இதற்கு
மீட்டர் போடுங்கள் பார்ப்போம்..
வீடுகளுக்கும்
தொழிற்சாலைகளுக்கும்
அளிக்கப்படும் தண்ணீருக்கு
மீட்டர் வைத்துக் கட்டணம்
வசூலிக்கும் நடைமுறை இருக்கிறது
.
தண்ணீர்ச்
சிக்கனத்தை மேம்படு்த்த இந்த
வழியைப் பின்பற்றிப் பார்க்கலாமே..
என்ன
வழி என்கிறீர்களா?
ஒவ்வொரு
வீடும்,
தொழிற்சாலையும்
எவ்வளவு தண்ணீரைக் கழிவு
நீராக வெளியேற்றுகின்றன
என்பதை அளப்பதற்கு மீட்டர்
பொருத்த வேண்டும்.
வாகனங்களின்
புகை சோதனை மாதிரி இதற்கும்
அதிக முக்கியத்துவம் கொடுக்க
வேண்டும்.
இதனால்
என்ன நன்மை?
தண்ணீரைச்
சிக்கனமாகப் பயன்படுத்துவார்கள்.
பொறுப்பின்றி
வீணாக்க மாட்டார்கள். வீட்டுத்
தோட்டங்களை அமைத்து அவற்றிற்கே
கழிவு நீரைப் பாய்ச்சுவார்கள்.
கழிவு
நீரை வெளியே அனுப்ப அஞ்சுவார்கள்.
உறிஞ்சு
குழிகளை அமைப்பார்கள். சாக்கடைகளில்
வெள்ளம் குறையும்.
கழிவுகள்
மட்டுப்படும்.
சுத்தம்
கிடைக்கும்.
சட்டமாக்க
வேண்டு்ம்
சுற்றுச்
சூழலை மாசுபடுத்துவதில்
வீட்டுச் சாக்கடைகள் பெரும்பங்கு
வகிக்கின்றன.
குறிப்பிட்ட
அளவுக்கு மேல் கழிவு நீரை
வெளியில் விடுபவர்களுக்குக்
கடும் தண்டம் விதிக்க வேண்டும்.
இதற்கென்று
மாதாந்தரக் கட்டணம் வசூல்
செய்தாலும் சரியே.
அதிலும் கூட முதல் ஆயிரம் லிட்டர்களுக்கு இவ்வளவு அதற்கு மேல் ஒவ்வொரு 500 லிட்டருக்கும் கூடுதல் கட்டணம் என்று கொண்டு வர வேண்டும். கழிவு நீரை வெளியில் விடாத வீட்டுச் சொந்தக்காரர்களுக்குப் பிற சலுகைகளை அளிக்கலாம். வரிக்குறைப்பை நடைமுறைப்படுத்தலாம். விலக்கு அளிக்கலாம். கழிவு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துபவர்களுக்கு மானியம் அளிக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக