ஒன்றைக்
கொண்டே எல்லாம் பெறுவது
எப்படி?
உங்களுக்குக்
குடும்ப அட்டை வேண்டுமா?
மருத்துவக்
காப்பீடு?
வங்கிக்
கணக்கு?
மதிப்பெண்
பட்டியல்?
வாக்காளர்
அட்டை?
அடையாள
அட்டை?
ஓட்டுநர்
உரிமம்?
அலைபேசி?
நிரந்தரக்
கணக்கு எண்?
கடவுச்
சீட்டு?
இன்னும் ஏராளமானவை உங்களுக்குத் தேவை. இவை ஒவ்வொன்றிற்கும் கேட்கப்படுபவை என்னென்ன? எங்கே சொல்லுங்கள்.. பார்போம்.. உங்கள் பெயர்.. தந்தை பெயர் முகவரி.. பிறந்த தேதி..அலைபேசி..மச்சம்.. அடேயப்பா.. பிறப்புச் சான்றிதழில் தொடங்கி.. இறப்பு, வாரிசுச் சான்றிதழ் வரை
ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு
முறையும்..
ஒவ்வொரு
படிவத்திலும் தந்த
விவரங்களையே தந்து தந்து
வாழ்க்கையே வெறுத்துப்
போகவில்லையா? எத்தனை
இணைப்புகள்..
எத்தனை
நகல்கள்..எத்தனை
புகைப்படங்கள்..
எத்தனை
கையொப்பங்கள்..
காகிதங்கள்..?
ஏன் இப்படிச் செய்தால் என்ன?
பொதுவான
தகவல் பதிவு ஆணையம்.(இனிமேல்
அமைக்கப்பட வேண்டியது) உங்களைப்
பற்றிய அனைத்துத் தகவல்களையும்
அது வாங்கிக் கொள்ளும்.
அவ்வப்போது
ஏற்படும் மாற்றங்களை உள்ளடக்கும்.
எந்தெந்த
அமைப்பு என்னென்ன விவரங்களைக்
கேட்கிறதோ..
அதை
எல்லாம் அவரவர்களுக்குத்
தரும்.
போலி,
பொய்களுக்கு
இடமிருக்காது. எல்லாம்
கணினிப் பதிவாய்க் காக்கப்படும்.
கட்டணம்
செலுத்த வேண்டும். இந்த
ஒரு வேலையை ஒழுங்காக
முடித்துவிட்டால்
நீங்கள்
எது கேட்டாலும் உடனே கிடைக்கும். சுருக்கமாகச்
சொன்னால் இது கணினி யுகத்து
ஜாதகக் குறிப்பு.
கட்டாயமாக
ஒவ்வொருவரும் கையில் அல்லது
பையில் வைத்துக் கொள்ள
வேண்டியது.
மோசடிப்
பேர்வழிகளால் அணுக முடியாதது. பங்குச்
சந்தைக்கும் தங்க முதலீட்டுக்கும்
டிமேட் வசதி இருப்பதைப் போல்
இதையும் கொண்டு வர முடியாதா
என்ன?
இதற்கு
எடுத்துக்காட்டுத் தேவையா?
உங்களது
ஆவண எண் 1234567890
என்போம். இதைக்
கொடுத்தால் போதும்.இதை
வைத்து வங்கிகள் கணக்குத்
துவக்கிவிடலாம். மதிப்பெண்
பட்டியலைக் காகித வடிவில்
தராமல் மின்னணு வடிவில்
அளிக்கலாம்.
சான்றிதழ்
சரிபார்ப்பு என்கிற சடங்கை
ஒழிக்கலாம்.
எரிவாயு
உருளையை எங்கும் வாங்கலாம்.
மோசடிகளைக்
குறைக்கலாம். ஆதார்,
அவதார்,
பின்,
சின்,
சிஃப்,
பான்
இத்தியாதிகளுக்கு ஒன்றே
போதும்.
கற்பனையில் காணுங்கள்
வங்கியில்
- ஏம்ப்பா..
1234567890 வந்திருக்கார்..
எத்தனை
கடனை இழுத்தடித்திருக்கிறார்
என்று பார்..
நியாயவிலைக்
கடையில் - 1234567890
ஆ
சார்..
உங்க
அரிசி,
சர்க்கரை,
எண்ணெய்
எல்லாம் இதோ ரெடியாய் இருக்கு
சார்..
வேலைக்குச்
சேரும் இடத்தில் வாங்க
மிஸ்டர் 1234567890
உங்க
மார்க்ஸ் எல்லாம்
பார்த்திட்டோம்..இன்னிக்கே
ஜாயின் பண்ணிடலாம்
ஓய்வூதிய
அலுவலகத்தில் 1234567890
சார்..உங்களுக்கு
அரியர் வந்திருக்கு..
மருத்துவ
மனையில் 1234567890தானே..லோ
சுகர்?
நாலு
நாளாவாக்கிங் போகலைன்னு
காட்டுதே..
இதுதான்
ஒன்றைக் கொண்டே எல்லாம் பெறும்
வழி.
-சுப.தனபாலன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக