திங்கள், 13 அக்டோபர், 2014

நீங்களும் என்பது நிஜமா?

நீங்களும் பிச்சைக்காரர் ஆகலாம்
தலைப்பைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாலும் ஆவலை அடக்கமாட்டாமல் மேற்கொண்டு படிக்க வந்திருக்கிறீர்கள். ஆகவே நீங்களும்....
பொறுங்கள்..
நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம்
நீங்களும் அம்பானி ஆகலாம்
நீங்களும் படமெடுக்கலாம்..

இப்படி எத்தனையோ தலைப்புகள். உங்களை உயர்த்திவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என்று வரிந்து கட்டிக் கொண்டு செயல்படும் எழுத்தாளர்கள், அறிஞர்கள், பதிப்பாளிகள், வியாபாரிகள்ஒன்று மட்டும் தெளிவு. நீங்களும் என்று தலைப்பிடப்படும் எதுவும் உங்கள் உள்ளத்தைத் தொட்டுவிடும். நன்கு வியாபாரமாகும்.

அதனால்தான் நீங்களும் பிச்சைக்காரர் ஆகலாம் என்கிற இந்தத் தலைப்பு.
எல்லாருமே ஒன்றை வசதியாக மறந்துவிடுகிறார்கள். அது அவர்களது கணித அறிவின் குறைபாடாக இருக்கலாம். நிகழ்தகவு என்று ஒன்று உண்டு. அதுபற்றி விளக்குவது இங்கு வேலையற்ற வேலையாகிவிடும்.

ஆனால் சில உண்மைகளை யோசித்துப் பாருங்கள்
இரண்டே இரண்டு பிள்ளைகள் படிக்கும் வகுப்பானாலும் இரண்டாயிரம் பேர் பங்குபெறும் வகுப்பானாலும் ஒருவன்தான் முதலிடம் பெறலாம். மற்ற எல்லாரும் இரண்டாவதிலிருந்து 1999 ஆவது இடம்தான்.




கிரிக்கெட் ஆட்டத்தில் சச்சின் போல் சாதிக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கலாம். ஆனால் பதினோரு பேர் மட்டுமே அணியில் இடம் பெற முடியும். இடையில் குளிர்பானம் எடுத்துப் போகிறவர்களையும் சேர்த்தால் பதின்மூன்று பேர்அதிலும் ஒவ்வொருவரும் சச்சினைப் போல் ஆட்டமே இழக்காமலும் அறுபது வயது வரை ஆடினாலும் நீங்களும் சச்சின் ஆக முடியாது.

நீங்கள் ஐஏஎஸ்ஸே ஆகிவிட்டாலும் நீங்கள் ஓய்வு பெறும் வரை அந்த இருக்கைக்கு இன்னொருவர் வருவது இப்போதைக்கு இல்லை. ஆக நீங்களும் ஐஏஎஸ் என்பது..?
சரி.. அரசியலில் பெரிய ஆளாக வருவீர்களா?
நீங்களும் கட்டுமானக் கலைஞராவீர்களா?
நீங்களும் எல்லாமுமாகிவிடுவீர்களா?
சாத்தியங்களை ஆராயுங்கள். கட்சியில் சேர்கிறவன் எல்லாம் வட்டச் செயலாளர் கூட ஆவது இல்லை. அப்புறமல்லவா..முதல்வர் பதவி? (நிரந்தரங்களை நினைத்தால்..)

இதெல்லாம் உங்கள் தன்னம்பிக்கையைக் குறைப்பது போல் தெரிகிறதா? வீட்டிலிருந்து கிளம்பி வரும் ஒவ்வொருவரும் வெள்ளித் திரையில் நட்சத்திரங்களாக ஆகிவிடுவதில்லைஉங்களுக்குக் கணிதம் தெரிந்து நிகழ்தகவு பற்றிப் புரிந்து கொண்டிருந்தீர்கள் என்றால் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லைநீதி நுால்களைப் படித்துப் புரிந்து கொண்டிருந்தால் ஔவையார் உங்களுக்காகவே சொல்லி இருக்கும் கிட்டாதாயின் வெட்டென மறவை மறந்திருக்க மாட்டீர்கள்இயற்பியல் தெரிந்திருந்தால் ஆக்கவும் அழிக்கவும் இயலாது என்பதை உணர்ந்திருப்பீர்கள்.

இவற்றில் எதுவுமே உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றால் கண்டிப்பாக நீங்களும் பிச்சைக்காரர் ஆகலாம்கண்ட, கண்ட துறைகளில் கால் வைத்து ஏமாற்றம் அடைந்து காசைக் கரியாக்கிக் காலத்தை வீணாக்கி நீங்களும் பிச்சைக்காரர் ஆகலாம்இல்லாவிட்டால் இந்த நாட்டில் ஒற்றைப்படைக் காலி இடங்களுக்கு ஒரு கோடிப் பேர் தேர்வெழுதுவார்களா
மன்னிக்கவும்..
யோசிக்கவும்..
ஏனெனில் நீங்களும் இப்படிச் சிந்திக்கலாம்..உங்கள் தனித்துவத்தைக் காட்ட முடிந்தால்!
-சுப.தனபாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக