வெள்ளி, 27 டிசம்பர், 2013

தமிழ்பிரபாகரன் கைதும், தமிழக ஊடகங்களின் கள்ள மவுனமும்


 விகடனின் முன்னாள் மாணவப் பத்திரிக்கையாளரும், ஜூனியர் விகடனில் 'புலித்தடம் தேடி' என்னும் போருக்குப்பிந்தைய ஈழம் பற்றிய தொடர் எழுதியவருமான 22 வயது இளம் தமிழக பத்திரிக்கையாளர் ம.கா.தமிழ் பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு 'சித்திரவதைக்கூடம்' என்று பெயர் பெற்ற இலங்கையின் தீவிரவாதக் குற்றத் தடுப்பு மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.


  ஆனால், இந்த செய்தி ஃபேஸ்புக் பதிவாளர்கள் வழியாகவே பரவிக்கொண்டிருக்கிறதே தவிர எந்தவொரு பெரிய ஊடகமும் - ஏன், 'எங்கள் மாணவர்' 'எங்கள் மாணவர்' என்று புகழ்பெற்ற மனிதர்களைக் கொண்டாடும் - விகடனும் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றனர். அரசியல்வாதிகளும் அப்படியே. ஏன் இந்த திருட்டு மவுனம்? ஏதாவது காசு வருவது நின்றுவிடுமா? 




    அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பணியாளையும், அமெரிக்க அரசாங்கத்தையும் ஏமாற்றிய 'ஆதர்ஷ் ஊழல்' புகழ் தேவயானியை கைது செய்ததும் சிலிர்த்து எழுந்த இந்திய அரசு ஒரு நேர்மையான பத்திரிக்கையாளரான, அதுவும் தமிழனான இவர் கைதுக்கு ஒரு மயிரையும் பிடுங்காது என்று தெரிந்தும் மனம் பதறுகிறது. 

   தன்னை ஒரு Independent Journalist என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் தமிழ் பிரபாகரன் என்ன காரணத்துக்காக இலங்கை சென்றார் என்பது தெரியவில்லை. 

    "....விகடன் குழும இதழ்களுக்காக அவ்வப்போது கட்டுரைகளை எழுதிக் கொடுத்து வந்துள்ளார் தமிழ்ப் பிரபாகரன்.  இப்படியே சென்று கொண்டிருந்தபோதுதான், ஒரு நாள் திடீரென்று நான் இலங்கை செல்லப்போகிறேன்...  தற்போது தமிழ் மக்கள் என்ன நிலையில் உள்ளார்கள் என்பதை கண்டறிந்து மீண்டும் ஒரு கட்டுரை எழுதப்போகிறேன் என்று தன் நண்பர்களிடம் கூறி, அதற்கான பொருளாதார உதவிகளைச் செய்யுமாறு கேட்டுள்ளார்.  ஆனால் பெரும்பாலான நண்பர்கள், அந்த முயற்சி ஆபத்தானது, அதனால், அதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, பொருளாதார உதவியும் செய்ய முடியாது என்று தெரிவித்து விட்டனர்.இதற்குப் பிறகு எங்கிருந்தோ பொருளாதார உதவி பெற்று, யாரிடமும் சொல்லாமல், திடீரென்று கிளம்பி இலங்கை சென்றுள்ளார். இலங்கை சென்றவர், இலங்கையில் எதிர்க்கட்சி எம்.பியான ஸ்ரீதரன் உதவியோடு தமிழர் பகுதிகளை சுற்றிப் பார்த்துள்ளார்.  இலங்கை எம்.பி ஸ்ரீதரனின் பேட்டியையும் எடுத்துள்ளார் பிரபாகரன்.  பேட்டி எடுத்ததோடு தமிழர்ப் பகுதிகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, கிளிநொச்சி மாகாணம், கிராஞ்சி என்ற இடத்தில், இலங்கை ராணுவத்தினரால் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபாகரன் கைது செய்யப்பட்ட தகவல், இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் மூலமாக வெளியுலகிற்கு எடுத்துச் செல்லப்பட்டது..." (நன்றி: சவுக்கு தளம்)

   நம்மால் இப்பாது முடிந்தது இந்த செய்தியை இணையதளத்தில் பெரிய அளவில் பரப்பி தமிழ் பெரு ஊடகங்களில் இந்த செய்தி வருமாறு நெருக்குவது; நமக்கு கிடைக்கும் இந்திய வெளியுறவுத்துறை, சர்வதேச ஊடகங்கள் போன்றவற்றின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு இந்த விஷயத்தை அனுப்புவது.

  கீழே உள்ளது இந்திய வெளியறவுத்துறையின் மின்னஞ்சல் முகவரிகள்(நன்றி: கார்ட்டூனிஸ்ட் பாலா). இதைப் பார்க்கும் அனைவரும் தயவுசெய்து மின்னஞ்சல் செய்யவும். நம்மால் தெருவில் இறங்கிப் போராடமுடியாது. நமக்குக் கிடைத்துள்ள பெரும் ஆயுதமான இணையத்தை வைத்து தமிழனுக்காக, உரிமைக்காக போராடுவோம். வீண் விவாதங்கள் நேரவிரயம். நன்றி.

நண்பர்கள் கீழ்கண்ட மெயில் ஐடிகளுக்கு இந்த கடிதத்தை உங்கள் மெயிலில் இருந்து அனுப்பவும்..

<eam@mea.gov.in>
<dirfs@mea.gov.in>,
<psfs@mea.gov.in>,


To: 
Hon`ble,
Salman Khurshid,
External Affairs Minister,
Govt.of India, New Delhi

Sir,

We urge you to intervene and insist Govt of Sri lanka to release the Journalist from Indian Media, Mr. Maka. Tamiz Pirabakaran, who has been detained at Lanka by military forces. Further his safety should be assured.
Regards,
---------
-----------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக