திங்கள், 1 செப்டம்பர், 2014

இந்திய பாதுகாப்பு துறை - ஒரு பார்வை

மோடி மட்டுமல்ல முந்தைய காங்கிரசு அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோனியும் டிஆர்டிஓவின் மந்தமான பணிக்காக எச்சரிக்கை செய்ததுண்டு.
நியாயமான டிஆர்டிஓ அதிகாரிகள் கோபபடவேண்டாம். ஆனால் உண்மை நிலை என்னவென்று உங்களுக்கு நன்கு தெரியும். எப்படி டிஆர்டிவினால் மட்டும் திட்டங்கள் தாமதப்படுத்தபடுகின்றது. உங்களைப் போன்றதுதான் இஸ்ரோவும், அவர்களால் எப்படி மேலே மேலே முன்னேறி செல்லமுடிகின்றது.
என்னுடைய தனிப்பட்ட கருத்து டிஆர்டிஓவின் பணியில் முன்னேற்றம் காணவிட்டால் நாட்டின் பாதுகாப்பிற்காக கோடிகளை கொடுத்தாவது மாற்றுவழியை அரசு நாடுகின்றது. எனவே கமிசனும் தேவையான அளவில் டிஆர்டிஓவின் கறைபடிந்த அதிகாரிகளுக்கு வந்துவிடுகின்றது. ஆனால் இஸ்ரோவிற்கு அந்த வாய்ப்பு குறைவு, ஏனெனில் இது அறிவியல் ஆராய்ச்சி சம்பந்தப்பட்டது. வளர்ச்சி இல்லையெனில் அரசிற்கு ஏதுவும் குறைந்துவிடப்போவதில்லை.
இதுதான் அடிப்படை வித்தியாசம். ஆக டிஆர்டிஓவினைப் போன்ற போட்டி அமைப்பினை ஒன்றோ இரண்டோ ஏற்படுத்த வேண்டும், அதன் நடவடிக்கை வெளிப்படைத்தன்மையனாதாக இருக்கவேண்டும். அப்பொழுது வரும் வளர்ச்சி குபீர்னு. விமான கட்டணம் ஏறிவிட்டது என்றால் பெரும்பாலான மக்கள் கவலைப்படுவதில்லையோ அப்படியே இஸ்ரோவின் தோல்விகள் நமக்கு பெரிதாக தோன்றுவதில்லை, ஆனால் டிஆர்டிஒவின் தோல்வி அப்படி அல்ல நாம் விலை கொடுத்தாகவேண்டும்.
இந்தியாவின் சுயேச்சை தயாரிப்பான HAL-ன் இலகுரக விமானம் தேஜா இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை, ஆதலால் 170000 கோடி(தோராயமாக) மதிப்பிலான ஆர்டர்கள் கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டு ரேபள் விமானத்துக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் விலை அதிகமென ஒருபுறம் கருத்து இருந்ததாலும் இன்னும் சிலபல அரசியல் காரணங்களால் அந்த ஒப்பந்தம் நிறைவேறவில்லை, இந்நிலையெனில் புதிய அரசு அமைந்தவுடன் ஜெர்மனியின் கவுண்டர்ஆபர் 20000கோடி விலை குறைவாக அதைவிட பெட்டரான தைபூன் விமான வழங்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல். இதனால் விமானத்துறை விழிபிதுங்குகிறது. புது ஒப்பந்தம் நடைமுறைக்கு வர இரு வருடங்கள் முழுவதுமாக தேவை. மேலும் பிரான்சுடன் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் பின்னடைவை சந்திக்கும் எனத் தோன்றுகிறது
டிஆர்டிஓவின் பணியும் முக்கியமானதுதான், அவர்களின் கடும் பணிசுமையும் புரிந்துகொள்ளக்கூடியதுதான். அவர்கள் 9துறைகளில் பல்வேறு திட்டங்களை எடுத்துச்செல்கிறார்கள், இந்தியா முழுக்க 50 பரிசோதனை சாலைகள் உள்ளது. அவர்களது ரத்தினங்களே, அக்னி ஏவுகணை, ஆகாஷ் ஏவுகணைகளூம்...


மேலும் இஸ்ரோவிற்கு தேவையான சில பணிகள் டிஆர்டிஒ மூலமாக செய்யப்படுவதும் குறிப்பிடத்தகுந்தது. டிஆர்டிஒவின் சாதனைகளும் இங்கு முக்கியமானதுதான் என்றாலும் நமக்கு பலமடங்கு வேகம் தேவை என்பது நிதர்சனம். கவனிப்பார்களா சம்பந்தபட்டவர்கள். இத்தனைக்கும் டிஆர்டிஓவின் அதிகாரி இந்தியாவின் ஜனாதிபதியானார் -ஆம் அப்துல்கலாம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக