வங்கிச்
சேமிப்பிற்கு உதவும் டாப்
அப் கார்டு
வங்கிஅட்டைக்
கலாச்சாரம் நமது மக்களின்
அடிப்படைப் பண்புகளையே
சிதைத்து விடும் அபாயம்
இருக்கிறது.
மற்ற
வெளிநாட்டவர்களுடன் ஒப்பிடும்போது
இந்திய மக்கள் தங்கள் சொந்தச்
செலவுகளில் படு கருமித்தனமாக
இருப்பார்கள்.
இதுதான்
அவர்களது சேமிப்புக்கே ஆதாரம். வெளிநாட்டவர்கள்
தங்கள் வருங்கால சந்ததியினருக்காகச்
சேமித்து வைக்கும் வழக்கம்
கொண்டவர்கள் அல்லர்.
வருவதை
எல்லாம் ஆண்டு அனுபவித்துக்
காலி செய்து விடும் பழக்கம்
உடையவர்கள்.
ஆனால்
இந்தியர்கள் அப்படியா?
நாம்
வெளிநாட்டவர்களிடமிருந்து
பல வேண்டாத வழக்கங்களை விரும்பி
ஏற்றுக் கொள்வதில் சூரர்கள்.
அந்த
வகையில்தான் அந்த அட்டை,
இந்த
அட்டை என்று பலவித அட்டைகளை
வங்கிகளில் வாங்கிப் பயன்படுத்திக்
கொண்டு இருக்கிறோம்.
இவை
மக்களை மறைமுகமாகக் கடன்
வாங்க வைக்கும் துாண்டில்கள்.
சபலத்தின்
அடிப்படையில் காசைக் கரைக்கும்
பொறிகள்.
இவற்றில்
மாட்டிக் கொண்டு அவதிப்படுவோர்
ஏராளம்.
கணக்கில்
உள்ள இருப்பில் இருந்து
கடனாகவோ,
மிகைப்பற்றாகவோ
பணத்தை எடுத்துக் கொள்ளப்
பலவித அட்டைகள் வழி செய்கின்றன.
இருப்பினும்
பணத்தைச் சேமிக்க விரும்பும்
மக்களுக்கு இவை வழி செய்கின்றனவா
என்றால் இல்லை.
ஏனெனில்
கணக்கில் பணத்தைக் கட்டுவதற்கு
வங்கிகளையே நாடிச் செல்ல
வேண்டி இருக்கிறது.
இதை
மாற்றி அமைக்கலாம்.
அலைபேசிக்
கட்டணத்தைச் செலுத்த வேண்டுமானால்
சிறு சிறு பெட்டிக் கடைகளிலேயே
பணத்தைக் கட்டலாம்.
அதற்குரிய
கணக்கு அலைபேசி அட்டையில்
வரவு வைக்கப்பட்டு விடுகிறது.
இதே
போன்ற வசதியை வங்கிச் சேமிப்புக்
கணக்குகளுக்கும் கொண்டு
வரலாம்.
ரூ50,
ரூ100
என்று
சிறு சிறு தொகைகளுக்கும்
இந்த வசதியை ஏற்படுத்தலாம்.
செயல்படுத்துவது
எப்படி?
அன்றாடம்
கூலி வேலை செய்வோர் போன்ற
ஏழை,
எளிய
மக்களுக்கும் இது பயன்தரும்.
பெட்டிக்
கடைகளில் 50,
100 ரூபாய்களைச்
செலுத்தி அவற்றைத் தங்களது
வங்கிக் கணக்குகளில் வரவு
வைத்துக் கொள்ளச் செய்யலாம்.
இவ்வாறு
வசூல் செய்யும் கடைக்காரர்களுக்கு
ஒரு சிறு தொகையைச் சேவைக்
கட்டணமாக அளிக்கலாம்.
அவர்கள்
வசூலிக்கும் பணத்தை வங்கிகளில்
செலுத்திக் கொள்ளலாம்.
மீதம்
தர வேண்டிய சில்லறைத்
தொகைகளுக்கும் இந்த வசதியை
விரிவாக்கினால் நாட்டில்
சில்லறைக்காக ஏற்படும்
சில்லறைத் தகராறுகளை அறவே
ஒழித்துவிடலாம்.
நாணயங்களுக்கான
பற்றாக்குறையையும் தீர்த்துவிடலாம். குழந்தைகள்,
மாணவ,
மாணவியர்,
பெண்கள்
என அனைத்துத் தரப்பினரும்
தங்களுக்கு வசதிப்பட்ட
நேரங்களில் சேமிக்க இது வழி
வகுக்கும்.
பெட்டிக்
கடைகளில் கட்டும் பணம்
வாடிக்கையாளரின் கணக்கில்
வரவு வைக்கப்படுவதற்கு உரிய
கணினி ஆணைத் தொகுப்புகளை
வங்கிகள் வழங்க வேண்டும்.
வீடு,
வீடாகப்
போய்ச் சேமிப்பைத் திரட்ட
முன்வரும் வங்கிகள் நவீன
இணைய,
மின்னணு
வசதிகளைப் பயன்படுத்தி இருந்த
இடத்தில் இருந்தபடியே சேமிப்பை
உயர்த்தலாம்.
மோசடிகளுக்கு
இடமில்லாத வகையில் கணினிச்
செயல்பாடுகளைக் கட்டுக்குள்
வைக்கலாம்.
அன்பளிப்புச்
செய்ய விரும்புபவர்கள்
தங்களுக்கு வேண்டியவர்களின்
கணக்குகளை டாப் அப் செய்யலாம்.
பணத்தை
ஊர் விட்டு ஊர் அனுப்ப வேண்டிய
தேவைகளையும் சமாளிக்கலாம்.
தற்போது
வங்கிகள் செய்து வரும் பலவிதச்
சேவைகளை இந்த அட்டைகள் மூலம்
நிறைவேற்றலாம்.
கடன்
வாங்குவதற்கு அட்டைகள்
இருக்கும்போது காசு சேர்ப்பதற்கு
ஏன் இருக்கக் கூடாது? இதன்
நன்மைகளை வங்கிகள் உணர்ந்தால்
தெருவுக்குத் தெரு ஒரு வங்கிக்
கிளை 24
மணி
நேரமும் ஆண்டு முழுவதும்
செயல்படும்.
அதுவும்
மிகக் குறைந்த நாணயத்தாள்,
உலோக
நாணயக் கையாளலுடன்.
-சுப.தனபாலன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக