நாங்களெல்லாம்
ஊழலை ஒழித்துவிட்டுத்தான்
மறுவேலை
பார்க்கப் போகிறோம்..
எங்களுக்கு?
ஆயிரக்
கணக்கில் சம்பளமும்
இலட்சக்
கணக்கில் கிம்பளமும்
ஆனால்
அட்டை
என்னவோ அரிசி அட்டைதான்..
ஆண்டு
வருமானம்..
எண்ணி
ஏழாயிரம் என்போம்
ஆறு
ஏக்கர் இருந்தாலும்
அரைகுறை
விவசாயிதான்
இலவசமாய்
வாங்குவதற்கு
என்றென்றும்
ஏழைகள்தான்
எங்கள்
குழந்தைகளுக்கே குழந்தைகள்
இருந்தாலும்
பேருந்துப்
பயணங்களில் அவர்களுக்கு
எப்போதுமே
இரண்டே முக்கால் வயதுதான்..
சலுகைகளுக்காகச்
சாதியை. மதத்தை
ஏன்..
சகலத்தையும்
மாற்றுவோம்..
வாய்க்கரிசியை
வாங்கிக் கொண்டுதான்
வாக்கையே
அளிப்போம்
கடன்
வாங்கும் முன்பே
தள்ளுபடி
கேட்போம்
அப்பேர்ப்பட்ட...
நாங்களெல்லாம்
ஊழலை ஒழித்துவிட்டுத்தான்
மறுவேலை
பார்க்கப் போகிறோம்..
அது
சரி..
ஆஸ்திரேலிய
விசாவிற்கு
ஆறு
கேட்கிறார்களே?
குறைக்க
முடியுமா கொஞ்சம்?
-சுப.
தனபாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக