வெள்ளி, 3 அக்டோபர், 2014

மின் செலவைப் பாதியாக்க..


அடுத்தடுத்த, எதிர் எதிரான இரண்டு அறைகள். இரண்டிலும் மின்விசிறிகளை ஓடவிடாவிட்டால் அனல் தகிக்கும். வேறு வழியே இல்லை.

ஒரு நாள் தற்செயலாக, எதிர் அறையில் மட்டும் மின்விசிறி சுழன்று கொண்டு இருந்தது. நான் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்த அறையில் மின் விசிறியை இயக்கவில்லை. புழுக்கம்தான்அறைக் கதவைச் சற்றே திறந்து வைக்க முயன்றேன்அந்தக் கதவைக் குறிப்பிட்ட கோணத்தில் தள்ளி நிறுத்திய போது எதிர் அறை விசிறியின் காற்று இதமாக உள்ளே நுழைந்தது. இந்த அறையில் மின் விசிறிக்குத் தேவை இல்லாமல் எதிர் அறைக் காற்றையே பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.



இரண்டு விசிறிகளை ஒரே நேரத்தில் ஓடவிடாமல் ஒன்றை மட்டும் பயன்படுத்தினால் போதும் என்கிற நிலை ஏற்பட்டதுஎல்லா இடங்களிலும் இது சாத்தியம் என்று சொல்ல வரவில்லை. இருந்தாலும் உங்கள் வீடு அல்லது அலுவலகத்திலும் இது நடக்குமா என்பதைச் சோதித்துப் பார்க்கலாமே

டூ இன் ஒன்.ஒளியைப் பிரதிபலிக்க வைத்துப் பல தேவைகளுக்குப் பயன்படுத்துவதுபோல் காற்றையும் முயன்று பார்க்கலாம். அறிவியலாளர்கள் யோசிக்கலாம்சிறு கருவிகளை உருவாக்கலாம்கட்டுமான முறைகளை ஆராயலாம்.

மின்சாரத்தால் மட்டும்தான் காற்றாடிகளை இயக்க வேண்டும் என்கிற நிலையை மாற்றலாம். இயந்திர இயக்கம் மூலம் காற்றடிக்க வைக்கலாம். வெளியில் அடிக்கும் காற்றை வீட்டுக்குள் கொண்டு வரப் பாதை அமைக்கலாம்.காற்றை உருளைகளில் (சிலிண்டர்) அடைத்துக் கட்டுப்படுத்தி விசிறிக் கொள்ளலாம்.

இவை எல்லாவற்றையும் செய்யப் போவது யார்?வேறு யார்,
நீங்கள்.. நீங்களேதான்.

-சுப. தனபாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக