சனி, 19 ஏப்ரல், 2014

பேசாப்பொருளை பேசவிளைந்தேன் - 2 காங்கிரசும் இந்தியாவும்




இன்று ஊடகங்களிலும் முகநூலிலூம் காங்கிரசினை போட்டு புரட்டி எடுக்கிறார்கள், குறிப்பாக அர்னாப்புகளும், சர்தேசாய்களும், பர்க்காக்களும் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை பேசிக்கொண்டிருந்த தோனி வேறு, இன்றோ காற்று  வீசும்  திசைக்கேற்ப காங்கிரசினை போட்டு காய்ச்சு காய்ச்சுனு காட்டுறாய்ங்க, அவ்வளவு நல்லவங்களா இவிங்க...

து எப்படியோ இந்த தீவிர காங்கிரசு வெறுப்பு முன்னால் தீவிர காந்தியவாதியாகவும், காங்கிரசுகாரனாகவும் இருந்தவனுக்கு கடும் ஏமாற்றத்தினை தருகின்றது,  ஏதோ இந்த நாடு முன்னேறாமல் இருப்பதற்க்கு காங்கிரசு மட்டும்தான் காரணம் என்று ஒட்டுமொத்தமாய் சொல்லிவிட்டால் கடமை தீர்ந்ததாகுமா நண்பர்களே...

குறிஞ்சியிலும்  காங்கிரசுக்கு ஆதரவாக ஒன்றோ அல்லது இரண்டு கட்டுரைகளே வந்ததாக படுகின்றது. ஆகவே குறிஞ்சியின் வாயிலாகவே காங்கிரசு பக்கத்து நியாத்தினையும் தேர்தலுக்கு முன்பாக வைத்துவிட விரும்பினேன்

கொஞ்சம் உண்மையையும் பேசுவோம், மனதினை திறந்து வைத்துக்கொள்ளுங்கள் அதில்லாவிட்டால் நான் சொல்லுகின்ற கூற்று துவும் உங்களுக்கு ஏற்புடையதாகமல் போகலாம். நம்மால் ஒரே கட்டுரையில் இந்தியாவினையும் காங்கிரசினையும் பற்றி முழுமையாக விவாதிக்க முடியாது எனினும் கூடுமான வரையில் எம்மளவில் முக்கியமெனப்பட்டதை வைக்கின்றேன், உங்கள் பார்வையும் பதிலையும் குறிஞ்சி மின்னஞ்சலிலோ அல்லது பின்னூட்டத்திலோ வையுங்கள், பேசுவோம் விவாதிப்போம் கருத்துக்களோடு மட்டுமே அரிவா, அடிதடிலாம் வேண்டாம் நண்பர்களே உடம்பு ரணகளமாய்த்தான் இருக்கு ஏற்கனவே.

இன்று இந்தியா முழுமைக்கும் பரவி வியாபாதிருக்கும் கட்சி காங்கிரசுதான், அவர்கள் இல்லாவிடில் இந்தியா பல மாநிலங்களாகமட்டுமின்றி பல நாடுகளாக சிதறுண்டு போயிருக்கலாம். இன்றும் இந்தியா என்று வரும்பொழுது ஒன்று கிரிக்கெட் நம்மை அணிசேர்க்கின்றது அல்லது காங்கிரசு அணிசேர்க்கின்றது... 

உடனே ஆந்திராவை இரண்டாக பிரித்தது யார் என்று ஆரம்பிக்காதீர்கள், அது காலத்தின் கட்டாயம்,  ஆம் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் தெலுங்கானாவை பிரிப்பதை தவிர்க்க இயலாது. அதற்கு காங்கிரசு மட்டும் காரணமாகாது...  ​தெலுங்கானா நண்பர்களிடம் பேசிப்பாருங்கள் அவர்களின் வலி யாதெனப் புரியும் எந்தளவுக்கு அவர்கள் பிரிவினையில் உறுதியாக உள்ளனர் என்பது புரியும்.  என்னைக் கேட்டால் நதிநீர் பங்கீட்டினையும், ஐதாராபாத்தினையும் தவிர்த்து இந்த பிரிவு ஆந்திராவுக்கு லாபமாகவே பயன்படும் எனத் தோன்றுகின்றது. 50000கோடிகளுக்கு மேலான வளர்ச்சி நிதிகள், புதிய ஐஐடிகள், ஐஐம்கள், விசாகப்பட்டினம் முதல் சென்னை வரையிலான வணிக மையம் என எண்ணற்ற அளவிலான சலுகைகள்...

பாஜகவுக்கு வடகிழக்குமாநிலங்களிலோ அல்லது தென்மாநிலங்களிலோ பெரும்பான்மையான பகுதிகளில் சொல்லிக்கொள்கிறார்போல் கட்சி அமைப்புகளே கிடையாது என்பதே நிதர்சனம்.  

மைப்பு ரீதியாக  தமிழகத்தில்:

இன்றைய அளவில் என்னுடைய கணிப்பு சரியாக இருக்கும்பட்சத்தில் காங்கிரசுக்கு என்று பராம்பரிய வாக்குகள் தமிழகத்தில் ஐந்து முதல் பத்து சதவீதம் உண்டுஅவர்கள் 1987தேர்தலில் தனித்து போட்டியிட்டு பதினெட்டு சதவீத வாக்குகள் வாங்கியிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளும் பொழுது என்னுடைய ஊகம் சரியானதாகவே இருக்கும் எனத் தோன்றுகின்றது. இதனோடு சிறுபான்மைமக்களின் வாக்குகளும் சேரும் பொழுது காங்கிரசுக்கு நிச்சயம் ஐந்து முதல் பத்து சதவீத வாக்குகள் உண்டு தமிழகமெங்கும் பரவலாக...

மேலும் காங்கிரசுக்கு மிகப்பெரிய இடியே புதிய வாக்காளர்கள்தான், அதுவும் தமிழகத்தில் முதல் முறையாக வாக்களிக்கப்போகும் இளைஞர்களின் எண்ணிக்கை 25 சதவீதத்க்கும் அருகில் என்பதே. இவர்களை தங்களை நோக்கி இழுக்கும் வகையில் களமாடவில்லை காங்கிரசு அதுதான் பிரச்சினையே, மேலும் நகர்புறவாக்காளர்களும் காங்கிரசுக்கு எதிரணியிலேயே எப்பொழுதும் தமிழகம் போன்ற நகர்புறம் மிக்க மாநிலங்களில் காங்கிரசு அமைப்பு ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் தன்னை பலப்படுத்தாமல் திராவிடகட்சிகளின் மீது சவாரி செய்ததே இன்றைய நிலைக்கு காரணம்.
மேலும் ஈழத்தமிழர்களின் விசயத்தில் இந்திராகாந்தி கொண்டிருந்த நிலைப்பாட்டினை மேனன்களின் பேச்சினைக் கேட்டு மாற்றி அமைத்த ராஜிவ் காந்தி காலத்திலிருந்து தமிழகத்தில் காங்கிரசு அந்நியப்படத்தொடங்கியது. இது  உண்மையே, களத்தில் வேண்டுமானால் ஈழப்பிரச்சினை தாக்கத்தினை ஏற்படுத்தாமல் போகலாம், ஆனால் தமிழ் உணர்வாளர்களின் மத்தியிலும், தமிழ் அறிஞர்களின் மத்தியிலும் ஈழத்திற்கான ஆதரவு இன்றளவும் கொழுந்து விட்டு ஏறிகின்றது. அவர்களால் வாக்காளர்களின் மனதினை காங்கிரசுக்கு எதிராக எளிதில் மாற்றிவிட முடியும் அதுவும் பிரச்சினையே. போதாக்குறைக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எல்லை மீறுவதாக கூறி தொடர்ச்சியாக் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். இது கடற்கரை பிரதேசங்களில் காங்கிரசினை  சுத்தமாக துடைத்து எறியவைத்துவிட்டது.  



நேரு, பகதூர், இந்திரா காலகட்டம் (1947-1984):

நேருவின் சோசலிச பாணியிலான பொருளாதாரத்தினை விட்டு விட்டு முழுமையான தாராளமயமாக்கலுக்கு வந்திருக்க வேண்டாம் என எண்ணுகின்றேன்.. ஆம் இங்குதான் நான் காங்கிரசின் கொள்கையை எதிர்க்கின்றேன். அப்படியெனில் நான் இன்றளவில் கம்யூனிஸ்டுகளை மட்டுமே ஆதரிக்க வேண்டும் ஆம் அவர்கள் மட்டுமே தாராளமயமாக்கலுக்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள்...

நேருவின் சோசலிச பாணியிலான பொருளாதாரம்தான் நம்முடைய நவரத்தின பொதுதுறை நிறுவனங்களை கட்டமைத்தது. இஸ்ரோ, பெல், நால்கோ, LIC என மாபெரும் நிறுவனங்கள் மக்கள் நலம் சார்ந்து செயல்படத்தொடங்கியது

ந்தாண்டு  திட்டங்கள் மூலம் பெரும் பாய்ச்சலை  தொழில்துறையில் சாதித்தது. பிரச்சினைகள் ஆயிரம் இருந்தாலும் பொதுதுறை நிறுவனங்கள் மூலம் வரி மற்றும் லாப ஆதாயங்கள்  என ஆண்டுதொரும் மத்திய அரசுக்கு வரும் வருவாயை கணக்கில் கொள்ளவேண்டும்.


பின்பு வந்த இந்திராகாந்தி வங்கிகளை  தேசியமயமாக்கியது பெரும் சாதனை என்பேன். அதுவரை  தனியார் முதலாளிகளின் கட்டுப்பாட்டில்  வங்கி இருந்தது, அவர்கள் அவர்தம் நலம் சார்ந்த தொழிலுக்கு மக்களின் முதலீட்டினை திருப்பி விட்டுக்கொண்டிருந்தனர் ஒழிய மக்கள் நலம் சார்ந்த விவசாயம் போன்றவற்றிற்கு கடன் அளிப்பதில்லை. ஆக இந்திராவின் முயற்சியினாலேயே இன்றளவும் நம்முடைய வங்கி கட்டமைப்புகள் நிலையாகவும் உறுதியாகவும்  அமைய காரணமாயிற்று.




1971​ல் பாகிஸ்தானுடனான போரில் இந்திய ராணுவத்திற்கு பெட்ரோல் அளிக்க மறுத்தன அன்றைய  தனியார் பெட்ரோல் நிறுவனங்கள், அதனாலேயே இந்திரா தலையிட்டு அனைத்து பெட்ரோல் நிறுவனங்களையும் பொதுவுடைமையாக்கினார்.

ப்பவாச்ச்சும் முழிச்சுக்கோங்க நண்பர்களே  தனியார் வந்தால்தான் சேவை நன்றாக இருக்கும் என்பது கட்டுக்கதை,  தனியார் தங்களுடைய லாபத்தினை  தவிர வேறு எதையும் செய்யமாட்டார்கள்.  பொதுதுறை நிறுவனங்கள் இன்று சரியாக வேலை செய்யவில்லையெனில் அதிகாரிகளை இடித்தும் தேவைப்பட்டால் அடித்தும் வேலை வாங்கியிருக்கவேண்டும்.  நமக்கு காலில் புண் வந்தால் அறுவை சிகிச்சை செய்து புண்ணை மட்டும் நீக்குவோமா அல்லது காலினையே நீக்குவோமா... ஆக பொதுதுறை நிறுவனங்க்கிடையே போட்டித்தன்மையை உருவாக்கியிருக்கவேண்டுமே ஒழிய முற்றிலும் தனியார் மயமாக்கியது தவறு.  



மேலும் அதுவரை இந்தியாவின் முன்னால் ஜமின்தார்களுக்கு மானியமாக மாபெரும் தொகை ஆண்டுதொரும் வழங்கி வந்ததனையும் இந்திராகாந்தி ரத்து செய்தார்.  அதனை அன்று எதிர்த்தது ஜனசங்கம் அதுதாம்பா இன்றைய பாரதியஜனதா... :)

நேருவினையும், இந்திராவையும் முட்டாளாக கருதியதே இன்றய காங்கிரசுவின் தோல்வி.


சிங்கப்பூரில் வசிக்கும் எனது நண்பர் உரைத்த கூற்று, சிங்கப்பூர் முழுமையாக தாராளமயமாக்கலுக்கு உட்பட்டு வளர்ந்த நாடு ஆயினும் அங்கே மளிகை கடைகள் போன்றவற்றிற்க்கு உள்ளூர் சார்ந்த நிறுவனங்களையே அரசாங்கமும், மக்களும் முதலில் ஆதரிக்கிறார்கள், நாடுகிறார்கள்.

அதாவது எந்த  தொழில்நுட்பத்தினை அவர்களால்நேர்த்தியாக செய்யமுடியவில்லையோ அந்த தொழில்நுட்பத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ அல்லது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு  திறந்து விடுவதின் மூலம் மட்டுமின்றி தங்களின் குறிப்பிட்ட நிதி, உழைப்பு சார்ந்த பங்களிப்பினை உறுதி செய்வதின் மூலம் எதிர்காலத்தில் அந்த துறையில் சிங்கப்பூர் சார்ந்த நிறுவனங்களை நேரடியாக களம் இறங்குவதனை  உறுதி செய்கிறார்கள்.  

னால் நம்மில் பெரும்பான்மையான நண்பர்கள் இங்கு வால்மார்ட்டுக்கு கொடி பிடிக்கின்றோம். என்ன செய்ய... து சம்பந்தமாக பிரிதொரு நாளில் விரிவாக பேசுவோம்.

பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் பொருளாதாரம், வெளியுறவு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் பெரிதும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை...


ராஜீவ்வும், நரசிம்மராவும்:(1984-1996)

ந்திராகாந்தியின் மறைவுக்கு பின்பு, பஞ்சாபியர்கள் மீது  திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரத்துக்கு பின்பு  "பெரும் ஆலமரம் சரியும் பொழுது சில சிறிய செடிகளின் வீழ்ச்சியும் இருக்குமென" என புதுப்பழமொழியை உதிர்த்துவிட்டு மிருகபலம் கொண்டு ஆட்சியில் ராஜீவ் ஏறினார்.

கம்ப்யூட்டர் கல்வியை இந்திய அளவில் அடிப்படைக் கல்வியாக்கியது ராஜீவின் கனவு என்கிறார்கள். ​பஞ்சாயத்து ராஜ்யம்  திட்டமும் அவரது கனவேயாகும்.  ஆனால் அது முறையாக செயல்படவிடாமல் தடுத்தது மாநில் அரசுகளே.


90களில் பொருளாதாராம்  துவண்ட நேரத்தில்  தைரியமாக தாராளமயமாக்கலுக்கு ஒப்புகொண்ட நரசிம்மராவும் காங்கிரசினை சார்ந்தவர்தான்.  அதனால்தான் இன்றளவில் நம்மால் ஐடிதுறைகள் மட்டுமின்றி பிறதுறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைய முடிந்தது. மற்ற முன்னேறிய நாடுகளை விட  இந்தியா கணினி துறையில் சாதனை படைக்கிறது குறைந்த ஊதியத்தால் மட்டுமில்லை தகுதியான தொழிலாளர்கலும் இருப்பதாலே... 

தனியார்மயமாக்கலுக்கு பிறகுதான் பணக்காரர் பெரும் பணக்காரர் ஆவதும், ஏழை பெரும்ஏழை ஆவதும் நிகழ்கிறது.  இதற்க்கு என்ன செய்திருக்கவேண்டும் குறிப்பாக ஒரு தொழிலில்  ஆதிக்கம் செலுத்துவோர் வேறு தொழில் ஆரம்பிக்ககூடாது என்ற சட்டத்தினை கடுமையாக அமல்படுத்தியிருக்க வேண்டும், கவனிக்கவும் இங்கே ஏற்கனவே அந்த சட்டம் அமலில் உள்ளது :)

னால் ஊழல் கொண்டு அரசியல்வாதிகள் வழைக்கப்பட்டு  தனியார் முதலாளிகள் கோலேச்சும் காலம் வரக்காரணமானது மட்டுமே காங்கிரசு, அதனை வேறு வேறு எல்லைக்கு அப்பால் எடுத்துச்சென்றது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து கட்சியனரும்தான். தனியார் முதலாளிகளிடம் விலை போனது காங்கிரசு மட்டுமல்ல, இதில் அனைத்து கட்சியினரும் பாஜக, திமுக, காங்கிரசு, சமாஜ்வாடி, லாலு, பவார்,  ஏன் கம்யூனிஸ்டுகளும் அடக்கம். ஆக காங்கிரசினை மட்டும் கழுவிலேற்றுவது தர்மமாகாது.  

பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் சில்லரை வணிகம் தவிர்த்து அனைத்திலும் வெளிநாட்டு முதலீடுக்கு திறந்து விடப்படும் என்றே கூறியுள்ளனர். வங்கி, காப்பீடு இரண்டுமே நூறு சதவீத லாபம் கொளிக்கும் தொழில் அதனை யார்  திறந்துவிட்டாலும் தவறே... நண்பர்களே மோடியிடம் எடுத்துகூறுவீர்களா ?!?!



வரப்போகும் ஆட்சியாளர்கள்  தனியார் முதலாளிகளின் கொட்டமடக்கி  மக்கள் நலம் சார்ந்த அரசு அமைப்பர் என்ற உறுதிமொழியும்  தரவில்லை.

சோனியா, ராகுல், மன்மோகன் காலக்கட்டம்.(2004-14)

தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு மேல் காங்கிரசுஆட்சியில் இல்லாததால், சிறப்பான அறிக்கையை 2004ல் கொடுத்தனர், அதில் குறிப்பிடத்தக்கது தகவல் அறியும் உறிமைச்சட்டம். அதனால்தான் இன்று பாதி அரசியல்வாதிகளின் டவுசர் அவிழ்க்கப்படுகின்றது.

சரியோதவறோ நூறு நாள் வேலை வாய்ப்புதிட்டம் வரப்பிரசாதம், தமிழகத்தில் வேண்டுமானால் அது வேறு மாதிரியான  தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கலாம்ஆனால் உத்திரபிரதேசம், பீகார் போன்ற பின் தங்கிய மாநிலங்களில் அது மகத்தான தாக்கத்தினை ஏற்படுத்தியது, அதன் விளைவே 2009ல் காங்கிரசு வெல்லமுடிந்ததுஆனால் காங்கிரசின் தூரதிருஷ்டம் அந்த திட்டத்தினை சரியாக கையாளவில்லை; அதுவும் மாபெரும் ஊழல் கறையாயிற்று. அந்த திட்டத்தினை சரி பண்ணியிருந்தால் இந்தியாவின் வறுமை ஒழிக்கும் திட்டமாக இருந்திருக்கும், மணிமேகலையாகவே சோனியா ஆகியிருக்கலாம்.

ராகுலை பெரும்பாலும் விதூசகராகவே இளையோர்கள் எண்ணுகின்றார்கள், அது  தவறு. ராகுலின் நதிநீர்திட்டம் சார்ந்த கருத்தினை வரவேற்கின்றேன். ஆம் நதி நீர் இணைப்பு திட்டம் என்பது  மிகப்பெரும் தவறு. இயற்கையை நம்மால் வென்றெடுக்க முடியாது. மத்திய ஐரோப்பாவில் ஒரு நாட்டில் நதிநீர் இணைப்புதிட்டம் தோல்வியிலேயே முடிந்துள்ளது. நன்னீர் கடலுக்குள் செல்லாமல் கடல் நீரின் உப்புத்தன்மை அதிகரித்து கடலியில் உயிரினங்கள் அழிந்துள்ளதாக ஒர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ​நமக்கு மட்டுமானதல்ல இந்த பூமி இது எல்லா உயிரினருக்கும் பொதுவானது.

ஒரு சொட்டு நீரும் கடலுக்கு அனுப்பாமல் இருந்தால் நதியின் முகத்துவாரம் நன்னீரையே பார்க்க முடியாது, எந்த நதியிலும் முகத்துவாரம்தான் செழிப்பு மிக்கது கங்கையின் முகத்துவாரமான வங்கத்திலே பெரும் விவசாயம் நடைபெறுகின்றது. அவ்வளவு ஏன் காவிரியின் முகத்துவாரமான டெல்டா பகுதிதான் தமிழக நெற்களஞ்சியம்.

காவிரியில் தூர் வாருகின்றேன், தென்பெண்னையாற்றில் தூர் வாருகின்றேன் என்று உலகவங்கியில் ஐந்தாயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கினார்கள்  ஒரு திராவிட கட்சியின் ஆட்சியில்,  நமக்கு யாருக்காவது தெரியுமா அவர்கள் தூர் வாரினார்களா இல்லையா என்று. அந்த நதிகளில் எல்லாம் நீர் பெருக்கெடுத்து ஒடுகிறதா நண்பர்களே.  ​நீங்கள் அதில் ஊழல் என்று குற்றச்சாடினையும் வைக்கமுடியாது. அரசியல்வாதிகள் என்ன கூறுவார்கள் தெரியுமா நண்பர்களே, வெள்ளத்தில் நதி மூடிவிட்டது நாங்கள் தூர்வாரியதை என்பார்கள்ஆக நதி நீர் இணைப்புதிட்டம் என்பதும் பெரும் ஊழலுக்கு வழி வகுக்கும் என்பேன்.

ங்கு மேலும் நான் குறிப்பிடவிரும்புவது மழையே இந்த தேசத்தில் பொய்த்து கொண்டு வருகின்றது. அப்படி இருக்க மழை வரும் என்று நம்பி பெரும் பணத்தினை(பில்லியன் டாலர் கோடிகள்) அதனில் போட்டு விட்டு பலன் வராவிட்டால் யாரிடம் போய் நாம் நிற்பது.  முதலில் தெலுங்கு கங்கைதிட்டமான  கிருஷ்ணா நதிநீர்-சென்னை குடிநீர் திட்ட இணைப்பின் பலா பலன்களை நன்கு ஆராய்வோம், பிறகு நதி நீர் இணைப்பு திட்டம் பற்றி விவாதிக்கலாம்

பொறுங்கள் நான் நதி நீர் இணைப்பு திட்டத்தின் எதிரி அல்ல, முதலில் நாம் நம் மீது உள்ள கறையினை துடைத்திடுவோம், ஆம் ஏரி குளங்களை ஆக்கிரமிக்கமால் வீடுகள் கட்டாமல் விட்டாலே,  நமக்கு தற்பொழுது பெய்யும் மழையே உபரியாக கடலில் கலக்காமல் நமது குளங்களில் தங்கியிருந்து நம் மண்ணின் நீர்வளத்தினை அதிகரிக்கும். காமராசர் காலத்திற்கு அப்பால் எத்தனை குளம்,ஏரி புதிதாக அமைத்திருக்கிறோம், இருக்கின்ற குளத்தினையெல்லாம் அபார்ட்மென்டுகளும், காலேஜ்களும் கட்டிவிட்டு நதி நீர் இணைப்புதிட்டம் பற்றி பேச வெட்கமாயில்லை நமக்கு.    

முதலில் மரம் நடுவோம் மழை பெறுவோம் :)

காங்கிரசுவின் பின்னடைவினால் 2014ல் எனக்கு ஆச்சரியமளித்த மாற்றங்கள் காங்கிரசு தலைமையிடத்து.

பொது சிவில் சட்டம், எல்லோரும் சமம்:

பொது சிவில் சட்டம், எல்லோரும் சமம் ன்பதை ரொம்ப காலமாக பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்ம் கூறி வருகின்றது. என்னுடைய பெரும்பான்மையான நண்பர்களில் பாஜகவினை நோக்கி நகர ஆரம்பித்தற்கு இதுவும் ஒரு காரணம் என நினைக்கின்றேன்.

தன் கீழே வருவதுதான் இடஓதுக்கீடு எனும் மிகவும் சர்ச்சைக்குரிய பிர்ச்சினை,  தனை குறித்து பிறிதொரு கட்டுரையில் விரிவாக விவாதிப்போம்

தற்போது காங்கிரசுவின்  தேர்தல் அறிக்கையில் பொருளாதார அடிப்படையிலான இடஓதுக்கீட்டினை எல்லா தரப்பினரை சார்ந்தவர்களுக்கும் அறிவித்திருக்கிறார்கள்.  இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு என்பதை காலம் உணர்த்தும்.

வங்கிதுறையில்  புதிய தனியார் நுழைவு:  மார்ச் மாத கடைசியில் வந்த அறிவிப்பில் அம்பானிக்களுக்கும், டாட்டாவுக்கும் அங்கீகாரமளிக்கப்படவில்லை என்பது வரவேற்கத்தக்கது. அவர்களுக்கு வங்கிதுறை அனுமதி வழங்கினால் மோனோபாலிக்கு வழிவகுக்கும் என்பேன்.  இங்கு மோடி என்ன செய்ய போகிறார் நண்பர்களே பார்த்து விடுவோம்.

திர்காலம் (2014 முதல்...):
ப்படியானால் காங்கிரசினையே தொடர்ச்சியாக ஆட்சியில் அமரவைக்கலாமா என்கிறீர்களா. தேவையில்லை காங்கிரசுக்கு கொஞ்சம் ஒய்வு தேவை இப்பொழுது, அப்படியானல்தான் அவர்களால் புதிதாக சிந்திக்கமுடியும், புதியவர்களை அரசியலில் களமிறக்கமுடியும் ஆக இந்த ஒய்வு  தேவை. ஆனால் காங்கிரசினை ஒரேடியாக ஒதுக்கி  தள்ள வேண்டாம் நண்பர்களே. மேலும் உங்கள் புதிய ஆட்சியாளர்களிடம் நீங்கள் காங்கிரசிடம் என்னவெல்லாம் எதிர்பார்த்தீர்களோ அத்தனையும் பெற முடியுமா என்று பாருங்கள் இல்லையெனில், ஹீஹீ மீண்டும் காங்கிரசுவே எதிர்காலத்தில் பதவிக்கு வருமேன்பேன்.

கண்மூடித்தனமாக  வரும் ஆட்சியாளர்களை ஆதரிக்காதீர்கள், அவர்கள் ஒன்றும் திரைப்படத்தில் தோன்றும் ஹீரோக்கள் அல்ல  நமது பிரச்சினைகளையெல்லாம் ஒரே நாளில் மாற்றிவிட. முதலில் அவர்கள் பொது மக்களின்  சேவகர்கள், சில தனிப்பட்ட லூகைகள் தருவதே கூட பொது மக்களின் சேவையை  தொய்வின்றி செய்யவே ஒழிய, அது ஒன்றும் அவர்களுக்கான பிறப்புரிமை கிடையாது.
வரும் காலத்தில் வரும்  ஆட்சியாளர்களிடம் மண்டி போடுவதை விட நமக்கு தேவையானதை எடுத்து கூறி பெரும்  தைரியம் வேண்டும்.

மோடி முந்துவதாகவே எமக்கும் படுகின்றது, அவரிடத்து யாம் கூற விரும்புவது யாதெனில். இதே தனியார் முதலாளிகலும், தனியார் பத்திரிக்கைகளும்  சரியாக சொல்லப் போனால் மார்ச் முதல் வாரம் வரை காங்கிரசுவின் பின்னால் ஜால்ரா அடித்துக்கொண்டிருந்தனர். அதனாலேயே மக்கள் உங்கள் பின் அணிதிரள ஆரம்பித்தனர்.  

நீங்களும்வென்ற பிறகு தனியார் முதலாளிகளின் மகுடிக்கு ஆடத்தொடங்கினால் மக்களும் உங்களை ஆதரிப்பதை கைவிடத் தொடங்குவர் என்பதை எச்சரிக்கையாகவே வைக்கின்றேன். ​மோடி ஆட்சியில் அமர 40 சதவீத வாக்குகள் வேண்டும், ஆனால் காங்கிரசுக்கு 30 சதவீத வாக்குகளே போதுமானது என்பதை மோடி நினைவில் நிறுத்தி மக்கள் நலம் சார்ந்த மாற்று அரசாங்கம் அமைக்கவேண்டுமென்பது எம்முடைய விருப்பம். முந்தைய காலங்களில் உங்கள் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டிற்க்கு அர்ணாப்புகளும், பர்காக்களும் குரல் கொடுக்கவில்லை, குறிஞ்சியே கொடுத்தது என்ற உரிமையில் உங்களிடத்தில் எடுத்து கூறவும் இடித்துரைக்கவும் எங்களுக்கு உரிமையுண்டு...

ன்று காங்கிரசுக்குதான் குரல் தேவை ஆகவேதான் நாங்களும் காங்கிரசுக்கு ஆதரவான கட்டுரையை சமைத்தோம்.  ஒரு உண்மையான பத்திரிக்கையாளன் எப்பொழுதும் எதிர் தர்ப்புக்கு ஆதரவாளனாகவே இருந்தால்தான் அவனால் மக்கள் நலம் சார்ந்த பிர்ச்சினைகளை பேச முடியும்.  வரும்காலத்தில் நாம் எதிரணியில் அமர்வோம் எதிரியாக அல்ல மக்களின் நலம் பேண...

மோடி செய்யவேண்டுவதுயாதெனில் ன்பதனை பிறிதொரு கட்டுரையில் வடிக்கிறோம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக