இரண்டொரு நாட்களுக்கு முன்பு அரசாங்கம் நிறைவேற்றிய லோக்பாலுக்கும், அன்னா
ஹசாரே அவர்களால் நிர்பந்திக்கப்பட்ட ஜன்லோக்பாலுக்கும் உள்ள வித்தியாசங்கள் பின்வரும்
படத்தில் ஆங்கிலத்தில் உள்ளது. நேரம் கிடைத்தால் மொழிப்பெயர்ப்பில் வரும். நண்பர்கள்
யாராவது உதவி புரியலாம் தமிழில் மொழிமாற்றம் செய்ய...
அன்னா மட்டும் இல்லையெனில் இந்த
சட்டம் நம் ஆயுளுக்கும் பரண் மேலே இருந்திருக்கும்.
டெல்லியில் ஆம்ஆத்மியின் வெற்றியும் இந்த சட்டம் அவசரம் அவசரமாக நிறைவேறுவதற்கு காரணம்
என்பேன்.
யார் என்ன கூறினார்கள் லோக்பால்
சட்டத்தின் அரங்கேற்றத்தின்போது.
காங்கிரஸ்:
ராகுல்; லோக்பால் மட்டும் போதாது
ஊழலை ஒழிப்பதற்கு என்றார்.
Question கோயிந்து: அது சரி
உருவாக்கின உங்களுக்கு தெரியாதா என்ன? எங்கிட்டு ஒட்ட இருக்கு அந்த சட்டத்திலேனு...
பாஜக :
பாஜகவின் தலைவரான சுஸ்மா சுவராஜ்
அவர்கள் இந்த சட்டம் நிறைவேற முக்கிய காரணியாக திகழ்ந்தவர் அன்னா ஹசாரே எனப் புகழாரம்
சூட்டினார்.
Question கோயிந்து: இல்லைனா கெஜ்ரிவாலுக்கு
புகழ் போயிருமோனு பயமோ...
சமாஜ்வாடி
சமாஜ்வாடி மட்டும் இந்த சட்டத்தினை
வெளிப்படையாக எதிர்த்தது.
Question கோயிந்து: அப்புறம் அதுவந்தா நாமதான்னே முதல்ல
உள்ளே போகனும்னு இந்த கிறுக்கு புடிச்ச காங்கிரஸ்காரனுக்கோ, பாஜகவோக்கு புரியவே மாட்டேங்குது..
கெஜ்ரிவால்
கெஜ்ரிவால் லோக்பாலால் எலியை கூட
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யமுடியாது என்கிறார்.
Question கோயிந்து: அன்னாவோ இந்த அளவிற்காவது அரசாங்கம்
இறங்கி வந்ததே என உண்ணாவிரதத்தினை கைவிட்டார், இல்லைனா இந்த பயபுள்ளங்க நம்மள மேல அனுப்பாம
விடமாட்டாங்கனு புரிஞ்சுட்டாரோ என்னமோ ஹீஹீ சும்மா லூல்லாய்க்குதான்...





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக