செவ்வாய், 31 டிசம்பர், 2013

இ​யற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவு

இ​யற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் - தோற்றம் 1938; மறைவு 2013.

நம்மாழ்வார் நம்மின் இதயங்களை ஆள்வார்
​நம்மை ஆள்வோரின் அவலங்களை எதிர்த்தார் 
​​தம் வாழ்நாளெல்லாம் களத்திலிருந்தா​ர்.

​வாய்சொல்லில் வீரம் காட்டாமல்
​வாய்க்கால் வரப்பில் உரம் காட்டாமல் 
நம் மண் செழிப்பது எ​ப்படி என்றுரைத்தார்.

​தானும் தம் மக்களும் செழிக்கவேண்டுமென
​நினைக்கும் மாந்தர் கூட்டத்தில் - நாமும்
​நம் மண்ணும் செழிக்க நினைத்த உத்தமர்.

நம்மாழ்வார் நம்மின் இதயங்களை ஆள்வார்
​நம்மை ஆள்வோரின் அவலங்களை எதிர்த்தார்.

நாம் அவருக்கு செய்யவேண்டிய ​கைமாறு
அ​வர் விட்டுசென்ற பணிகளை முன்னெடுப்பதுவே...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக