீங்கள் மும்பை
சென்செக்ஸை அடிப்படையாக கொண்ட பங்குசந்தையில் முதலீடு செய்திருந்தால் 29%மும், டெல்லி
நிப்டியை அடிப்படையாக கொண்ட பங்குசந்தையில் முதலீடு செய்திருந்தால் 35%மும் வருமானத்தை
அள்ளி இருப்பீர்கள். வேறு எந்த முதலீடும் இதே காலகட்டத்தில் இந்த அளவு வருமானத்தை தரவில்லை என்பது குறிப்பிடதக்கது.
உலக அளவில் வருமானம் தந்த பங்குசந்தை வரிசையில் நாம் இரண்டாவதாக இருந்தோம்; கடந்த வருடம்.
இங்கேயும் சீனா முந்தி உள்ளது(49%).
பாரக்ஸ்(FOREX) டிரெடிங்க்
எனப்படும் நாணயமாற்று சந்தையிலும் இந்திய பணத்தின் மதிப்பு பெரிதும் மாற்றமில்லாமல்
நிலைத்தது. கடந்த 2013 இறுதியில் ஒரு டாலருக்கு எதிராக 61ரூ இருந்த இந்திய நாணயமதிப்பு 2014முடிவில்
63ரூ ஆக இருந்தது. பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்யா ஆக அதிகமாக 39%மும், பிரேசில் 11%மும்
தென் ஆப்ரிக்கா 9%மும், வீழ்ச்சியை சந்தித்திருந்தது. நாம் 3% வீழ்ச்சியை சந்தித்தோம்.
இங்கேயும் சீனா நம்மை விட சிறப்பாகவே உள்ளனர்.
வங்கி டிபாசிட்களில்
8.75% வட்டியையே சராசரியாக தருகிறார்கள். வட்டி சராசரி ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியாவிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரி.
இதே காலக்கட்டத்தில்
நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் 8%மும் வெள்ளியில் 15%மும் நட்டத்தினையே
சந்தித்திருப்பீர்கள்.
ரியல் எஸ்டேட்டில் பெரிய பாய்ச்சல் இல்லை என்பதால் முன்னேற்றமும்
இல்லை, பின்வாங்குதலும் இல்லை.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக