சனி, 14 டிசம்பர், 2013

டெல்லியின் அரசியல் நிலவரம் அரசியல்வாதிகளூக்கு பாடமாகுமா?

அரசியலில் களம் மாறுகின்றது.  அன்னிய  நேரடி முதலீடு போன்ற வெகுஜனங்களை பாதிக்ககூடிய திட்டங்கள் பாரளுமன்றத்தினுள்ளே விவாதிப்பதை விட பாமரனிடத்திலே விவாதிக்கலாம். சாமானியனின் குரலும் அரங்கேறுவதே சனநாயகம். பிரதிநிதித்துவம் இல்லாமல் அனைவரும் பேசுவது நாடாளுமன்றத்தினை சந்தைக்களம் ஆக்கும் என்பது இனியும் கதைக்குதவாது; இன்றை அறிவியல் வளர்ச்சியில் அனைத்தும் சாத்தியமே, ஓட்டெடுப்பு நடத்தலாம் என்பது போன்ற எவ்வளவோ வழிமுறைகள் உள்ளது.   
  

கெஜ்ரிவால் புயல்:

முடியாது என்றிருந்துவிட்டால் முடிவுகள் நமக்கு எதிரானதாகவே இருக்குமென்பேன். கெஜ்ரிவாலிடம் ஒன்பது மாதத்திற்கு முன்பு கபில்சிபில், சிதம்பரம், சல்மான் குர்சித் போன்ற மெத்த படித்த மேதாவிகள் வெளியே இருந்து  குரல் கொடுப்பது எளிது உள்ளே வந்து பாருங்க, முதல்வர் படத்தில் வருகின்ற சீன் மாதிரி இந்த சீட்ல ஒரே ஒரு நாள் உட்கார்து பார்; எவ்வளவு கஷ்டம் என்று புரியும் என்று ஏகடியம் பேசியதினால் பிறந்ததே ஆம்ஆத்மி கட்சி. அதுவும் ஆம்ஆத்மி என்பது 2004ல் காங்கிரசின்  தேர்தல் கோஷம் :) தொடர்ச்சியாக ஆண்டதினாலோ என்னவோ அவர்களுக்கு அரியணை என்பது அவர்கள் அப்பன் வீட்டு சொத்து என்கிற எண்ணம்...

கெஜ்ரிவால் கூடவே இருந்த அன்னா பின்வாங்கிய பிறகும் சலிக்காமல் களத்தில் இறங்கினார் ;  ஊழல் என்ற பாஜகவின் பிரச்சார பீரங்கியை அவர்களிடத்தும், மதவாதம் எனும் பிரச்சார பீரங்கியை காங்கிரசிடமிருந்தும், நக்சல் எனும் பிரச்சார பீரங்கியை கம்யூனிஸ்டுகளிடம் இருந்து பிடிங்கினார்; சளைக்காமல் களத்திலிருந்தாரே ஒழிய மேடையில் அல்ல... வெற்றி அவரது பக்கம் வந்தது. 

ஹர்ஷவர்த்தனோ சத்தமில்லாமல் சாதித்துக்காட்டியவர்:

​பின்பு பாஜக சுதாரித்ததோ இல்லை மோடி சுதாரித்தாரோ தெரியவில்லை ஏறக்குறைய கெஜ்ரிவாலை போன்ற பாஜகவின் தலைவரான திரு.ஹர்ஷவர்த்தரை முதல்வராக நிறுத்தி கப்பலில் விழும் ஓட்டையினை அவசர அவசரமாக தடுத்தது.  ஹர்ஷ்வர்த்தரும் கெஜ்ரிவாலை போன்று வெகுகாலம் சத்தமில்லாமல் மக்களிடத்திலே சேவகம் புரிந்தவர்; மேலும் அவர் ஆட்சியிலும் இருந்தார்; 15வருடத்திற்கு முன்பு டெல்லியில் சுகாதார அமைச்சர், அவரது சாதனைகள் பல டெல்லியினை போலியாவிலிருந்து மீட்டெடுத்தார், அவரே இந்தியா முழுக்க போலியாவினை ஒழிக்க வேண்டுமென்பதெற்கு தூண்டு கோளாயிருந்தார். ஊழல் செய்ய வழியிருந்தும் செய்யவில்லை, நிர்வாகத்திறனும் சோடை போகவில்லை, கெஜ்ரிவால் இது வரை பேசிக்கொண்டுதான் இருக்கிறார்; மேலும் அவரை சுற்றி சர்ச்சைகள் பலப்பல உண்டு; ஆனால் ஹர்ஷவர்த்தனோ சத்தமில்லாமல் சாதித்துக்காட்டியவரும் கூட என்பதினால் மக்கள் பாஜகவினை முதலிடத்தில் தேர்ந்தெடுத்தனர். இல்லாவிடில் கெஜ்ரிவால் என்ற புயலில் பாஜகவும் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும், அந்த வழியில் இது புதிய அரசியல் மாற்றம். இதுவே நாம் வேண்டுவதும் கூட...  



அரசியலில் புது ரத்தம்: 

கெஜ்ரிவாலின் சில திட்டங்கள் நடைமுறைக்கு வருவது சாத்தியமா, மேலும் போலி மதவாதம், நக்சல் பிரச்சினைகள் என பல பின்னடைவுகள் அவரிடமும் உள்ளது என சில பேர் சொல்வதை நான் ஏற்கின்றேன். அவர் ஓன்றும் விடிவெள்ளி அல்ல மாற்றத்தினை தனி ஒரே நபராக கொண்டுவர; மாற்றம் நம்மிடம் இருந்தே ஆரம்பிக்கின்றது, இருப்பினும் அவரது வெற்றியின் பலம் மூலமே சாமன்யனுக்கும் ஆள்வோர் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அரிய அரசியல் மாற்றம். இதனை கெஜ்ரிவால் வெற்றிகரமாக மாற்றுவது என்பது அவரது தனிப்பட்ட வெற்றியாக நான் கருதவில்லை அது நமது வெற்றியும் ஆகும்.   

ஆம்ஆத்மியின் தாக்கம் பெரிது எனினும், காங்கிரசு மீடியாக்களினால் அது கெஜ்ரிவால் புயலாக காட்டப்ப்டுகின்றது என்பேன்.  ஹர்ஷவர்த்தனின் சாதனைகளை அது மூடி மோடியிடமிருந்து ராகுல் காந்தியினை அப்புறப்படுத்த கேடயமாக கெஜ்ரிவாலை நிறுத்தவே பர்க்காக்களூம், கோசுவாமிகளூம், சர்தேசாய்களும் மூச்சு விடமால் பேசுவதாக நினைக்கின்றேன்.

ஆம்ஆத்மியின் வெற்றி இல்லாவிடில் டெல்லியில் குதிரை பேரம் மூலம் இதற்குள் பாஜக அரியணை ஏறியிருக்கும். பாஜக அப்படிபட்டது இல்லை என்பவர்க்கு எனது பதில் ஜார்கண்டில் என்ன பண்ணுகிறார்கள் என்பதனை பாருங்கள் என்பேன். மத்திய தேர்தலில் நாம் இந்த முறை மோடியை ஆதரிக்கிறோம் பாஜவினையும்தான், ஏனெனில் கெஜ்ரிவாலுக்கு வாக்களிப்பது விரலுக்கு இழைத்த நீர் அவரால் அடுத்த ஐந்து மாதங்களூக்குள் நாடு முழுதும் ஊடுருவது என்பது இயலாத காரியம்; மேலும் காங்கிரசினை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதல்ல எமது நோக்கம்; காங்கிரசு அடுத்த ஐந்து வருடங்களில் தனது தவறை உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டுமென்பதற்க்காகத்தான் இந்த இடைவெளி. 

மேலும் பாஜகவினை  இப்பொழுது ஆதரிப்பது என்பது அங்கு ஓரே குடும்பத்தினரின் செல்வாக்கு இல்லை, அங்கு திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் தலைவனாகலாம். டெல்லியில் ஹர்ஷ்வர்த்தன் என்ற டாக்டர் முதல்வர் வேட்பாளர், ராஜஸ்தானில் ஏற்கனவே ஒரு முறை ஆண்ட அரசபரம்பரையை சார்ந்த வசுந்தரா முதல்வர், மத்தியபிரதேசத்தில் சாமன்யர்களின் மனம் கவர்ந்த, முதுகலை பட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற சிவராஜ்சிங்சவுகான் முதல்வர், சத்திஷ்கரில் டாக்டரான ராமன் சிங்க் முதல்வர், கோவாவில் ஐஐடி பட்டதாரியான மனோகர் பாரிக்கர் முதல்வர் என இங்கு குப்பனும் சுப்பனும் தகுதியிருந்தால் மேலே வரலாம். பாஜக இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அரசியலை மாற்றிக்கொண்டியிருக்க கெஜ்ரிவாலின் தாக்கத்தினால் மொத்தத்தையும் புரட்டி போட்டே ஆகவேண்டும். இது மாற்றமில்லையா!

நாம்தான் நம் சூழ்நிலைகளூக்கு காரணம்:

இ​ரண்டொரு நாட்களுக்கு முன்பு ஒரு நண்பரிடத்தில் பேசிக்கொண்டிருந்தேன், எப்புடி என் நிலைத்தகவலை பார்க்கவில்லையா தலைவரோட படம் போட்டிருக்கின்றேன் என்றார், யாரை அவர் பகிர நினைக்கிறார் என்பது அவரது உரிமை அதில் நான் தலையிடவில்லை; அது எனக்கு தேவையுமில்லை அதே தேடலை அவர் தன்னை ஆளப்போகும் தலைவர்களிடம் வைத்திருக்கிறாரா என்று பார்த்தால் ஐய்ய அரசியல் நமக்கு வராதுப்பா; எல்லா பயலுகள்ளும் திருடனுங்க என்றார். நான் ஒரு வேலை செய்கின்றேன் அதன் விளைவுகளுக்கு நான்தானே பொறுப்பு. நான்தான் அவர்களை தேர்ந்தெடுத்தேன் பின்பு அவர்கள் சரியில்லையெனில் அதற்க்கும் நான்தானே பொறுப்பு.. பின்பு ஏன் ஆள்பவர்கள் ஊழல் செய்கிறார்கள் என்று புலம்பவேண்டும்; மேலும் இப்பலாம் நோடோ(NOTA; NONE OF THE ABOVE) இருக்கு அதனால் பிடிக்கவில்லையென்றாலும் அந்த வசதியினை பயன்படுத்தி அரசியல்வாதிகளுக்கு பயம் ஏற்படுத்தலாம் என்பேன். 

அரசியல்வாதிகளின் நிர்பந்தங்களூம்:

இன்றைய பிரதிநிதிகளின் லட்சனங்கள் ஒரு முறை அல்ல ஒராயிரம் முறை சந்தி சிரித்தாகிவிட்டது. சமீபத்தில் கூட இல்லாத நிறுவனத்துக்கு ஆதரவு கொடுக்க லஞ்சம் வாங்கியதின் மூலம், இந்த கட்சி அந்த கட்சி, ஆண்ட கட்சி, ஆளப்போகும் கட்சி எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகினர். 

அரசியல் என்பது மிகப்பெரும் சுமை அவர்களது கஷ்டம் ஆள்வோர்க்கே புரியும். சும்மா இருக்காம இங்க ஊரிலே கோவில் கொடைவிழா என்று பெரிசுகள் ஒருபுறம், கிரிக்கெட் போட்டி என்று இளசுகள் ஒருபுறம் அதற்கு நன்கொடை கொடுங்கள் என்று எம்ல்ஏக்களிடத்தில் நன்கொடை புத்தகத்தினை நீங்கள் நீட்டுகிறீர்கள், அவர்கள் அப்புறம் எப்படிப்பா அந்த காசினை எடுப்பது; ரோடு போட சொல்லி மேலும் நமது பொது நலம் சம்பந்தபட்ட பிரச்சினைகளுக்கு குரல் கொடுங்கள் என்று வேண்டுமேயானால் நாம் ஆள்வோரை வேண்டலாம் அதைவிட்டு அவர்களை நாம் பணம் காய்ச்சும் மரமாக பார்த்தால் இப்படித்தான் அவர்களூம் புடுங்குவார்கள், அ​தனால் அவங்களையும் குறை சொல்லி பிரயோஜனம் இல்லையென்பேன். 

இ​து சரியில்லை அது சரியில்லை என்றால் இங்கு எல்லோரையுமே மாற்ற வேண்டியிருக்கும் என்னையும் இதை படித்துக்கொண்டிருக்கும் உங்களிடத்தும் தவறுகள் உள்ளது, ஆகவே நாம் எல்லாவற்றினையையும் ஒரேடியாக தூர எறிந்து விட முடியாது.  எப்படி இருப்பவற்றை மேம்படுத்துவது என்று முதலில் பார்ப்போம்; அது முடியாத பொழுது கெஜ்ரிவால் போன்ற புதிய சிந்தனைகள் கொண்ட தலைவர்களை சேவை செய்ய தேர்ந்தெடுப்போமே ஒழிய ஆராதனை செய்ய அல்ல. 

ஏனெனில் ஆள்வோர் சரியாக இருக்கும் பட்சத்தில் நாம் நமது வேலையை பார்த்துக்கொண்டு போய்விடலாம். காங்கிரசோ, பாஜகவோ, கெஜ்ரிவாலோ ஆண்டுவிட்டு போகட்டும் ஆனால் சாமன்யர்களுக்கனதாக அந்த ஆட்சி இருக்கவேண்டுமே ஒழிய அம்பானிகளூக்கோ, டாடா பிர்லாக்கள் லாபம் சம்பாதிக்க வழி வகுத்தால் கெஜ்ரிவால் போன்று எ​ண்ணற்ற இளைஞர்கள் இருக்கிறார்கள் களம் இறங்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக