2014தேர்தலில் முதல்
கூட்டணி விபரம்...
என்ன பார்க்கிறீங்க
காங்கிரசோடு யார் கூட்டணி வைத்தார்கள், பாஜகவோடு தேமுதிக இணைந்ததா என்றா, சாரி ப்ரோ இத வேறு மாதிரியான கூட்டணி...
2014 தேர்தலில் அரசியல் கூட்டணிகள் இன்னும்
உறுதியாகாத சூழ்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அதன் ஆன்லைன்
வாக்காளர் பதிவு மற்றும் மேலாண்மை வசதிக்காக Google உடன் ஒரு முக்கிய
உடன்படிக்கையை செய்து கொண்டது.
அடுத்த இரண்டு மாதங்களில்
கூகிளானது, வாக்காளர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் வாக்காளர் சேர்க்கை நிலையை
சரிபார்க்கவும், Google Maps உதவியுடன் வாக்கு சாவடிகளின் இடத்தை தேடவும் அதன் வளங்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க இருக்கிறது.
வாக்காளர்கள் செய்ய
வேண்டியது அவர்களது பெயரை தேர்தல் அட்டவணையில் இருக்கிறவாறு கூகிள்
தேடுபொறியில் சுட்டினால் அது அவர்களது தொகுதி, வாக்குசாவடி முகவரி மேலும் எங்ஙனம்
அதை அடைவது போன்ற தகவல்களை உங்களிடத்து கொண்டு வந்து
சேர்க்கும்... அவசரப்படாதீங்க அப்பு இது இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை அடுத்த மாதத்திலிருந்து
பார்க்கலாம்...
இந்திய தேர்தல்ஆணையம் 2014 தேர்தல் நிலவரங்களை
வெளியிடவும் கூகிளின் உதவியை நாடியுள்ளதாகவும், அது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள்
இன்னும் விவாதநிலையிலே உள்ளன என்றும் களநிலவரம் தெரிவிக்கிறது. 2013 டிசம்பரில் 5
மாநில தேர்தல் நிலவரங்களை வெளியிட அமெரிக்க ஐடி நிறுவனமான அகாமியின் உலகம் முழுவதுமுள்ள
272 செர்வர்களை உபயோகித்தது என்பதை விட ஆச்சரியமளிக்ககூடிய விசயம் இந்திய தேர்தல்
ஆணையம் 2009 பாராளுமன்ற தேர்தலில் 2 செர்வர்களையே தேர்தல் நிலவரங்களை வெளியிட
உபயோகித்தனர் :)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக