புதன், 14 மே, 2014

RUPAY -இ​ந்தியாவின் சுதேசி பணபரிவர்த்தனை கட்டமைப்பு India indigenous payment gateway system

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாக்களிக்க சென்றாரோ இல்லையோ விழாக்களுக்கு செல்கிறார். அ​வர் நடுநிலைவகிப்பதற்க்காக இவ்வாறு செய்தாராம்.  யாராவது அவரிடத்து எடுத்து சொல்லவேண்டும், “முதலில் அவர் தேசத்தின் குடிமகன் பின்புதான் தேசத்தின் முதல் குடிமகன்” என்று. சரி சரி அதை விடுவோம்.



இ​ந்தியாவும் சுயேச்சையா வணிக கட்டணம் சார்ந்த முறைகளுக்கு என RuPay என்ற பணபரிவர்த்தனை கட்டமைப்பினை ஏற்படுத்தியுள்ளது, இது விசா மற்றும் மாஸ்டர்கார்டு போன்ற உலகளாவிய அமைப்புகளுக்கு மாற்றாக இ​ந்தியாவிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
  
ஜனாதிபதி முகர்ஜி RuPay அறிமுகவிழாவில் “இந்தியாவில் பணம் செலுத்தும் முறையின் அடையாள முதிர்ச்சியாக RuPay உள்ளது என்றார்”, மேலும் கூறியதாவது RuPay ஒரு மாற்று வழி இது பழமை முறையான பணம், காசோலைகளின் பயன்பாட்டினை குறைக்கும். வெகு சில நாடுகளே இந்த மாதிரியான கட்டமைப்புகளே கொண்டுள்ளது. இ​ந்தியாவில் 2013 முதல் ஏற்கனவே இது வழக்கத்திற்கு வந்திருந்தாலும் 2014 மே 8 முதல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இலாப நோக்கற்ற நிறுவன​மான இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் ( NPCI ), இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் வங்கி துறைகள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த புதிய கட்டணம் செலுத்தும் கட்டமைப்பு தனது சேவையை மூன்று வழிகளில் அனைத்து தானியங்கி வங்கி இயந்திரங்கள் ( ஏடிஎம் ) மற்றும் சில்லறை வணிகம்(PointOfSales) மற்றும் மின் வணிக தளங்களையும்(E-commerce) உள்ளடக்கி வழங்கும்

உலகில் இதுபோன்று ஏழு பேமன்ட் கேட்வே வழக்கத்தில் உள்ளது. 
1.  VISA – USA  
2.  MASTER CARD – USA 
3. DISCOVER FINANCE SERVICE – USA, 
4. AMERICAN EXPRESSWAY – USA 
5.  UNIONPAY – CHINA 
6. JCP – JAPAN 
7.  NETS - SINGAPORE





விசா, மாஸ்டர் போன்றவை பொதுவாக வங்கிகளுக்கிடையேயும் அல்லது வங்கி-வணிகம்-வாடிக்கையாளர்களுக்கிடையேயும் பணபரிவர்த்தனையை எளிதாக்க இணையம் வழியே செய்யும் கட்டமைப்பு ஆகும்.  இதற்காக இவர்கள் வங்கி, வணிகர்களிடம் இருந்து ஒரு சிறிய தொகையை சேவைக் கட்டணமாக எடுத்துக்கொள்கிறது.  இந்த வகையில் இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரம் கோடிகளுக்கு மேல் கட்டணமாகவே இந்த நிறுவனங்களுக்கு செல்லுகிறது. 

​கொஞ்சம் விரிவாக:
வாடிக்கையாளர் பொருள் வாங்கிவிட்டு அவர் பண அட்டையை(Debit/Credit cards) கடைக்காரரிடம் கொடுத்தால், அவர் இணையவசதியுடன் கொண்ட சாதனத்துடன்(POS) வாடிக்கையாளரின் அட்டையை தேய்த்தோ அல்லது அவரே அதன் விபரங்களை தட்டச்சு செய்தவுடன் அந்தக் சாதனம் விசா/மாஸ்டர் நெட்வோர்க் வழியே வாடிக்கையாளரின் வங்கியை தொடர்பு கொண்டு வாடிக்கையாளரின் வங்கி எண் அதனுடன் சில விவரங்களோடு பரிவர்த்தனையின் தொகையை விடுவிக்குமாறு  வேண்டும்.  வாடிக்கையாளரின் வங்கி அந்த வங்கி கணக்கு சரிதானா என்று சரி பார்த்துவிட்டு தேவையான தொகையை வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து விடுவித்து விசா/மாஸ்டர் வழியே கடைக்காரரின் வங்கி எண்ணுக்கு அனுப்பும். 



​ரூபேவின் வருகையால் இந்த கட்டணங்கள் இந்தியாவிற்குள்ளேயே செலுத்தப்படுவதால் அன்னியதேசத்திற்கு செல்லும் தொகை வெகுவாக குறையும். மேலும் ரூபேவின் கட்டணம் அந்நிய நிறுவனங்களான விசா, மாஸ்டரை விட மூன்றில் ஒரு பங்குதான்.  ரூபேயும் பன்னாட்டு வங்கிகளோடு தொடர்பு வைத்திருப்பதால் உலகம் முழுவதுமான பணபரிவர்த்தனை உங்கள் விரல் முனையில் கிடைக்கிறது.

மேலும் பணபரிவர்த்தனையின்  தகவல்களும் அந்நியதேசத்திற்கு செல்வது தடுக்கப்படும்.

ஏ​ற்கனவே இந்திய ரயில்வே, ஸ்டேங்வங்கி, பஞ்சாப் வங்கி இந்த வழியில் தனது சேவையை கொடுக்கும் அமைப்புகளில் முக்கியமானது.

அ​ட எங்க போறீங்க ரூபே வசதியுடன் கொண்ட கார்ட் வாங்கபோறீங்களா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக