சனி, 8 மார்ச், 2014

வணக்கம் அன்பர்களே,

வணக்கம் அன்பர்களே,

நாங்கள் உங்களை குறிஞ்சியின் மூலமாக தொடர்பு கொள்ள ஆரம்பித்து ஏ​றக்குறைய ஒருவருடம் ஆகப் போகிறது. எழுத்துப்பிழைகளொடு மட்டுமல்ல தமிழின் வாக்கிய முரண்பாடுகளோடு எங்களை வாசித்தமைக்கு நன்றி, எழுத்துப்பிழை இல்லாமல் எழுதச்சொல்லி நண்பர் குழாம் எம்மோடு முரண்பட்டு வருத்தப்பட்டதுண்டு.  ஆயினும் என்ன பண்ண வச்சிக்கிட்டா வஞ்சினம் பண்ணுகின்றோம். 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள் கடும் பணி சூழ்நிலைக்கிடையில் சுமார் 1மணி நேரத்திற்க்குள் எழுதப்பட்டதே. யாம் என்ன சொல்லவருகின்றோம் என்பது எம்முடைய தமிழ் பேசும் நல்லுலகுக்கு போய் சேருவது நலம்; தவிர எப்படி எழுதுகின்றோம் என்பதல்ல என அவர்களை சரிகட்டினோம். நீங்களூம் புரிந்து கொண்டு ஆதரவு தருவீர்கள் என நம்பிக்கையோடு பயணத்தினை தொடர்கின்றோம்.  



வெகுஜன பத்திரிக்கைகள் மக்கள் நலம் சார்ந்து எழுதுவல்ல என்ற ஆதங்கத்திலே யாம் இப்பயணத்தினை ஆரம்பித்தோமே ஒழிய வெகுஜன பத்திரிக்கைகளூக்கு எ​திராக அல்ல, மேலும் அவர்களூக்கு இருக்கும் பிரச்சினைகளையும் புரிந்துகொள்கிறோம், எனவே எங்களது இந்த பயணம் அவர்களை எதிர்த்து அல்ல, அவர்களோடு இணைந்தே என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றோம்.  அ​தனால்தான் எப்பொழுதெல்லாம் மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகளை அவர்கள் எழுதியபொழுது பிற இதழ்களில் அதனை மறுபதிவு செய்தோம் அவர்களது நாமத்தோடு.  

இ​தனை இங்கு ஏன் பதிவுசெய்ய விரும்புகின்றோம் என்றால் இப்பொழுதெல்லாம் 
தொலைக்காட்சியை திறந்தாலே குல்லாவை மாட்டிக்கொண்டு  துடைப்பத்தினை எடுத்துக்கொண்டு எமது வீட்டு முற்றத்தினையும் சுத்தம் செய்தே தீருவேன் என சில பேர் கிளம்பியிருக்கிறார்கள், யாம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் யாமும் ஊழல்பேர்வழி, மதவாதி என முத்திரை குத்திவிடுகிறார்கள்... மேலும் இங்கு குஜராத்காரர் சார்ந்த வாசனை தூக்கலாக இருக்கிறது என எண்ணும் நண்பர்களின் எண்ண ஒட்டத்திற்கு பதில் சொல்ல விரும்புகின்றோம். 

இந்த தேர்தல் என்பது வாக்குப்பதிவு அன்று வாக்கினை பதிவுசெய்து விட்டு வந்து ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன நாம் இருந்து விடலாகாது. இது அடையாளம்  சார்ந்த தேர்தல் இப்பொழுது ஆண்டு கொண்டிருக்கிறவர்களை தொடர்ச்சியாக மேலும் ஆளவிட்டால் நாம் நமது சுய அடையாளத்தினை இழந்து விடுவோம், அவர்கள் நம்மை அறியாமல் நம்மை மெதுவாக அடகு வைத்து கொண்டு உள்ளார்கள், சில விசயங்களை வெளிப்படையாக விவாதிக்கலாம் சில விசயங்களை விவாதிக்கமுடியாது. நாமென்ன சவுக்கா பிறகு நம்மையும் வம்பு வழக்குனு அழைய வைத்துவிடுவார்கள் வேண்டாமப்பா இந்த விவகாரம். அதனால் அதனை வெளிப்படையாக பேசவிரும்பவில்லை, மேலும் புதியவர்கள் வந்தால் விமோச்சனம் வருமா என்று கேட்பவர்களூக்கு என்னிடம் இருக்கும் பதில் அதில் தள்ளிப்போகும் ஆயினும் உடனே நடக்காது. அதற்க்குள் நாம் விழித்துக்கொள்வோம் இந்த விழிப்புணர்ச்சி பெருகும் எண்ணிக்கை பெருகும். டெல்லியில் நடந்த மாற்றம் மாதிரி தேசம் முழுக்க நடக்கும். நம்பிக்கைதானே வாழ்க்கை, நம்புங்கப்ப்பா...

உ​டனே டெல்லிவாலா நல்லவரா என்று கேட்டு என்னை துன்ப​ப்படுத்தாதீர்கள், நானே நொந்து நொடுல்ஸாயிருக்கேன்,ஆம் கையில் கிடைத்த நல்ல வாய்ப்பினை கோட்டை விட்டுவிட்டு நான் கோட்டையில் கொடி ஏற்ற போகிறேன் என்று கிளம்பும் சிறுபுள்ளைத்தனமாக இருக்கிறது. வரும் நாடாளூமன்றதேர்தலுக்கு பிறகு வெள்ளைக்காரன் ஆரம்பித்த கட்சி ஆக மோசமாக தோற்கப்போகிறது என்றே கருத்து கணிப்பு வந்துகொண்டிருக்கிறது. எனவே டெல்லிவாலா தொடர்ந்து ஆண்டு கொண்டிருந்தால் வெள்ளைக்காரன் ஆரம்பித்த கட்சிக்கும் வேறு வழியில்லாமல் டெல்லிவாலாவுக்கு ஆதரவு தந்தே தீர வேண்டுமே ஒழிய, அதில்லாமல் ஆட்சியை கவிழ்க்க முயன்றால் அங்கு தாமரை மலருமே ஒழிய கையை மீண்டும் தூக்கமுடியாது, எனவே டெல்லிவாலா முடிந்த வரையில்  துடைப்பத்தினை வைத்து டெல்லியை தூற்றூ சுத்தம் செய்திருக்கலாம். ஆக கை கால் வாறிவிடும் என்பதெல்லாம் அரசியல் வரலாறு தெரிந்த நண்பர்களின் பார்வையில் கற்பனையாகவே படுகின்றது. 

மக்கள் நலம் விரும்புவோர்க்கு இன்று மட்டுமே உறுதி. நாளை என்பது கிடையாது, நாளை என்பது வணிகம் சார்ந்து இயங்குவோர்களூக்கே, ஆக டெல்லிவாலா யார் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்துவிட்டு இப்பொழுது இவர் தேசம் முழுவதும் மாற்றம் வர வலம் வரப்போகிறாராம்.  உற்சவமூர்த்திக்கு எப்போழுதும் அதீத வரவேற்பு உண்டு, ஆயினும் மக்கள் மூலவரிடமே அவர்தம் குறைகளை வைப்பர் என்பது உற்சவமூர்த்திக்கு புரியுமா? மேலும் நம்மை  போன்று மாற்றம் விரும்பும் இளையோர்களூம் தேசம் முழுவதும் மாற்றம் வர பேஸ்புக்கில் கருத்து போடுவதோடு மட்டுமல்லாமல்  குல்லாவை மாற்றிக்கொண்டு வீதியில் துடைப்பத்தோடு வலம் வர தயாராகிகொண்டிருந்தோம் :) :) ஆயினும் இப்போ போய் குல்லா போட்டாமென்றால் டெல்லிவாலா அடித்த கூத்தில் அடிக்கின்ற கூத்தில் நம்மையும் ஏளனம் செய்து விடப்போகிறார்கள் என்று பயந்து இளையோர்கள் அவநம்பிக்கையில் உள்ளார்கள், மேலும் மக்களூம் பேசுவோரெல்லாம் ஆளமுடியாது எனச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். ஆக டெல்லிவாலா மொத்தத்தினையும் கெடுத்து பின்னோக்கி செலுத்திவிட்டார் என்றே நம்புகின்றோம்.   

சூப்பர்ஸ்டாராக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால்தான் திரைப்படமே ஒடுமே ஒழிய சூப்பர்ஸ்டாருக்காக அல்ல.. எம்மைப் பொருத்தவரையில் குஜராத்துக்காரர் சரியோ, தவறோ 15ஆண்டுகளூக்கு மேல் தொடர்ச்சியாக அங்குள்ள மக்கள் மத்தியில் ஆதரவினை பெற்ற பிறகே மத்தியில் வந்துள்ளார், அது போலவே டெல்லிவாலாவும் குறைந்தபட்சம் பத்து துறைகளிலாவது ஐந்து வருடம் ஏன் ஒருவருடம் ஆண்டு டெல்லியில் மாற்றம் கொண்டு வந்துவிட்டு மற்றவர்கள சரியில்லை என குறை கூற பயணம் செய்திருக்கலாம்.

உண்மையில் பதின்ம வயதுகளில் எமது  தந்தையை தைரியமாக முடிவு எடுக்க முடியாமல் இருந்த பணியிலே செக்குமாடாய் உழண்டீர்கள் என எண்ணி பகடி பண்ணியதுண்டு, அ​தற்கு அவர் பதில் சொல் ஏதும் எமக்கு கூறியதில்லை மௌனமாயிருந்துவிடுவார், ஆயினும் யாம் குடும்பபாரம் சுமக்க ஆரம்பித்து வெகு சில வருடங்களிலே அவர் எவ்வளவு கடினமாக மட்டுமின்றி நம்பிக்கையோடும் வாழ்வை மட்டுமல்ல எம்மையும் சுமந்திருக்கிறார் என்று உணர்ந்தபிறகு அவர் என் ஆதர்சபுருசர்களூள் ஒருவரானார்.  ஆக ​யாம்

"சொல்லுதல் யார்க்கும் எளிது அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்" 


- என்ற குறளின் விளக்கத்தினை சிறிதொரு வருடங்களுக்குப் பிறகு புரிந்துகொண்டோம். அதுபோல டெல்லிவாலாவும் புரிந்துகொண்டால் நலமே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக