வெள்ளி, 3 அக்டோபர், 2014

இந்தத் தகுதி இருக்கிறதா?


முன்பெல்லாம் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் ஓர் அடிப்படைத் தகுதியாகக் கருதப்பட்டது நீச்சல் அடிக்கும் திறன். அடேயப்பா.. மாமரத்தின் மீதேறி ”சொர்க்” அடிப்பதென்ன.. கமலையின் மீதேறித் தாவுவது என்ன.. ஒரே அமர்க்களமாக இருக்கும்.

ஆழம் அதிகமாக உள்ள கிணறுகளில் மூழ்கி முக்குளித்து மண்ணை எடுத்து வர முடிந்தவர்கள் அன்று மாவீரர்களாகக் கொண்டாடப்படுவார்கள். சேறு கலங்கும் வரை கிணற்றை உண்டு இல்லை என்று பண்ணுகிறவர்கள் இருப்பார்கள். நீச்சல் தெரியாமல் இருப்பது பரிகசிக்கப்பட வேண்டிய நிலையாக இருக்கும்அன்று இருந்த கண்மாய்களின் அடிமுடி தேடுவதையும் அதன் ஆட்சிப் பரப்பை அளப்பதையுமே மிகச் சிறந்த உடற்பயிற்சியாகக் கொண்டிருந்தார்கள். நல்லது..கெட்டதுகளுக்குப் போய்வருகிறவர்களும் ஆறு,குளம், கிணறுகளில் மூழ்கிச் சுத்தமாகச் செல்வார்கள். பெண்களுக்கென்றே தனி நீர் நிலைகளும் உண்டு.



இன்று கிணறுகளை எங்கே தேடுவது? குளங்கள்?
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்று மெனக்கிடுபவர்கள் ஏன் இந்தச் செலவிலாப் பயிற்சியை மறந்தார்கள்? இன்று எத்தனை பேருக்கு நீச்சல் தெரியும்? மூச்சடக்க முடியும்?
நகர்ப்புற நீச்சல் குளங்கள் மட்டும் போதுமா?
நீர்த்துாவி (ஷவர்) மட்டும் குற்றாலம் ஆகிவிடுமா?
இருந்தைதை விட்டுவிட்டு
இல்லாததைப் பிடிக்க ஏன் இப்படி ஆலாய்ப் பறக்கிறோம்?

தொடரும் - காலாண்டிதழில் (2013) தோழர் சந்திரகாந்தனின் புனலாட்டம்”கதை ஏற்படுத்திய தாக்கம் இது.
-சுப. தனபாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக