வெள்ளி, 5 செப்டம்பர், 2014

இந்த மரங்களின் வயது ஆயிரங்களுக்கும் மேலே!!!


எ​ன்ன மரங்கள் ஒரு 50 வருடம் இருக்குமா, இல்ல 100 வருடம் இருக்குமா, இல்லங்க அது ஆயிரக்கணக்கான வருடங்கள் நீடித்து இருக்குமாம்.  நீங்களே படியுங்களேன்...

நார்வே ஸ்புரூஸ்:
​ஸ்வீடனிலுள்ள "நார்வே ஸ்புரூஸ்" என்றழைக்கப்படும் இந்த ​மரத்தின் வயது சுமார் 9000 வருடங்களுக்கும் மேலே இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அதனுடைய அடிமரம் சுமார் 600வருடங்கள் வரை உயிரோடு இருக்குமாம் பின்பு பீனிக்ஸ் பறவையைப் போன்று மீண்டும் மீண்டும் தன்னாலே பிறக்கும் வகையைச் சார்ந்த இது ஊசியிலை மரவகையைச் சார்ந்தது.

இ​து முதல் 20வருடங்கள் 60அடி வரை வேகமாக அதாவது 3அடி வருடத்திற்கு வளருமாம். பின்பு வளரும் வேகம் மட்டுப்படும். இவ்வகையில் இதுவரை கண்டறியப்பட்ட மரத்தின் அதிகப்படியான உயரம் 207 அடியாக உள்ளது.

இ​து பேப்பர் தயாரிக்கவும், கிறித்துமஸ் விழாக்கொண்ட்டாட்டங்களில் கிறித்துவ மரங்களாகவும், ஸ்புரூஸ் என்ற பீர் தயாரிக்கவும் (அது ஸ்கர்வி நோயினை தடுக்கும்) பயன்படுகின்றது. 

நார்வே ஸ்புரூஸ்


மெத்தூசலா:
இந்த பிரபலமான “மெத்தூசலா” மரத்தின் வயது 4800 வருடங்கள் இருக்கும் எனக் கருதப்படுகின்றது. இது பிரிஸ்டல்கோல் பைன் வகையாகும்.  இதன் பெயர் காரணம் பைபிளில் அதிக வயதான மெத்தூசலாவின் பெயரைக் குறிப்பதாகும். 

இதன் இருப்பிடம் அமெரிக்க வனத்துறையினரால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இது கலிபோர்னியாவில் வெள்ளை மலையில் இருப்பதாக நம்பபடுகின்றது. இந்த ரகசியத்துக்கு காரணம் உள்ளது, ஏ​னெனில் 2012ல் அமெரிக்காவின் ப்ளோரிடாவிலிருந்த ஸ்பைடர் எனப்படும் 3500வயது உள்ள ஒரு மரம் போதை ஆசாமி ஒருவரின் கைவண்ணத்தில் தீக்கிரையாக்கப்பட்டது.

மெத்தூசலா


பண்டோ:

இ​ந்த மரத்தினை நமது கணினியில் நிறைய முறை பார்த்திருக்க வாய்ப்புண்டு.

​பண்டோ
​பண்டோ என்றழைக்கப்படும் இந்த மரம் வேர் மூலம் பகிர்ந்து பரவும் வகையைச் சார்ந்தது. அமெரிக்காவில் யுதாவிலுள்ளது. இதன் ஆதிவேர் 1லட்சம் வருடங்களுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.  இதன் முதல் எதிரி காட்டுத்தீ ஆகும். இது வேர் மூலம் வளர்வதால் காட்டுத்தீயில் மேல் மரம் மட்டும் தீக்கிரைக்கானாலும் புதிய மரங்கள் பரவலாக மீண்டும் மேலே வளரும், ஆனால் ஒரே வேர்தான். இந்த வகை மரங்கள் பனி  படரும் வடதுருவங்களில் பரவலாக பார்க்கமுடியும்.

ஜோமன் சூகி:
​ஜப்பானில் யகுஷிமா  தீவிலுள்ள  இந்த மரம் ஜோமன் சூகி என்றழைக்கப்படும். இதன் வயது 7000வருடங்கள் வரை இருக்கலாம். தற்போது இது ஐநாவினால்  புராதான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒழுங்கற்ற வடிவம் மரவெட்டிகளிடமிருந்து  இதனை காப்பாற்றுகின்றது.  இதன் உயரம் 80அடி இருக்கிறது. இது 230 அடி வரை வளருமாம். இதன் எடை குறைவு  ஆனால் உறுதியானது, நீர் தடுப்பானாகவும்,  எளிதில் அரிக்கமுடியாததாகவும் உள்ளது.  ஜப்பான், சீனா,  ஏன் இந்தியாவில் டார்ஜிலிங் மற்றும் சிக்கிம் பகுதியில் இந்த மரம் வளர்க்கப்படுகின்றது. 

ஜோமன் சூகி
சர்வ்-இ-அபார் :
ஈரானின் அபார்க் பகுதியிலுள்ள  சர்வ்-இ-அபார்  சைப்ரஸ் மரம் 4000 ஆண்டுகள் பழமையானது. இது 60 அடி சுற்றளவு கொண்ட சுமார் 80 அடி உயரமான மரம் ஆகும்.

சர்வ்-இ-அபார்

ஆலமரம்:
இந்தியாவின் ஹரியானாவில் ஜோதிசர் என்ற இடத்திலுள்ள  ஆலமரம் சுமார் 5000வயது இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.   ஜோதி என்றால் "ஒளி",  சர் என்றால் "ஆதிஅர்த்தம்"  அதாவது  ஒளியின் “ஆதிஅர்த்தம்” அல்லது “கடவுளின் மூலப்பொருள்” என்று இந்த நகரின் பெயருக்கு அர்த்தம் அளிக்கின்றனர்.  ஆ​லமரம் இந்தியாவின் தேசியமரமும் கூட... பகவத்கீதை இந்த மரத்தின் அடியில்தான் அருளப்பட்டது என்ற நம்பிக்கையும் உள்ளது.

ஆலமரம்
பச்சபுள்ள மன்னாரு:  அதான் நம்ம முன்னோர்கள் எல்லாம், மரங்களை காப்பாற்ற நினைத்து ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு கடவுளை நியமித்துவிட்டனரோ, வேப்பமரம் என்றால் அம்மன் சாமி, அரச மரமென்றால் விநாயகர்....

​“Question கோவிந்து”:  ஆனால் நாம் இப்பொழுது வளர்ச்சி என்ற பெயரில் அனைத்து மரங்களையும் வெட்டிவிடுகின்றோம். என்ன பண்ண...

குறிப்பு : படங்கள் மாதிரிக்காகவே இணைக்கப்பட்டுள்ளது. சிலபடங்கள் அதே வகையை சார்ந்தது.  ஆயினும் அந்த இடத்திலுள்ளவை அல்ல. இணையமே மூலம் :)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக