திங்கள், 9 டிசம்பர், 2013

என்னப்பா நடக்குது இந்தியாவில் - பகுதி 4

நேற்று  தேர்தல் நிலவரம் குறித்து அனைத்து ஊடகங்களிலும் பார்த்து அலுத்து போயிருப்பீர்கள், எனவே அது குறித்து எதுவும் வெளியடப்போவதில்லை, எனினும் ஆம்ஆத்மி கட்சியின் வெற்றி மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று. பார்ப்போம் என்ன செய்ய போகிறார்கள் என்று...

​நாம் கீழே பார்ப்பது இப்பொழுதைய மாநிலங்களின் ஆட்சி நிலவரம் மற்றும் எம்பி சீட்டுகளின் எண்ணிக்கை ஆகும். ​காங்கிரசு மற்றும் அதன் கூட்டணிகள் ஆளும் 13 மாநிலங்களில் 184 எம்பி சீட்டுகளும், பாஜக + கூட்டணி ஆளும் 7 மாநிலங்களில் 120 எம்பி சீட்டுகளும், மற்ற கட்சி ஆளும் 9 மாநிலங்களில் 224 எம்பி சீட்டுகளும் உள்ளது.


 
  
 இதனை எவ்வாறு பாஜகவும், மோடியும் சமாளிக்கப்போகிறார்கள் என்பதனை பொறுத்து ஆட்சி மாற்றம் நடக்கும்,  இந்த தகவல்களை வைத்து நாம் முடிவு செய்வோமேயானால் மூன்றாம் கூட்டணியின் கையே ஒங்கி இருக்கிறது. ஆயினும் அவர்களுக்கிடையே ஒற்றுமை அவ்வளவு எளிதில் வராது என்பதினாலும், காங்கிரசும் பாஜகவும் அவ்வளவு எளிதில்  தங்களது வாய்ப்பினை விட்டுவிடமாட்டார்கள் என்பதினாலும் பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று...

​மகாராஷ்டிராவில் ஐந்தாவது புலிகள் சரணாலயம் அமையவிருக்கிறது. 

ஓரு நாட்டின் வளர்ச்சி பொருளாதாரத்தினை வைத்து மட்டும் மதிப்பீடுவதில்லை; சமூக பொருளாதார மற்றும் சூழலியல் காரணிகள் பெரும்பங்கு வகிக்கும் என்பதினால் இது முக்கியத்தும் வாய்ந்த அறிவிப்பு ஆகும். ஏற்கனவே அங்கு 4 புலிகள் சரணாலயம் மெல்காட், தடோபா, பீஞ்ச், சாகியத்ரி ஆகிய இடங்களில் உள்ளது. ஐந்தாவது சரணாலயம் நாகசீராவில் அமையவிருக்கிறது. இதன்  தற்போதய பரப்பு 130 சகிமீலிருந்து 700சகிமீ வரை அதிகரிக்கப்படுவதால் வனத்தின் பரப்பும் அதிகரிக்கவிருக்கிருது.  மேலும் இங்கு 100 புலிகள் வரை இருக்கலாம் என மதிப்பீடு செய்யப்படுகிறது.

         

இ​ந்தியா முழுக்க 53 புலிகள்  சரணாலயங்களும் 1800 சொச்சம் புலிகள் இருக்கலாம் என 2011 புலிகள் கணக்கெடுப்பு கூறுகின்றது. தமிழகத்தில் 4 புலிகள் சரணாலயங்கள் உள்ளது, களக்காடு, முதுமலை, ஆனைமலை, சத்தியமங்களம் ஆகிய இடங்களில் உள்ளது.

NATGRID:

26/11 ​மும்பை  தாக்குதலுக்கு பிறகு முந்தைய UPA1-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் இன்னும் 4 மாதங்களுக்குள் முதற்கட்டமாக பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018முதல் முழுமையாக செயல்படத் தொடங்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் குடிமக்களின் 21 வகையான தரவுத்தளத்தின் (DATABASE) தகவல்கள் ஓரே இடத்தில் ரா போன்ற 11 வகையான இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அமைப்புகளால் நிர்வகிக்கபடபோகிறது. இந்திய குடிமகனின் பாஸ்போர்ட், வங்கி தகவல்கள், தேர்தல்ஆணையத்தின் தகவல்கள், வாகன பதிவு தகவல்கள், தொலைபேசி தகவல்கள், ரயில் பதிவு தகவல்கள், வருமான வரி தாக்கல் போன்ற 21 வகையான தகவல்கள் இணைக்கப்படுகிறது. இது உள்துறை அமைச்சக்த்தின் கீழ் வருகின்றது. 1200 கோடி மூதலீடு இந்த திட்டத்திற்காக போடப்பட்டுள்ளது.  


தனி நபரின் தகவல்கள் என்பது சுதந்திர உரிமையின் கிழ் வரும், ஆயினும் நாட்டின் பாதுகாப்பு என்ற காரணத்தை மேற்கோள் காட்டி இந்திய அரசியலைமைப்பு தந்த சுதந்திரம் என்ற உரிமையை இந்த திட்டம் பறிக்கப்போகிறது என்பது  மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக