இந்திய
மக்கள் தொகையில் ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கு 98 ஏடிஎம்களே உள்ளது. இது குறைவான ஊடுருவலையே கொண்டுள்ளது மற்ற வளர்ந்த
மற்றும் வளரும் நாடுகளை பொருத்தவரையில், ஆம் 10லட்சம் பேருக்கு சீனாவின் ஏடிஎம்
அடர்த்தி 211 ஆகும்; பிரிட்டனில், இது 530 ஆகும்; மற்றும் ஐக்கிய அமெரிக்காவில்
இது 1.390 ஆகும்.
அமெரிக்க ஏடிஎம்களில்
கிட்டத்தட்ட 50% மற்றும் கனடாவில் 70% வெள்ளை லேபிள் ஏடிஎம்களாக உள்ளது.
இந்தியாவை பொருத்தவரையில்
10லட்சம் பேருக்கு மகாராஷ்டிராவில் 141, மேற்கு வங்கத்தில் 71, தமிழ் நாட்டில் 180
எடிம்கள் உள்ளது. இந்தியாவில் சண்டிகரில்தான் ஒவ்வொரு 10 லட்சம்
மக்களுக்கும் 400 இயந்திரங்கள் அதாவது அதிக ஏடிஎம் அடர்த்தியானது உள்ளது.
15,000 இயந்திரங்கள் மூலம் மகாராஷ்டிரா மாநிலமானது ஏடிஎம் இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ளது. ஸ்டேட்ஸ் பாங்க் ஆப் இந்தியா வங்கியானது அதிக அளவிலான ஏடிஎம்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
அதென்னங்க வெள்ளை லேபிள்
ஏடிஎம்?
பொதுவாக ஏடிஎம் ஆனது வங்கிகளாலேய நிறுவப்படுகின்றது. இந்தியா போன்ற நாடுகளில் ஏடிஎம்
சாதனத்தின் தேவை அதிகம் இருப்பதால் ரிசர்வ் வங்கியானது மறற நிறுவனங்கள் அதாவது
வங்கி சாராத தொழில் நடத்தும் நிறுவனங்களையும் ஏடிஎம் நிறுவ சமீபத்தில்
அனுமதித்து. டாடா நிறுவனமானது தனது முதல் ஏடிஎம்யை இந்த திட்டத்தின் கீழே
சமிபத்தில் திறந்தது. ஆக வித்தியாசம் புரிந்ததா...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக