என்ன பார்க்கிறீங்க இது கிரிக்கெட்டிற்கானது
அல்ல, கால்பந்து சம்பந்தப்பட்டது.
2017ல் இந்தியா
17வயது உட்பட்டோர்க்கான கால்பந்து போட்டியை ஏற்று நடத்தவிருக்கிறது. இது கிரிக்கெட்டை
மதமாக கொண்ட தேசத்தில் கால்பந்துக்கும் இடம் ஏற்படுத்தி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியானது மும்பை, டெல்லி,
பெங்களூர், கௌகாத்தி, கொச்சி, கோவா, புனா, கொல்காத்தாவில் நடக்கலாம் என்றும் 24 அணிகள்
இதில் கலந்து கொள்ளும் என்றும் என தெரியவருகிறது.
கால்பந்து அசோசியனான பீபா-வின் தலைவர் செப் பிளாட்டரும், இந்திய
கால்பந்து அசோசியன் எஐஐப்-ன் தலைவரான பிரபு படேலும் இந்த முடிவு செய்யும் கூட்டத்தில்
கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக