இதைப்
படித்தவர்கள் படியில் பயணம்
செய்ய மாட்டார்கள்
படித்தவர்கள்
பேருந்துகளின் படிக்கட்டுகளில்
பயணம் செய்ய மாட்டார்கள்.
ஏன்
அப்படி?
எதைப்
படித்தவர்கள் என்பது கவனிக்க
வேண்டிய செய்தி. இயற்பியல்
படித்திருக்க வேண்டும்.
அதில்
மைய விலக்கு விசை,
மைய
நோக்கு விசை என்றெல்லாம்
தெரிந்து வைத்திருப்பார்கள்.
ஒரு
சிறிய நெம்புகோலை அசைத்தால்
மிகப்பெரிய பாறையையும் அசைத்து
விடலாம் என்கிற உத்தியைச்
சொன்னவன் இயற்பியல்காரனே.
ஆகவே
படிக்கட்டில் நிகழும் சிறு
மாற்றம் உயிரையே குடித்துவிடலாம்.
அவ்வளவு
பெரிய எடை கொண்ட பேருந்தைப்
படியில் நிற்கும் பேர்வழி
சாய்த்துவிடும் சாத்தியம்
உண்டு.
அதேபோல்
இவனைத் துாசியாய் மதித்துத்
துாக்கி எறியவும் வழி உண்டு.
குறிப்பாக,
வளைவுகளில்
திரும்பும்போது செயல்படும்
விசைகளைப் பற்றி அறியாதவர்கள்தான்
படிக்கட்டுகளில் தொற்றிக்
கொண்டு செல்வார்கள்.
தொடர்வண்டிப்
பாதைகளில் இதற்கான சரிக்கட்டும்
ஏற்பாடு உண்டு.
அதற்காகத்
தொடர்வண்டிகளில் தொற்றிக்
கொண்டு போகலாம் என்பது பொருளல்ல. சாலைகளிலேயே
கூடச் சரிவான வடிவில் பாதையை
அமைத்திருப்பதைப் பார்க்கலாம்.
ஆயினும்
இது எல்லா இடங்களிலும்
சாத்தியமில்லை.
அதிலும்
குறுகலான நகர்ப்புற வழித்
தடங்களில்.
வண்டி
ஓடுகிற திசையிலும் அதற்கு
எதிர்ப்புறத்திலும் ஆற்றல்களின்
இயக்கங்களையும் விளைவுகளையும்
அறியாதவர்கள் எதிர்த் திசையில்
குதிப்பார்கள்.
இத
குறித்த விழிப்புணர்வு
இல்லாததும் விபத்துகளுக்குக்
காரணம். படிக்கட்டுப்
பயணிகள் எல்லாம் ஏதோ அசகாய
சூரர்கள் என்பது போல் நமது
திரைப்படங்கள் சித்தரிக்கின்றன.
அவற்றைப்
பார்த்துப் பார்த்து இவர்களும்
கற்றுக் கொள்கிறார்கள்.. கடைசியில்
காவு கொள்ளப்படுகிறார்கள்.
உளவியல்
அடிப்படையில் உண்மையான காரணம்
என்ன தெரியுமா?
மற்றவர்களின்
கவனத்தை ஈர்க்க வேண்டும்.
குறிப்பாகத்
தான் விரும்பும் பெண்ணின்
கவனத்தை. அதற்குப்
படிக்கட்டுப் பயணம் ஒன்றுதான்
வழி என்று எண்ணிக் கொண்டிருப்பதுதான்
வடிகட்டிய முட்டாள்தனம்.
சாதித்துக்
காட்டினால் உலகமே உங்களைப்
பார்க்கும்.
இதை
உணராத வரை நடத்துனர்கள்
என்னதான் கரடியாய்க் கத்தினாலும்
இவர்கள் தொங்கிக் கொண்டுதான்
செல்வார்கள்.
துாக்குவதற்குக்
கூட ஆள் இல்லாமல் துடித்துச்
சாவார்கள்.
(உடனே
இதை எதிர்த்து ஒரு போராட்டத்திற்குக்
கிளம்பினாலும் கிளம்பிவிடுவார்கள்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக