NRIக்கள் வெளிநாட்டிலிருந்தபடியே
வாக்களிக்கலமா, அப்படியெனில் எப்படி? எனில் சமீபத்தில் சகோதரர் ஒருவர்
கேட்டிருந்தார்?
இந்த தேர்தலில் முடியாது. ஆயினும் இது சம்பந்தமான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ளது.
நீதிபதிகள் தேர்தல் கமிசனை இது
சம்பந்தமாக பதில் கூற வரும் திங்கள்(14-4-2014) வரை காலக்கெடு விதித்துள்ளது. ஏற்கனவே
அயல்நாடுகளிலிந்து பணியாற்றும் இந்திய தூதர்கள்
மற்றும் தூதரக அதிகாரிகள் வெளிநாட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி உள்ளது. அது
சாத்தியமாகும்பொழுது வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களும் தூதரகம்
வழியாக வாக்களிக்க வசதி ஏற்படுத்தி தருவது
எளிதுதானே என்று உச்சநீதிமன்றம் கேள்வி
எழுப்பியுள்ளது.
இருப்பினும் இந்த தேர்தலில் NRIயை
வாக்களிக்க வேண்டுமெனில், சாரி ப்ரோ நீங்க இந்தியாவுக்கு வந்துதான் வாக்களிக்க
வேண்டும்.
ஆனால் என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள்
நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமும், நண்பர்களிடமும் அவர்கள் அவர்தம்
வாக்குகளை யாருக்கு வாக்களிக்கலாம் என்று எடுத்துக்கூறலாம். மேலும் காலையிலேயே
வாக்கு சாவடிக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களை அனுப்பி தேர்தல்
அதிகாரியிடமோ, இல்லை அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னரோ நீங்கள்
வெளிநாட்டில் பணியில் இருப்பதால் வாக்களிக்க முடியாது என்பதனை சொல்வதின் மூலம்
உங்கள் வாக்கினை வேறு யாராலும் கள்ள ஒட்டாக பதிவு செய்யமுடியாது.
வெளிநாடுகளில் பணியாற்றுவோர், வெளி உலக அனுபவம் அதிகம் பெற்றதனால் சாதி, மத
துவேசமின்றி, எளிதில் நல்ல வாக்காளரை அடையாளம் கண்டு
கொள்ளமுடியும், எனவே நீங்கள் எடுத்துரைப்பதினால் நல்ல வேட்பாளர் வெற்றியடைய வாய்ப்புகள்
அதிகம் உண்டு. என்ன போன் பண்ண கிளம்பிட்டிங்களா... இருங்க ப்ரோ மிச்சத்தினையும்
படித்துவிட்டு போங்க..
வெளிநாட்டிலிருந்தபடியே வாக்காளர்கள் பட்டியலில்
பெயர் சேர்க்க முடியுமா?
படிவம் எண் 6-Aவை தேர்தல் கமிசன்
வலைதளத்திலிருந்தும், இந்திய தூதரகங்களிலிருந்தும்
பெற்று, சமீபத்திய புகைப்படத்தினை படிவத்தில் ஒட்டி, பாஸ்போர்ட் நகலையும் அதனுடன்
இணைத்து சம்பந்தபட்ட தொகுதியின் தேர்தல் அலுவலகத்துக்கு அனுப்பலாம்.
அந்தந்த தொகுதி தேர்தல்
அலுவலகத்தின் அஞ்சல் எண்ணையும்
வலைத்தளத்திலிருந்தே பெறலாம். தேர்தல் கமிசன் அதிகாரிகள் அதனை பரீசிலித்து முடிவு
செய்வர்.
நமது பெயர் சேர்க்கப்பட்ட
விவரத்தினையும் தேர்தல் கமிசன் வலைத்தளத்தில் உறுதி செய்துகொள்ளமுடியும்.
ஏற்கனவே வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளது,
ஆனால் தவறாக உள்ளது அதனை வெளிநாட்டிலிருந்தபடியே திருத்தமுடியுமா?
முடியும், படிவம் 8யை தகுந்த ஆதாரங்களுடன்
நிரப்பி தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி திருத்திக்கொள்ளமுடியும். தேர்தல் கமிசன் அதிகாரிகள் அதனை பரீசிலித்து முடிவு செய்வர்.
யாரேனும் வாக்காளர் பட்டியலில்
உள்ள வாக்காளர் சம்பந்தப்பட்ட தொகுதியை சேர்ந்தவர்(போலி வாக்காளர்) இல்லை எனக்
கூறமுடியுமா?
முடியும், படிவம் 7யை ஆதாரங்களுடன் நிரப்பி
சம்பந்தபட்ட தொகுதியின் தேர்தல் அலுவலகத்துக்கு
அனுப்பிவைக்கலாம். தேர்தல் கமிசன்
அதிகாரிகள் அதனை பரீசிலித்து முடிவு செய்வர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக