புதன், 19 மார்ச், 2014

என்னப்பா நடக்குது இந்தியாவில் - பகுதி 5


ஹார்வேர்டு பட்டதாரிகளின் ஆட்சியில் இந்தியாவிலிருந்து வெளியே போன பணம்...

நம்ம தனியார் முதலாளிகள் வெளிநாடுகளில் கொண்டு போய் கொட்டிய பணம் பின்வருமாறு.


ஏன் காங்கிரசையே சும்மா சும்மா நோன்டிகிட்டிருக்கிறோம்னு கேட்கிற மகானுபவானுகளே பாருங்கள் இவர்கள்ஆட்சி நடத்திய லட்சணம்,  தனியார் முதலாளிகளுக்கு கோடி கணக்கில் நம்ம வீட்டு வரி பணத்தினை எடுத்து அவர்களுக்கு வரிசலுகை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், (அதற்கு ஆட்சியாளர்கள் கொடுத்த விளக்கம் நாம்  முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதின் மூலம் மக்களுக்கு அவர்கள் நிலையான வேலைவாய்ப்பினை உறுதிபடுத்தவர் என்றனர் ஆனால் முதலாளிகளோ ஆட்சியளார்களுக்கு பெரிய நாமம் போட்டுவிட்டு வெளிநாடுகளில் முதலீடு செய்தனர்) அவர்கள் வெளியில் போய் முதலீடு செய்வதை வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தனர் என்பதையே இந்த புள்ளி விவரம் காட்டுகிறது...



வெளிநாடுகளில் முதலீடு செய்வது தவறா என்பவர்களே, முதலாளிகள் முதலீடு செய்த துறைகளை, நாடுகளை பாருங்கள் உங்களுக்கே புரியும் நாம் பொங்குவது  ஏன் என்று?

​போக்குவரத்து, ஸ்டோரேஜ் நிலையங்கள், கம்யூனிகேசன் போன்ற துறைகளில் 30.40%களும்;
உ​ற்பத்தி சார்ந்த  தொழில்களில் 25.81%களும்
​விவசாயம், சுரங்க  துறைகளில் 16.50%களும்
​கட்டுமான  துறையில் 4.8%களும்
​மற்று சர்விஸ் துறைகளில் 4.33%களும்.



பாருங்க மகாஜனங்களே இந்த துறைகளில் எல்லாம் இந்தியாவில் வாய்ப்பே இல்லையாம் முதலீடு செய்ய அதனால்தான் வெளிநாடுகளில் முதலீடு செய்ய போயிருக்கலாம் விடுங்க மாமூ...
:
​நாடுகள் வாரியாக 


நெதர்லாந்தில் 28.8%, சிங்கப்பூர் 15.2%, பிரிட்டிஷ் 12.6%, மாலத்தீவு 10.3% மற்றும் அ​மெரிக்காவில் 7.0 சதவீதமும்...

அ​ங்கெல்லாம் வறுமை  தாண்டவமாடுகிறது,  தொழில் செய்ய வாய்ப்புகள் இருந்தும் பணம் இல்லை ஆகவேதான் வளர்ந்த வல்லரசான இந்தியாவிலிருந்து முதலீட்டிற்க்கு பணம் செல்கின்றது.



இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தின் தமிழ் பதிப்பில் வரும் அஜித் ஒரிடத்தில் அமெரிக்காவுக்கு தான் ஏன் வருகை தந்ததாக கூறும் போது, அமெரிக்காவின் பொருளாதாரத்தினை சுற்றுலா என்ற பெயரில் சில டாலர்களை செலவு செய்து  தூக்கி நிறுத்த வந்ததாக கூறுவார்,  மேலுள்ளவற்றை பார்க்கும் போது எனக்கும் அதுதான் நியாபகம் வந்தது.


ஐந்து வருடங்களில் சாலைகள் :
​கடந்த ஐந்து வருடங்களில் காங்கிரசு ஆட்சியில் சாலை அமைக்க போடப்பட்ட திட்டங்களும், செயற்படுத்தபட்ட சாலை வழிகளும், ஒரே நாளில் அமைக்கப்பட்ட சாலைகளும் கிலோமீட்டரில்...


இந்தியர்கள் வளர்கிறார்களா... என்ன மாமூ சொல்லறீங்கங்க?


​90களில் 63.2%ம் உணவிற்காக செலவழித்த இந்தியன் இப்பொழுது 48.6%மே செவழிக்கிறார்களாம்.  அதே நேரத்தில் 90களில் உணவில்லாமல் மற்றவற்றிற்கு செலவழித்த சதவீதம் 36.8%மும், தற்போது 51.4%மும் செவழிக்கிறார்களாம்.... இந்தியர்கள் வளர்கிறார்களா... என்ன மாமூ சொல்லுங்க?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக