பின்வரும் சந்தேகங்கள் குற்றம்
சாட்டப்பட்டவர் மேலே எழும்பொழுது அமெரிக்க
சட்டம் தூகிலுரிக்க அனுமதிக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் தற்கொலை
செய்து கொள்ளலாம் என்ற சந்தேகம் எழும் போது;
தீவிர கிரிமினல் குற்றச்சாட்டுக்களின்
போது, போதை பொருள் குற்றச்சாட்டுக்களின்
போது;
குற்றம்சாட்டப்பட்டவர் தடை செய்யப்பட்ட பொருளையோ அல்லது
ஆயுதம் வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழும் போது;
குற்றம்சாட்டப்பட்டவரின் பிண்ணனியும்
காரணமாக இருக்கலாம்;
குற்றம்சாட்டப்பட்டவரின் கைது
சூழ்நிலைகளூம் காரணமாக இருக்கலாம்;
குற்றம்சாட்டப்பட்டவரின் தோற்றம்
மற்றும் நடத்தை காரணமாக இருக்கலாம்;
குற்றம்சாட்டப்பட்டவரின் கைதுக்கு
காரணம் மிக மோசமானதாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்க சட்டம் தூகிலுரிப்பதை அனுமதிக்கிறது.
நிர்வாணப்படுத்தி பார்வையிடுவதோடு மட்டுமின்றி தேவைப்படும் பட்சத்தில் உடலின் அந்தரங்க பகுதிகளான காது, நாக்கு, வாய், பாலுறுப்புகளின் உட்புறத்தினை விரலாலோ, ஓடோஸ்கோப் கொண்டோ சோதனையிடுவர்.
பச்சபுள்ள மன்னாரு: நான் நீங்க எதுன்னா இந்திய துணைத்தூதர் கைது பற்றி சொல்லுவீங்கனு பார்த்தேன்...
குறிஞ்சி: இதில் என்னமோ அரசியல் மாயமாலம் இருப்பதாகவே படுகின்றது. ஐயா அப்துல்கலாம் அவர்களை சோதனையிடும் போது வராத கோவம் இப்பொழுது மட்டும் பொங்கிபிரவாகம் எடுப்பதில் என்னமோ மர்மம் இருக்குது, இல்லைனா மணிமேகலைக்கு அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய வாரண்டு காரணமோ என்னமோ..
ஏற்கனவே முகப்பக்கத்தில் இது பற்றி நாம் பதிவிட்டது. தவறவிட்டிருந்தால் மீண்டும் பாருங்கள்:
பொறுப்பற்ற அமெரிக்காவும், மிகையாய் நடிக்கும் இந்தியாவும்
-------------------------------------------
தேவயானி என்கிற ஒரு அமெரிக்காவுக்கான இந்திய தூதரகத்தின் ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டதும் அதற்காக இந்தியா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளும் நாடு முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன.
யார் செய்தது தப்பு என்று இரு நாடும் அடித்துக்கொள்ளும் வேளையில் இடையில் தவறு செய்த அந்த பெண் அதிகாரி நல்லவராக்கப்படுகிறார் என்பதுதான் வெட்கக்கேடு.
அந்தப்பெண் அதிகாரி செய்த தவறுக்கு கைது செய்தவரை சரி. ஆனால் அவர் மகனின் பள்ளி வாசலில் கைவிலங்கு பூட்டியதும், அதன் பின் அவருக்கு நடந்த அவமானங்களும் தவறானவையே. இதை இந்தியா கண்டிப்பதும் சரிதான். ஆனால், தவறே செய்யாத ஒருவரை தண்டித்துவிட்டது போல இந்திய அரசு ஏன் குதிக்கிறது என்றுதான் புரியவில்லை. விசாவின் காரணமாக போலியாக ஒரு சம்பளத்தை அமெரிக்க அரசாங்கத்திற்கு காட்டிவிட்டு உண்மையில் தன் பணிப்பெண்ணுக்கு குறைவான சம்பளமே கொடுத்தார் என்பது குற்றச்சாட்டு. அவர் மீது எழுந்துள்ள புகாருக்காக அவரை பணிநீக்கம் செய்துவிட்டு, பின் அமெரிக்காவின் அசிங்கமான கைது நடவடிக்கைக்காக கண்டனமும் தெரிவித்துவிட்டு - அமெரிக்க காவல்துறையினரால் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டின் சட்டதிட்டத்திற்கேற்ப அந்த வழக்கை கையாளுமாறு அந்தப்பெண்ணை பணிப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருந்திருக்கக்கூடும்.
அதை விட்டுவிட்டு இங்கேயுள்ள தூதரகத்திற்கு மிரட்டல்கள் விடுத்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. நாளை ஒரு தூதுவர் அல்லது தூதரக அதிகாரி கொலை செய்துவிட்டால் கூட இப்படித்தான் நடக்குமா? அப்படியென்றால் இத்தாலி மாலுமிகள் விஷயத்தில்(ஒன்றிரண்டு அடிவாங்கினாலும்) தன்னை வீம்பாகக் காட்டிக்கொண்டது ஏன்? இங்கு பலரும் அமெரிக்காவின் மீது கோபம் கொள்கிறார்கள். புகார் கொடுத்தவர் இந்திய பணிப்பெண். அதாவது அங்கு நடந்தது ஒரு அதிகாரவர்க்கத்தின் உழைப்புச் சுரண்டல். நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எவ்வாறு இப்படி அந்த அதிகாரிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
அடுத்து, அமெரிக்காவுக்கு ஒரு தூதரக அதிகாரியை அப்படி நடத்த எப்படி துணிச்சல் வந்தது? கண்டிப்பாக உயரதிகாரிகளின் அனுமதியின்றி ஒரு தூதரக அதிகாரியை கைது செய்திருக்கமாட்டார்கள். அப்படியெனில் ஏன் இப்படி நடந்தது? இந்தியா சோப்ளாங்கி. இலங்கை, பாகிஸ்தான், சீனா, மியான்மர் என எல்லா பக்கத்திலும் அடிவாங்கியும் அசடுபோல் சிரித்துக்கொண்டு நிற்கும் இந்தியாவிலிருந்து யாரும் எதுவும் வாயைத்திறக்கமாட்டார்கள் என்கிற தைரியமா? யோசித்துப்பார்த்தால் நம்மீதுதான் கோபம் வருகிறது.
விஷயம் என்னவாக இருந்தாலும் உள்நாட்டில் பல விதத்திலும் அடிவாங்கிய மத்திய அரசு ஏதொவொரு திசைதிருப்புதலுக்காகவே இப்படி அனாவசியமாக சத்தமிடுவதுபோல் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக