செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

என்ஜிஓக்கள் என்ற அல்லக்கைகளின் அராஜகங்கள் ..

​​ என்ஜிஓக்கள்  என்ற அல்லக்கைகளின் அராஜகங்கள் குறித்து திரு இரா.முருகவேள் அவர்களின் நேர்காணல் விகடனில் இந்த வாரம் வெளிவந்தது. அந்த கட்டுரையின்  தாக்கத்தில் இந்த கட்டுரை எழுதப்பட்டது. யார் இந்த முருகவேள்? எரியும் பனிக்காடு என்ற நூலினை தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்தவர்.  அதாங்க பரதேசியின் மூலநாவல்...


அ​ரசாங்கம் செய்யவேண்டிய வேலைகளான நீர் மேலாண்மை அதாவது தண்ணீர்  தொட்டி, குழாய்கள் அமைப்பது, கல்வி மேலாண்மை, சுகாதார மேலாண்மை என அனைத்தினையும் அரசாங்கம் 90க்குப் பிறகு தாராளமயமாக்கலுக்கு பிறகு  தனியாரிடம் தாரை வார்த்தது. அதன் மூலம் மக்களிடம் அரசாங்கத்திற்கு எதிராக இயல்பாய் எழும் கோபத்தினை திசை திருப்ப உதவும் ஆயுதமே இந்த பசப்பு மனிதர்கள் என்ஜிஓக்கள்.

 இ​வர்களூக்கு வெளிநாட்டிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் நிதி குவிகின்றது. உதாரணமாக பில்கேட்ஸ் இந்திய மாநில அரசுகளூடன் நேரடியாக ஓப்பந்தம் போடுகின்றார், உங்க மாநில குழந்தைகளுக்கு நாங்கள் கணினி கல்வியை இலவசமாக வழங்குகின்றோம் என்று. ஆஹா வள்ளல் என்கிறீர்களா, அவர் சொல்லித்தருவது மைக்ரோசாப்டின் தொழில்நுட்பமான வின்டோஸ், ஆபிஸ் தொகுப்புகளைத்தான். அதை படித்து வெளியில் வரும் மாணவர்களூம் அதையே பயன்படுத்த தொடங்குவார்கள்.. ஆக கல்விசாலையில் மட்டும் இலவசம், வெளியில் வந்தீர்கள் என்றால் விலை கொடுத்தே வாங்கியாக வேண்டும். அதாவது முன் போட்டு பின் எடுக்கும் வியாபார தந்திரம்!

​ சரி சரி நாம் பேசுவது என்ஜிஓக்கள் பற்றியது. மேலே கூறியது உதாரணத்திற்குத்தான். இவர்களூக்கு வரும் பணம் வெளிநாட்டு அரசாங்கம் மூலமாகவோ அல்லது அங்குள்ள வியாபார நிறுவனங்கள் வைத்திருக்கும் அறக்கட்டளைகள் மூலமாகவோ இங்கு வருகின்றது. ஏன் வரவேண்டும் அப்படியானால்தானே அந்த பணம் என்ஜிஓக்கள் மூலமாக நமக்கு மடை மாற்றிவிட முடியும், நாமூம் தனியார்மயமாக்கத்திற்க்கு எதிராக குரலை உடனடியாக கொடுக்கமாட்டோம்.  அதற்க்குள்ளே அவர்களது நிறுவனங்கள் கோடிகளை வாரியெடுத்து சென்றுவிடலாம்.

 எ​ன்ஜிஓக்கள் ஒரு குடிநீர்தொட்டியை உங்கள் கிராமத்தில் கட்டுகின்றார்கள், அதன் தரம் சரியில்லையெனில் நீங்கள் அவர்களிடம் மல்லுக்கு நிற்பீர்களா.  அவங்களே இலவசமாக தருகிறார்கள் என அவர்களூக்கு தியாகி பட்டம் வேறு கொடுப்பீர்கள்.  ஆனால் உண்மை நிலை அவர்கள் உங்களை காட்டி கோடி கோடியாக வெளிநாட்டில் சம்பாதித்திருப்பார்கள்.  

 தாராளமயமாக்கத்திற்கு பிறகு இந்தியாவிலும் இருபது வருடங்களாக என்ஜிஓக்கள் சேவை செய்கிறார்கள், அப்படியானால் நம் ஊரில் பாலாறும் தேனாறும் அல்லவா ஒடவேண்டும். அதனால் இனி யாராவது வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கிதருகின்றோம், உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் கட்டித்தருவதாக கூறினால் உசாராக இருங்கள், உங்கள் ஊரை சுற்றி  ஏதோ இருக்கிறது என்று. அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை அரசாங்கம் செய்யட்டும்.

​ சமீபத்தில் டெல்லி ஆட்சி மாற்றத்திற்கு குடிநீர் பிரச்சினையும் ஓரு காரணம் என நாமெல்லாம் பத்திரிக்கையில் படித்திருப்போம். மனிதருள் புனிதர் அரவிந்த் கெஜ்ரிவால் அதற்கு அவரது 48நாள் பொற்கால ஆட்சியில்  தீர்வுகண்டதாக  ஊரெல்லாம் பெருமை பேசிக்கொள்கிறார்கள். முதலில் நம்மில் பல பேருக்கு தெரியாத சங்கதி டெல்லியில் வடபகுதி மக்களூக்கு குடிநீர் வழங்குவதற்காக 2012 இறுதியில் 15வருட ஓப்பந்தம் சுமார் 282மில்லியின் யூரோ மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்று வெளிநாட்டு நிறுவனம்(பெயர் எழுதவிரும்பவில்லை) ஒன்றோடு செய்யப்பட்டது. அவர்கள் லாபம் சம்பாதிக்க நினைப்பார்களா இல்லை சேவை செய்ய நினைப்பார்களா??

 அரசாங்கமே எல்லாவற்றையும் செய்துதரமுடியாது, ஊர்கூடி தேர் இழுக்கவேண்டும் என நம்மில் சில மேதாவிகள் மேம்போக்காக கூறுவதுண்டு. ​கல்வி சாலைகளை நடத்த முடியாத அரசாங்கங்கள் மதுநிலையங்களை  நடத்தமுடிகின்றதே.  இது யாரை ஏமாற்றும் வேலை...

​ மனிதருள் புனிதர் அரவிந்த் கெஜ்ரிவால் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற முயன்றதால் என்னுடைய அரசாங்கம் கவிழ்ந்தது என்கிறார். அவரது லோக்பால் சட்டத்தில் என்ஜிஓக்கள், அதற்கு உதவி புரியும் பன்னாட்டு நிறுவனங்களையும் கொண்டு வருவாரா என்று கேட்டு பாருங்கள், அதனை செய்ய மாட்டார் அவ்வளவு ஏன் அது குறித்து பேசவே மாட்டார். ஏனெனில் அவரது கபீர் எனப்படும் என்ஜிஓ அமைப்பும் வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுகின்றது. போர்டு நிறுவனம் 4.5கோடி அவர் அமைப்பிற்கு வழங்கியது.  பொறுங்கள் பொறுங்கள், அவர் நேர்மையாக அதன் கணக்கினை மக்கள் மன்றத்தில் வைப்பார் என்று பொங்குவோர்களே அவரையே என்ஜிஓக்களை முதலில் லோக்பாலுக்கு கிழே கொண்டு வரவையுங்கள் பிறகு பார்க்கலாம் அவரது நேர்மையை.  

 என்ஜிஓக்கள் வெளிநாட்டிலிருந்து பெரும் நிதி ஆதாரத்தில் நாட்டிலே டெல்லி முதலிடம், தமிழகம் இரண்டாமிடம் என்பது கவனிக்கத்தக்கது. கல்வி என்ற பெயரில் இங்கு சில மததொண்டு நிறுவனங்களின் அட்டுழியம் நாமெல்லாம் அறிந்த்ததே...

 தசாவதாரம் படத்தில் கமல் ஒரு காட்சியில் சொல்வார் இங்கு ஒரு வண்ணத்துப்பூச்சி பறப்பதற்க்கும் ஏதோவொரு தொடர்பு இருக்கின்றது என்பார், அதுபோலவே பெரும்பான்மையான மனிதர்க​ள் லாபம் இல்லாமல் சேவை என்ற பெயரில் இயங்குவதில்லை.

 அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பியாவிலிருந்தும் பணம் வருகின்றதாம், 2008-10 நிதி சிக்கலில் அமெரிக்காவே தள்ளாடுகின்ற போதும் இந்திய என்ஜிஓக்களூக்கு பணம்  தங்கு தடையின்றி வருகின்றது என்பதிலிருந்தே நாம் உண்மையை உணர வேண்டும். ஆனால் நாம்தான் அரசியல்தலைவனுக்கு கொடி பிடிக்கவும், நடிகனுக்கு பாலாபிசேகம் செய்யவும் நம்மின் நேரத்தினை செலவு செய்வோமே ஓழிய நம் வீட்டருகே உள்ள குளத்தினை தூர் வாரமாட்டோம். இதில் பாகிஸ்தானிலிருந்தும் பணம் வருகிறதாம் என்னத்த சொல்ல



மற்றுமொரு கொடுமை நம்ம தேசத்தில் காவலர்களை விட இந்த சேவையாளர்களின் எண்ணிக்கை அதிகமாம். சுமார் 20லட்சத்திற்கும் மேலே இருக்கலாம் என்கிறார்கள்.



அப்படியானால் நல்ல என்ஜிஓக்கள் இல்லவே இல்லையா. அப்படி சொல்லமுடியாது. இன்னும் மனிதம் மரித்து போகவில்லை இந்த மண்ணில், நண்பர்களூள் சில பேர் சேர்ந்து தங்கள் சொந்த காசினை செழவழித்து சேவை செய்யும்  எண்ணற்ற அமைப்புகள் உண்டு இந்த மண்ணில் அவர்களை ஆதரியுங்கள். அதை விட்டு விட்டு வெளிநாட்டிலிருந்து வரும் பணத்திலிருந்து இயங்கும் என்ஜிஓக்கள், அதிலிருந்தே அவர்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான பணத்தினையும் எடுத்துக்கொண்டு நம்மை நம்மின் வாழ்வாதாரத்தினை அடகு வைக்கிறார்கள். விழித்தெழுவோம் இனியாவது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக