பிரியங்காகாந்தியின் திருமணத்திற்கு பிறகு 1997ல் தேவகௌடாவின் ஆட்சியின் அந்திமகாலத்தில் டெல்லியில் தனியாக பங்களா ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். எந்த கோட்டாவின் கீழே அவருக்கு பங்களா? எம்பி, அமைச்சர்... ஹீஹீ "மாங்கோமனிதரின்" மனைவி என்பதாலா...
இமாச்சலபிரதேசத்தினரை சார்ந்தவர்களைத் தவிர வேறு யாராலும்
அந்த மாநிலத்தில் சொத்து வாங்க முடியாது. அந்த மாநிலத்தின் முந்தைய பாஜக ஆட்சியில்தான்
(இதுதான் பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும்ஆட்டிவிடுறதா நல்லா வருவீங்கப்பா
பாஜகவினரே) அந்த விதியும்
பிரியங்காவுக்கு ஆதரவாக வளைக்கப்பட்டு அவர் பெரிய பங்களா
வாங்க உதவி செய்யப்பட்டுள்ளது. எந்த கோட்டாவின் கீழே அவருக்கு விதி வளைக்கப்பட்டது, ஹீஹீ "மாங்கோமனிதரின்" மனைவி என்பதாலா...
சுப்பிரமணி
சுவாமி கேட்ட எந்த கேள்விகளுக்கும் குடும்பமே பதில் அளித்தது
இல்லை. அதை விட அது உண்மையாக இல்லாத பட்சத்தில் அவர் மீது அவதூறூ
வழக்கு தொடுத்திருக்கலாம். (நாங்களும் கோத்துவிடுவோம்ல) சுப்பிரமணி சுவாமி சொல்வது
குடும்பமே இந்திய பாஸ்போர்டு வைத்திருக்கவில்லை அனைவரும் OCI-OVERSEAS CITIZENCHIP
OF INDIA எனப்படும் அட்டையை வைத்திருப்பதாக கூறுகிறார். இது எந்தளவுக்கு உண்மை என்பது
குறிஞ்சிக்கும் ஐயப்பாடே... நாங்களும் தெரிஞ்சுக்குவோம்ல :)
ஆயினும் திக்விசய்சிங்கேல்லாம் மோடியை
பென்னின்(மோடி மனைவி பெயர் ஜசோதாபென்) எதிரி மட்டுமல்ல பெண்களின் எதிரி என்றே
கூவினர்; ஆமாம், ஆமாம் திக்விசய்சிங் பெண்களின் காவலர் அதனால்தான் என்னவோ தன்னை
விட 20வயது குறைந்த பெண்ணோடு தனக்குள்ள தொடர்பினை
மீடியா வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பிறகு அது என்னுடைய தனிப்பட்ட
விவகாரம் அது என்கிறார். அதுவும் அந்த (.)ள்ள தொடர்பு
திக்விசய்சிங்கின் தாலி கட்டிய மனைவி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு
போராடிகொண்டிருந்தபொழுது வளர்ந்தாதாமே.. மோடிக்கு ஒரு நீதி இந்த
தேசத்தில் திக்விசய்சிங்குக்கு ஒரு நீதியா... இங்குள்ள பெரியவர் அது குறித்தெல்லாம்
பேசமாட்டார்.
1929 இந்திய குழந்தை திருமண தடுப்புச் சட்டம்
(அல்லது) சாரதா சட்டம், 15வயதுக்கு உட்பட்ட பெண்ணின் மேலும் 18வயதுக்கு உட்பட்ட
ஆணின் திருமணமோ குழந்தை திருமணம் என்கிறது. 1979ல் ஒரு திருத்தம் கொண்டு வந்தது
இந்திய அரசாங்கம் மேற்படி சட்டத்தில் பெண்ணின் திருமண வயதினை 18ஆகவும், ஆணின் திருமண வயதை 21ஆகவும்
அதிகரித்தது. மேலேயுள்ள சட்டம் குழந்தை
திருமணத்தினை தடை செய்யவில்லை எனவே
இந்தியா முழுக்க அது தொடர்ந்து
வழக்கத்தில் இருந்தது, எனவே 2006ல் குழந்தை திருமண தடை சட்டத்தினை அமல்படுத்தியது
காங்கிரசு அரசாங்கம். மைனர் திருமணமே செல்லாது
என்று இந்திய அரசியலைமைப்பு சட்டம் கூறுகின்றது.
ஆக மோடியின் திருமணம் மைனர் திருமணமே, என்ன
காரணத்தினால் அவர் தீடிரென மனம் மாறி தனது மைனர் திருமணத்தினை தேர்தல்நேரத்தில் காட்டினார் என்பது அவருக்கே வெளிச்சம்.
மோடி தாமரை சின்னத்தோடு ஒட்டளிக்க போயிருக்க
வேண்டாமென்பேன். சரியோ தவறோ ஏற்கனவே விதிமுறைகள் அமலில் இருந்திருந்தால் அதை
பின்தொடர்ந்திருக்கலாம். முறை தவறிய
விளம்பரமாயினும் தவறுதான்.
ஆயினும் தேர்தல் கமிசனின் விதிமுறைகள்
விசித்திரமாகவே உள்ளது, சிலசமயம் சிரிப்பும் வருகிறது. கை சின்னத்தினை என்ன பண்ணுவார்களாம்.
இது பற்றி அம்மாவும் பேசினார்கள் ரெட்டை குதிரையின் உயர்ந்த சிறகுகளுக்கு
ஆதரவாக...
நேற்று சந்திரபாபு நாயுடு வாக்களித்த பின்னர்
பாஜகவிற்கு வாக்களித்தேன் என்றார். ஆந்திர தேர்தல் அதிகாரி பன்வார்லால் அந்த
வாக்கினை செல்லாததாக்கிவிடுவோம் என்றார், எந்தளவுக்கு இது சாத்தியம்? இது
சாத்தியமானால் நான் வேண்டுமென்றே எனக்கு பிடிக்காத கட்சிக்கு வாக்களித்தேன் என்று
சொல்லத்தொடங்கினால் என்ன ஆகும், நல்ல வேலை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத்
அவர்கள் பன்வார்லாலின் தவறை கண்டித்திருக்கிறார். ஆக நாயுடுவின் வாக்கு செல்லும். ஆனாலும் நாயுடு போன்றவர்களும்
விளம்பரமாயையில் சிக்கியிருக்கவேண்டாம்.
ஆந்திராவில் சீரஞ்சிவி வரிசையில் நின்று ஒட்டு போடச் சொன்ன இளைஞர் கார்த்திக்கின் தைரியத்திற்கு
பாராட்டுகள். மத்திய அமைச்சர் என்ற முறையில் (அவருக்கு வேலைகள் ஆயிரம் இருக்கலாம்,
என்ன வேலை என்றெல்லாம் கேட்ககூடாது) வேண்டுமானால்
சீரஞ்சிவியை மட்டும்
நேரடியாக வாக்களிக்க அனுமதிக்கலாம், அவரது பையனெல்லாம் வரிசையில் நின்று ஒட்டு
போடலாமே...
லாஸ்ட் பட் நாட் லீஸ்டு என்று ஆங்கிலத்தில்
கூறுவார்கள், சமீபத்தில் இங்குள்ள ஒரு பெரியவரோடு நெல்லையைச் சார்ந்தவர் அவர்,
தேர்தல் கருத்து சம்பந்தமாக முட்டிக்கொள்ள நேரிட்டது. குறிஞ்சி நம்புவது
மனிதர்களாகிய எல்லோருக்கு கருத்து உரிமை உள்ளது. எது சரி, எது தவறு
என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை. காலம் மட்டுமே அதனை உணரவைக்கும்.
மற்றபடி நாங்கள் தனிமனிததூதியையோ அல்லது துவேசத்தினையோ வெறுக்கிறோம்.
எங்களையும் மீறி அப்படி எதாவது சென்றால் நண்பர்கள் சுட்டிக்காட்டலாம், குட்டியும்
காட்டாலாம் என்றே எங்களது முதல் பதிவில் கூறியிருந்தோம்.
அவரிடத்து நாங்கள் தனிப்பட்ட முறையில்
செய்தி அனுப்பினோம் நீங்கள் தேர்தல் கருத்தினை காங்கிரசு ஆதரவாளன் என்ற முறையில்
பதிந்தீர்கள் என்றால் நாங்கள் எதுவும் கேள்வி கேட்க விரும்பவில்லை அப்படியில்லை
நடுநிலையாளனாக கேள்வி கேட்டீர்கள் என்றால் உங்களிடத்தில் எங்களுக்கு சில
முரண்நகைகள் உள்ளது அதைப்பற்றி விளக்கலாமே என்றோம். எங்கள் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.. முகவரியோடு வந்தால்தான் பதிலளிப்போம் என்றார், சரி
அது அவரது உரிமை என்று விட்டுவிட்டோம்.
மேலும் அவரது தேர்தல் செய்தியில் பல தவறுகள்
உள்ளது; முன்னால் மத்திய உள்துறை அமைச்சர் முப்தியின் மகள்
தீவிரவாதிகளால் 1989டிசம்பர் 8ல் கடத்தப்பட்ட பின் மகளை விடுவிக்க சில
தீவிரவாதிகளை 1989டிசம்பர் 13ல் விடுவித்தனர், அதற்கு பாஜக பதிலளிக்க
வேண்டுமென்றார் பெரியவர். அது நடந்தது விபிசிங்கின் ஆட்சியில் இந்தியாவின் முதல்
முஸ்லீம் உள்துறை அமைச்சராக முப்தி பொறுப்பேற்ற 5 நாட்களுக்குள் இந்த சம்பவம் நடந்தது. சரி அதனை நாங்கள் அவரது கவனக்குறைவு என்றே எடுத்துக்கொள்கிறோம், ஆனைக்கும்
அடி சறுக்குமல்லவா. அவரைப் போன்று உங்களுக்கு அரசியல் வரலாறு தெரியாது
என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை.
என்னவாக இருந்தாலும் அவரது அன்னை தமிழ் உரைக்கு
நாங்கள் ரசிகர்கள். அவர் தமிழை வைத்தோ, அரசியலை வைத்தோ பெரிதும் வியாபரம்
நடத்தியதில்லை என்பதை நன்கறிவோம். அவரது கோபம் எங்களுக்கு புரிகிறது
மீடியாக்களும் இன்றைய இளைஞர்களும் மோடியை அற்புத தேவதூதன்களாக மட்டும்
பார்க்கிறார்கள். அது தவறு என்கிறார். அவர் சொல்வதிலும் உண்மை உள்ளது என்ற
போதிலும் அவர் மோடியின் மீது வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளூம் காங்கிரசுக்கும்
அதன் தலைமைக்கும் பொருந்தும், ஆகவேதான் அவரது கூற்று ஏற்றுக்கொள்ளமுடியாததாகிறது.
முதலில் சீர்திருத்தப்படவேண்டியது காங்கிரசு அதற்கு இந்த இடைவெளி தேவை என்றே நாம்
நமது முந்தைய பதிவுகளில் பதிவு செய்திருக்கிறோம்.
அவரிடத்து ஒன்றைச் சொல்லவே விரும்புகிறோம்.
தமிழ்கடவுள் முருகன் அவரது அப்பனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தவர். ஆக
தமிழர்கள் நாங்கள் நியாயத்தினை எங்கள் தந்தையை போன்ற உங்களிடத்தும் கேட்போம்.
மற்றபடி உங்களிடத்து எள்ளலவும் பகையுணர்வு எதுவுமில்லை எங்களிடத்து. இது சம்பந்தமாக
அவரை வைத்து வரும் கட்டுரை கடைசி இதுவே.
Question
கோயிந்து: எது சரியோ,தவறோ அவரை வைத்து அவரைப் போன்றே தேர்தல் செய்திகள்
வெளியிட்டுடீங்க பாஸ்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக