திங்கள், 29 செப்டம்பர், 2014

தமிழில் முதலுதவி சம்பந்தமான கைத்தொலைபேசி செயலி


எ​ன்ன தமிழ்நாட்டிலா அவ்வளவு முன்னேற்றம் என்று பார்க்கிறீர்களா, இது இங்க இல்லப்பா.

​சிங்கப்பூரைச் சார்ந்த  ரெட்கிராஸ் சங்கத்தினர்  முதலுதவி சம்பந்தப்பட்ட கைத்தொலைபேசி செயலியை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.  இதில் ஆங்கிலம் தவிர்த்து மான்ட்ரின், மலாய் மேலும்  தமிழும் உள்ளது.



​சிங்கப்பூரில் தமிழும் ஆட்சிமொழியாதலால் தமிழிலும் பொதுவான அறிவிப்புகள் மற்றும் அரசாங்க அறிக்கைகள் வெளிவரும். என்ன ஆச்சரியமாக உள்ளதா! ​சிங்கப்பூர் அரசாங்கம் பலவிதமான இனங்களை அரவணைத்து செல்லும் அரசாங்கமாகவே தொடர்ந்து நீடிக்கின்றது.  

ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய அரசாங்கத்திற்கு இந்தியை தவிர வேறு மொழிகளை கண்ணுக்கு தெரியாதது, வேதனையில் நம்மை போன்ற தமிழ் ஆர்வலர்களை ஆழ்த்துகின்றது. எல்லா மொழிகளுக்கும்  தனிப்பட்ட செறிவும், சொல்வளமும் உள்ளது. எனவே அனைத்து மொழியினரையும் அரவ​ணைத்து செல்லும் அரசாங்கமாக மோடி அரசாங்கம்  நீடிக்க வேண்டும் என்பதுவே குறிஞ்சியின் எதிர்பார்ப்பும்.

​செயலியில் அ​னைத்து விதமான முதலுதவி சிகிச்சைகளும், அவசர சிகிச்சை போன்றவைகளும் எளிய தமிழில் உள்ளது. அ​தில் கூறப்பட்டுள்ள தொலைபேசி சிங்கப்பூரை சார்ந்தது எனவே அந்த எண்ணுக்கு அழைத்துவிடாதீர்கள் :). ​மேலும் அதில் மொழிக்கு என தமிழை முதலில் தேர்ந்தெடுக்கவேண்டும்.

அ​தில் பின்வருமாறு  தலைப்புகள் உள்ளன:
ஒ​வ்வாமை, ஆஸ்துமா, கடிகள், ரத்தகசிவு, எலும்புமுறிவு,  தீக்காயம், மூச்சடைப்பு, சர்க்கரை நோய், மாரடைப்பு, வெப்பவாதம்,  தலைகாயம், விசம், அதிர்ச்சி, உளவியல் முதலுதவி, வலிப்பு, அதிர்ச்சி, சுளுக்குகள், பக்கவாதம், சுயநினைவின்மை.


​முதியவர்களுக்கு இந்த செயலி உதவிகரமாக இருக்கும். மேலும் பள்ளி, கல்லூரியிலும் இது பயன் மிகுந்ததாக இருக்கும். இதை மட்டும் பார்த்துவிட்டு சரியான பயிற்சி இல்லாதோர் முதலுதவி சிகிச்சை அளிக்க முயலவேண்டாம். அது ஆபாத்தனதும் கூட. இது ஒர் எளிய நியாபகப்படுத்தலுக்கானதாகவே பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக