புதன், 11 டிசம்பர், 2013

குருஷேத்திரம்

ராஜநீதி எனும் களத்தில் மிகத்துல்லியமாக காய் நகர்த்த  தர்மம் எனும் வித்தை மட்டுமின்றி, அதர்மம் எனும் கூடு விட்டு கூடு பாயும் மாயக்கலையையும் அறிய வேண்டும். அதில்லாவிடில் அக்களத்திலேயே புதைக்கப்படுவோம். மஹாபாரதத்தில் சகுனி அவ்விரு கலையையும் அறிந்திருந்தாலும் கிருஷ்ணபரமாத்மா அதை செவ்வனே அறிந்தவராதலால் முடிவில் செயம் அவரிடத்தில் வந்தது. 


சமீபகாலத்தில் ஆளூம் கட்சி அதே போன்ற காய் நகர்த்தல்களை தந்திரோதயமாக செய்து வருகின்றது. அதன் தாக்கம் கெஜ்ரிவாலை மோடி எனும் அற்புத வாளூக்கு முன் கேடயமாக நிறுத்த முயற்சி செய்து வருகிறது... 

​கெஜ்ரிவால் டெல்லியோடு மட்டும் நிற்காமல் மும்பை, ஹரியானாவிலும் நின்றால் பாஜகவின் வாக்குவங்கி பதம் பார்க்கப்படலாம்.தோராயமாக 25 தொகுதிகளில் வாக்குகள் பங்கு பிரிக்கப்படும். இந்த 25 தொகுதிகளூம் பெரும்பாலும் பாஜகவினையே சாரும் தேர்தலில். 

இ​னி என்ஜிஓக்கள் மூலம் கெஜ்ரிவாலுக்கு வரும் பணபலம் ஆளூம் கட்சியினால் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். இதுவரை விதூசகனாக ஊடகங்களில் காட்டப்பட்ட கெஜ்ரிவால் கதாநாயகனாக உயர்த்தப்படுவார்.  

​நாங்கள் கெஜ்ரிவால் முன்னிருத்தும் அரசியலையே எப்பொழுதும் ஆதரிக்கிறோம், ஆயினும் 2014ல் அல்ல இந்த முறை களம் மோடிக்குரியது. நிச்சயம் வரும்காலத்தில் கெஜ்ரிவால் முன்னிருத்தும் அரசியலையே ராஜநீதியாக குறிஞ்சியும் முன்னெடுக்கும்.


இ​ங்கு நாம் யாரையும் சகுனியோடும் ஓப்பிடவில்லை, கிருஷ்ணபரமாத்வோடும் ஓப்பிடவில்லை.

நாங்கள் மகாபாரதப்போரில் துரியோதனன் பக்க நியாத்தினையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. துரியோதனனுக்கு அரியணை வேண்டும்; அதற்கு தடையாக இருந்த ஐவர் மற்றும் அவர் தம் துணைவர் பகைவராயினர்; மற்றவர்களிடத்தில் அவரது நடத்தை நல்நடத்தையே ஆகும்; கர்ணன்தான் அனைவருக்கும் மூத்தவர் என்று துரியோதனன் அறிந்து இரூப்பின் பாரதப்போரே நடந்து இருக்காது. இப்பொழுது காட்டப்படும் நாடகங்களில் வேண்டுமாயின் வாதபலத்துக்கு துரியோதனது நடத்தையினை முன்கோபியாக மிகைப்படுத்தப்படுகின்றது.

பச்சபுள்ள மன்னாரு:
 அப்படின்னா 2014தேர்தலில் இங்கு யாரு அர்ஜீனன், துரியோதனன், கர்ணன், பீமன், சகுனி, பீஷ்மர், பரமாத்மா? ஒன்னுமே புரியல உலகத்தில



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக