வியாழன், 2 ஜனவரி, 2014

தமிழக மின்சார பிரச்சினைக்கு வருட கடைசியில் தீர்வு வந்தே விட்டது.. இனி பவர் கட் இருக்காது...

தமிழகத்திற்கு பெரிய நிவாரணம் கிடைத்தது வருட கடைசியில்,  ஆம் கடந்த செவ்வாய்க்கிழமை 31ம் தேதி 2013ல் தேசிய மின்சார கட்டமைப்புடன்  தெற்கு மின்சார கட்டமைப்பு இணைக்கப்பட்டு உள்ளது. ராய்ச்சூர், சோலாபூர், 765KV ஒற்றை சுற்று மின் பகிர்மானம் கட்டப்பட்டதன் மூலம் "ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு" என்ற கனவு சாத்தியமானது. இதற்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் Rs.815 கோடி செலவு செய்தது.

இந்திய ​மின் பகிர்மான அமைப்பு இதன் மூலம் நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறனால் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்து செயல்படும் மின்கட்டமைப்பு கொண்ட ​நாடாக இந்தியாவை மாற்றியது. இதன்மூலம்  232 கிகா வாட் கொண்ட அமைப்பாக இந்திய தேசிய மின் கிரிட் மாறியது.





தமிழ்நாடு, ​மிக கடுமையான மின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மாநிலங்களில் ஒன்று, மேலும் தேர்தல் வருவதாலும் இங்குள்ள முதல்வர் அவர்களுக்கு பிரதமர் கனவு வருவதாலும், மின் பற்றாக்குறை வரும் தேர்தலில் பெரும் தலைவலியாக இருக்கும் என்று அரசியல் கருத்தாளர்களின் எண்ணமாக இருந்த நேரத்தில் இந்த இணைப்பு  தமிழக ஆட்சியாளர்களின் வயிற்றில் மின்சாரத்தை பாய்ச்சி உள்ளது. (என்னப்பா வயிற்றில் பால் வார்க்கும் என்றுதான் கேள்விப்பட்டுள்ளேன் இது புதிதாக உள்ளதே...)


தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா போன்ற ​மாநிலங்கள் மின்சார பசியால் வாட அதே நேரத்தில் நாட்டின் வட மற்றும் கிழக்கு மாநிலங்களில் உபரியாக இருக்கும் மின்சக்தியை வாங்க இந்த ஒன்றோடொன்று  இணைப்புக்குகாக தமிழக ஆட்சியாளர்கள் வழிமேல் விழிவைத்து காத்திருந்தார்கள். ஆயினும் இந்திய பவர் கிரிட் கார்ப்பரேஷன் இந்த திட்டத்தினை ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே செயல்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




தெற்கு ​மின்கட்டமைப்பு நாட்டின் அனைத்து மின் கட்டமைப்புடன் கடைசியாக இணைக்கப்பட்டது. தெற்கு பகுதி ஏற்கனவே நன்கு செயல்பட்டு வந்தால இந்திய பவர் கிரிட் கார்ப்பரேசன் மற்ற பகுதிகளில் கவனத்தை வைத்தது முதலில். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக கடைசியில் தெற்கு பகுதியே கவலைக்கிடமானது பற்றி என்ன சொல்ல எம்மைக் கேட்டால் ஆட்சியாளர்களின் அலட்சியமே காரணம்...

குறிஞ்சி: இது  தமிழகத்தின் சிறு, குறு  தொழிற்சாலைகளுக்கு நிம்மதியை கொடுக்கும்.

பச்சபுள்ள மன்னாரு: ஹையா ஜாலி! தமிழகத்தின் தாய்மார்கள் இனி சீரியல்களை தங்கு தடையின்றி பார்த்து கண்ணீர் விடலாம்...

QUESTION கோயிந்து: இருப்பினும் இது தற்காலிக தீர்வாகவே அமையும், இதன் வழியே இப்பொழுது 1000மெகாவாட்டினை மட்டுமே பகிரமுடியும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக