ஞாயிறு, 9 மார்ச், 2014

கோலிவுட் - 1


தமிழ் திரைப்படத்திற்கு  உலகம் முழுவதிலும் சந்தை வாய்ப்பினை  ஏற்படுத்தியவர்கள் இருவராவர்.




1.  ஈ​ழத்தமிழர்கள் - தம் வாழ்வு தேடி அகிலம் முழுவதும் சென்ற இவர்களாலே பாலிவுட்டிற்கு அப்பால் தமிழ் சினிமாவும் கோலேச்சமுடிந்தது.

2. ​ரஜினிகாந்த் - இவர்தம் சுறுசுறுப்பான வாழ்க்கையில் போராடி வெற்றி பெறும் கதாபாத்திரங்களை தொடர்ந்து ஏற்றதினால் தமிழர்களிடம் மட்டுமின்றி அகில உலகமெங்கும் ரசிகர்களை பெற்றுள்ளார். இவரின் இயல்பான நகைச்சுவையும், விறுவிறுப்பான பாத்திரமும் மட்டுமின்றி சிறப்பான கதைத்தேர்வும் வெற்றியே இவரிடம் தன்னை அடகுவைத்தது.  

​தமிழ் சினிமா மேலும் வளர இவர்தம் ஒத்துழைப்பும் அவசியம்.  ஏன் சினிமா வெற்றியை தூக்கிபிடிக்கிறேன் என்று பார்க்கிறீர்களா? உலகம் முழுவதும் ஹாலிவுட் படங்களின் நடை, உடை அமைப்புகளே இன்று பின்பற்றப்படுகின்றது. அமெரிக்காவின்  கலாச்சாரம் வெகு எளிதில் வெகு ஜனங்களின் மனதில் உட்கார ஹாலிவுட் படங்களே காரணமாயிற்று என்பேன்.  ஆக முன் தோன்றிய குடி மூத்தகுடியான மொழியாம் தமிழ் இன்னும் கொஞ்சம் நாட்கள் பிழைத்து நிற்க சினிமாவின் வெற்றியும் ஒர் அவசியம்.  தமிழ்பற்றாளர்கள் என் மீது பாயலாம், ஆம்!  அறையெங்கும் அரிசி கொட்டிகிடந்தபொழுதும் எறும்பினை எளிதில் ஈர்ப்பது சிறு துளி வெள்ளம் மட்டுமே.

ஆ​க  திரைப்படத்தின் கவர்ச்சியை நாம் உதாசீனப்படுத்தமுடியாது. மேலும் இது பாலிவுட்டிற்கு சவால்விட ரஜினிகாந்த் போன்றோரின் பங்களிப்பு அவசியம், ஆக அவர் தொடர்ச்சியாக நடிப்பது அவசியம்.

​மேலும் பல கோடி புழங்கும் தொழில் இது, பல்லாயிரக்கணக்கனோர் இதனையே தங்கள் வாழ்வாதாரத்திற்க்கு நம்பி உள்ளனர்.  ​மேலும்  தமிழ்ரகளின் கலாச்சார பெருமையே உயர்த்தி பிடிக்கச்செய்யும் வகையிலான படங்கள் வருவதற்கு தமிழக அரசாங்கமும், தமிழ்திரைப்படத் துறையினரும் ஈடுபடவேண்டும் என்பது எம்மைப் போன்ற சாமான்யனின் அவா.

-சினிமாக்காரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக